புதன், 18 நவம்பர், 2015

ரசவாத ரகசியம் மூலம் திருவடி ரகசியம்






 சீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றால் என்ன?

நம் தேகம் இயங்குவதற்க்கு சக்தியை கொடுப்பது பிராணவாயு ஆகும்.
பிராணவாயுவை இயக்குவது ஆளும் வல்லமையுடைய ஆன்மாவாகும்.
ஆன்மா தன்னுடன் இனைந்துள்ள மெய், வாய்,கண்,மூக்கு,செவி,ஆகிய  புலன்களின்
செயல்களினால், பிராணவாயுவை பகிர்ந்து கொடுக்கிறது.

புலன்கள் ஒவ்வொன்றும் பலவித நோக்கங்களை கொண்டுள்ளது. இந்த நோக்கங்களினால்
பலவித  சிந்தனைகளை  ஏற்படுத்தும். சிந்தனைகள் அதிகமானால் பிராணவாயுவின் தேவை
அதிகரிக்கும்.  இதனால் புலன்களுக்கு இயல்பாக தேவைப்படும ¢பிராண வாயுவைவிட அதிகமாக
புலன்கள் பிராணவாயுவை கவர்ந்து கொள்கின்றன.ஆன்மாவின் ஆளுமைக்கு தேவையான பிராண
வாயு குறைகிறது.இதனால்ஆன்மாவின் ஆற்றல் குறைகிறது.

இது எந்த வகையில் என்றால்,
கோபம் ஏற்படும்போதும், காமம் ஏற்படும் போதும், திருட்டுத்தனம்,ஏமாற்றம் செய்ய நினைக்கும்போதும், தவறு செய்ய நினைக்கும்போதும்,இதயம் வேகமாக இயங்கும். மூக்கில் சுவாசம் வேகமாக செல்லும். இதனால்பிராண வாயு அதிகமாக செலவு ஆகும்.

இதுவே பேசாமல் மௌனமாக இருக்கும் போதும், பிறர் மீது அன்பு காட்டும் போதும்.
தியானம் செய்யும் போதும், நற்ச்செயல் செய்யும்போதும், நல்ல ஒழுக்கம் உள்ளவர்களிடம்
தொடர்பு கொள்ளும் போதும், பிற உயிர்களுக்கு இறக்கம் காட்டும் போதும், சுவாசம் அமைதியாக
செல்லும். பிராணவாயு மிக குறைவாக செலவாகும். இதனால் ஆன்மாவிற்க்கு  ஆளும் தன்மை அதிகரிக்கும்.இதற்கு ஆன்ம லாபம் என்று பெயர். எண்ணங்களால் தொகுக்கப்பட்ட மனம் நீங்கி விட்டால், மண்ணும், விண்ணும் , கல்லும், காற்றும்  உலகத்தில் உள்ள எல்லாமும்  ஒன்றே.

ஒரு மகான் கூறுகிறார்.
அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணி, அரும்பசி எவர்க்கும் நீக்கி
மனத்துள்ளே பேதா பேதம் நீக்கி, வஞ்சம், பொய்,களவு,சூது,சினம்,
தவிர்த்தாயாகில் செய் தவம் வேறொன்று உண்டோ. இதுவே தவம்.

இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் புலன்களுக்கு பிராணவாயுவின் தேவை குறைந்து,ஒரு காலகட்டத்தில் பிராணவாயு உதிக்கும் இடமான ஆன்மாவிடமே தங்கி நிற்க்கும்.

சொற்பொழிவுகளாலோ,  புலமையாலோ, பலவற்றைக்கேட்பதாலோ, இந்த ஆன்மாவை அடைய இயலாது. யார் அதை அடைவதற்க்காக மன ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை அடைகிறான்.அந்த ஆன்மா அவனுக்குத் தனது சொந்த  இயல்பை வெளிப்படுத்துகிறது.

{கட உபநிடதம்... பிரித்தறிந்து வாழ், 1 : 2அத்தியாயத்தில்  சுலோகம்...23. பக்கம்76.} இராமகிருஷ்ண மடம் வெளியீடு,வருடம்2001.

இறைவனுடைய [ஆன்மா]உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக்குகையிலுள்ள ஆன்மாவால்  விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்ச்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணத்தை வென்றவர்களாக  ஆகின்றனர். 





  
மேற்ப்படி புத்தகத்தில்  பக்கம்...173. கட உபநிடதம்.சுலோகம்...9.

கட உபநிடதம்.சுலோகம்..10.அத்தியாயம்..2 ; 3 பக்கம்..174.

எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்ச்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று சொல்லப்படுகிறது.

கட உபநிடதம். சுலோகம்..11. அத்தியாயம் 2  ; 3 பக்கம்...175.

புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது.அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவன்  ஆகிறான். ஆனால் யோகநிலை வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும்  உட்பட்டது.

கட உபநிடதம். லோகம்..12.அத்தியாயம்  2 ; 3 பக்கம்...177.

வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. இருக்கிறது என்று சொல்பவனைத்தவிர  வேறு யார் அதனை அடைய முடியும்.

கட உபநிடதம். சுலோகம்..13 அத்தியாயம். 2 ;3 பக்கம்...178.
இந்த உண்மை இருக்கிறது என்று முதலில் அறிய வேண்டும். பிறகு அதன் உண்மை நிலையில்
உணர வேண்டும். இருக்கிறது என்ற நிலையில்  ஆழமாக உணரும்போது அதிலிருந்து உண்மைநிலை அனுபூதி இயல்பாக வாய்க்கிறது.

கட உபநிடதம். சுலோகம்..14.அத்தியாயம் 2 ; 3 பக்கம்....179.

மனத்தை சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும்  விலகும்  போது மனிதன் மரணமற்றவன்  ஆகிறான்.இங்கேயே இறைநிலையை அடைகிறான்.

கட உபநிடதம். சுலோகம்..15.அத்தியாயம். 2 ; 3 பக்கம்...180.
மனத்தின்  எல்லா முடிச்சுகளும்  அவிழும்போது  மனிதன் மரணமற்றவன் ஆகிறான்
உபதேசம் இவ்வளவுதான்.

கட உபநிடதம். சுலோகம்..16.அத்தியாயம், 2 ; 3 பக்கம்...181.

இதயத்தின் நாடிகள் நூற்றொன்று அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது.அதன்
வழியாக வெளியேறுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன்  பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்.

கட உபநிடதம். சுலோகம்..17.அத்தியாயம், 2 ; 3 பக்கம்...183.

உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது. மக்களின் இருதயத்தில்  எப்போதும்  உள்ளது.முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்குச்சியை பிரிப்பது போல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்து கொள்.அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று  அறிந்து கொள்.

ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை.  இது எதிலிருந்தும் உண்டானதில்லை,எதுவும்
இதிலிருந்தும் உண்டானதில்லை. ஆன்மா பிறப்பற்றது  என்றென்றும் இருப்பது. நிலையானது. பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது. இதுதான் என்று சுட்டிக்காட்ட முடியாதது. எந்த அடையாளமும் இல்லாதது.ஆன்மாவை  அனுபூதியில் மட்டும் உணரமுடியும்.

இந்த ஆன்மா இருக்கும் இடம், உறையும் இடம், இருதயக்குகை ஆகும்.இருதயம் = இரண்டு + உதயம்
சூரிய, சந்திர நாடிகள் உதயமாகும் இடமான [முறையே]வலதுகண், இடதுகண்  ஆகும். அல்லது
இருதயம் = இரண்டு + தயவு ஆகும். தயவு விளங்கும் இடம்  கண்களாகும் . கண்களால் காண முடியாத காட்சிகளும் உண்டு.அது ஆன்ம காட்சியாகும். ஒளியே ஓளியை காண்பதாகும்.

மேலும் கண் என்பது தமிழ் இலக்கணத்தில்  ஏழாம் வேற்றுமை உறுப்பு ஆகும். கண் = இடம்  ஆகும். இடம் என்றால் உடம்பின் தலைவனாகிய ஆன்மா வசிக்கும், உறையும்,விளங்கும் இடம்  என்பதாகும்.இடமாகிய கண்ணில் ஆன்மா விளங்குவதால் கண்ணன் ஆகு பெயர் ஆயிற்று. கண் என்றால் நெற்றிக்கண் என்றும்கூறலாம்.

நெற்றிக்கண்ணில் இருந்தபடி ஆன்மா எனும் ஒளி கண்களில்  பார்வையாக கண்ணின் பாவையில்[pupil] விளங்குகிறது. {கண்ணில் உள்ள பாவையில் உள்ள ஒளியை போற்றி தான் மாணிக்கவாசகர் திரு வெம்பாவையும், ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையும் பாடினார்கள்.}மேலும்,பார்வையைக்கொண்டு பார்ப்பவனாகவும், பார்த்தனாகவும், பார்த்தீபனாகவும், நோக்கம் உடையவனாகவும், நோக்குபவனாகவும்,நோட்டம் செய்பவனாகவும் செயல்படுகிறது.

ஆன்மா இருக்கும் இடமாகிய நெற்றிக்கண் இரு கண்களைக்கொண்டுள்ளதாலும். இருகண்களிலில் ஆன்மா பிரவேசம் செய்து விளங்குவதாலும், ஆன்மாவிற்க்கு கண்ணுடைய வள்ளல் என்னும்
பெயருண்டு.
நெற்றிக்கண் = நுதற்க்கண் ஆகும். 
நுதல் = நெற்றி.
ஆன்மாவிற்க்கு திரு என்னும்பெயருண்டு,
எனவே ஆன்மா இருக்கும்  இடமான நெற்றிக்கண்ணுக்கு திரு ஒற்றியூர் என்னும்பெயருண்டு.

நெற்றிக்கண்ணானது  இருகண்களில் பார்வையாக இருந்து வடிவத்தை காட்டுவதால்வடிவுடைய மாணிக்க அம்மை என்னும் பெயருண்டு.

ஆன்மா நெற்றிக்கண்ணில் இருந்து கொண்டு
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பதால் ஆன்மாவிற்க்கு தியாகேசர் [தியாக + ஈசன்] என்றும்,

நெற்றிக்கண்ணுடன்  இணைந்து இருகண்களும் வடிவத்தைக் காட்டுவதால் வடிவுடைய மாணிக்க அம்மை என்று பெயர்.

 அதவது ஆன்மா இருக்கும் இடமான நெற்றிக்கண்ணுக்கு திரு
என்றும், முடி என்றும், தியாகேசன் என்றும்  வள்ளல் என்றும்  ஆண்பாலாக  சிவம் என்னும் பெயர்களுண்டு.
ஆன்மா நெற்றிக்கண் =  குரு.  
இரு கண்களின் பாவை = சீடன்[மாணவன்...pupil]

ஆன்மா பிரவேசிக்கும் இடமான இருகண்களுக்கு [திரு] அடி {திருவடி} என்றும், வடிவுடைய மாணிக்க அம்மை என்றும், பெண்பாலாக சக்தி என்றும், சீவன் என்றும் பரிபாசையாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல் கள் ஏழும் நீ
எண்ணும் நீ  எழுத்தும் நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும் நீ  மணியும் நீ கண்ணுள் ஆடும்பாவை  நீ
நண்ணும்  நீர்மை  நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய்.   
                                                                                                            
                                                                                                 சிவ வாக்கியர்பாடல்..8.

கட உபநிடதம் சுலோகம் 9 முதல் 14வரை
இதில்கவனிக்க வேண்டியது.,

1] புறத்தில்  காணக்கூடியது அல்ல.
2]கண்களால் காண்பதில்லை.
3]ஆன்மாவால்  காணப்படுகிறது.
4]புத்தி  தௌ¤ வேண்டும்.
5]மனத்தின் தொடர்ந்த முயற்ச்சி வேண்டும்.
இறைவனை கண்களால் காணமுடியாது என்றும்,  புறத்தே காணமுடியாது என்றும் கூறுவதால்
இறைவனை எங்கு காண முடியும் என்னும் கேள்வி உண்டாகிறது.

இதற்க்கு சிதம்பரம் இராமலிங்க வள்ளல் பெருமானர்,  திருவருட்பா, அருட்பெருஞ்சோதி அடைவு.5 என்னும் தலைப்பில் கூறுகிறார்.
கண்டேன் அருட் பெருஞ்சோதியைக் கண்களில் கண்டுகளி கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அருட்பெருஞ்சோதி
அகவலில் வரிஎண்117முதல்124வரை கூறுவது, பின்வருமாறு.,

தனுகர ணாதிகள் தாங்கடந் தறியும்ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி
உனும்உணர் வுணர்வாய் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீத அருட்பெருஞ்சோதி
பொதுவுணர்  வுணரும்  போதலால்  பிரித்தே
அதுஎனில் தோன்றா அருட்பெருஞ்சோதி
உளவினில்  அறிந்தால் ஒழியமற் றளக்கின்
அளவினில் அளவா அருட்பெருஞ்சோதி            
                                                              என்றும் கூறுவதால்

அதாவது புலன்களும் மனமும் செயலிழந்த
அல்லது புலன்களும் மனமும் கடந்த நிலையில்தான் 
ஆத்மாவை உணரமுடியுமே தவிர 
புலன்களாலோ, மனத்தாலோ அடைய முடியாது என்ற கருத்து உண்டாகிறது.

மரணநிலை போன்ற ஒரு நிலையில்தான்உணரமுடியும். என்பதை அறிய வேண்டியுள்ளது,

இயற்க்கையின் அற்புதத்தை விளக்க கண்ணிலும் சிறந்த உறுப்பு இல்லை. கண்ணின் அமைப்பிலும் தொழிலிலும்  விசித்தர நுட்பங்கள்  ஏராளமாக இருக்கின்றன.
கண் ஏழு எழும்புகளாலான ஒரு குழியில் மிகவும் பத்திரமாக அமைந்துள்ளது.

கண்ணுக்கும் அதன் குழிக்கும் இடையே ஆறு தசைகளாலான உறைகள் socket உள்ளன.
கண்ணை எந்த திசைக்கும் திருப்பக்கூடிய வண்ணம் இத்தசைகள் அமைந்துள்ளது.
ஒளி அலைகள் மட்டுமே கண்களைத்தூண்ட முடியும்.
மனிதக் கருவிலே கண்ணானது ஆரம்ப நிலையிலே உள்ள நரம்பு மண்டலத்தில் மூளையின் முன்பாகத்தின் இரு பக்கத்திலும் ஒரு சிறு கரு நிறமாக தோன்றுகிறது.




புலன்களில் தலைமையானது கண் ஆகும்.


எப்படி எனில்
வாசனை,சப்தம்,உணர்வு மற்றும் எந்த நிகழ்ச்சி ஏற்படினும்
கண் அவ்விடம்  செல்லும்.
கண் பார்வையினால்தான்  எல்லா ஆசைகளும்
தூண்டப்படுகிறது.
ஆசையின் பிறப்பிடம் கண் ஆகும்.
கண்களால் செய்யப்படும்  யோகமே  யோகங்களில்  சிறந்தது ஆகும். மனித உடலில் மிக நுட்பமான உறுப்பு  கண் ஆகும். 
ஓளியை உணரக்கூடிய {பார்க்ககூடிய} ஆற்றல்  கண்ணுக்கு  மட்டுமே உள்ளது.
இதன் அடிப்படையில் பின்வரும்மேற்க்கோள்களில்  கண்டுணர வேண்டும்.

இந்த நிலையில் ஆன்மாவிற்க்கு எதையும் செய்யும் ஆற்றல் கிடைக்கிறது.
இந்த நிலைக்கு பிராண ஒடுக்கம் என்று பெயர். பிராணன் ஒடுங்க மனம் ஒடுங்கும், மனம் ஒடுங்க புலன் ஒடுங்கும். புலன் ஒடுங்கினால் சர்வமும் ஆன்மா வசமாகும்.ஆன்மாவிற்க்கு ஆளுமைக்குணம் பின் வருமாறு அமையும்.
1]தூய உடம்பின் ஆதல்.
2]இயற்க்கை உணர்வினன் ஆதல்
3]முற்றும் உணரும் தன்மை,
4]இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்
5]பேரரருள் உடைமை.அதாவது தயவும் கருணையும் அதிகரிக்கும்.
6]முடிவுயில்லா ஆற்றல் உடைமை,
7]வரம்பு இல் இன்பம் உடைமை.
8]எப்போதும் தன் வயத்தன் ஆதல். முதலிய இயற்க்கையின் இறைகுணம் உண்டாகும்.

இதனால் ஆன்மா சர்வ வல்லமையோடுஇருக்கும். ஆன்மாவிற்க்கு  எதையும் செய்யும் ஆற்றல் கிடைக்கிறது.
இதனால் ஆன்மாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது.
இதுவே ஆன்ம விடுதலையாகும்.
இதுவே மோட்சம் ஆகும்.

இந்த ஒழுக்கமான வாழ்வினை வாழ்வதைத்தான். சீவ காருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று சிதம்பரம் இராமலிங்கவள்ளல் பெருமான் கூறுகிறார்.



இதனையே  கைலாய கம்பளிச்சட்டைமுனி நாயனார் பின்வருமாறு கூறுகிறார்

தானென்ற ஆணவத்தை  நீக்க  மாட்டார்
சண்டாள  கோபத்தைத் தள்ளமாட்டார்
ஊன்னென்ற  சுகபோக  மொழிக்கமாட்டார்
உற்றுநின்ற  சையோகம்  விடுக்கமாட்டார்
பானமென்ற  ஞானவெள்ள  முண்ணமாட்டார்
பதறாமல்   மவுனத்தே   யிருக்கமாட்டார்
வானென்ற  பொருளென்ன  எளிதோ  மைந்தா
மகத்தான  மனமடங்க   எய்யுங்காணே.                            பாடல்எண்., 33

ஓங்கார முதற் கொண்டைந் தெழுத்தோ  டாறும்
உற்றுநின்ற  பஞ்சகர்தா  ளிருந்தி  டம்பார்
ஆங்கார மாணவம் நா  னெனலும் போனால்
அப்பலவோ அகாரமுத  லுகாரங் காணும்....                        பாடல்எண்.,7

உத்தி கொண்டுஞான  நூல்பார்த்து  பார்த்தே
உலகத்தோர்  ஞானமெல்லாம் வந்த தென்று
பத்தி கொண்டே  அலைவர்கள் விண்ணைப்பாரார்
பாழான மனத்தையங்கே  நிறுத்த  மாட்டார்.......             பாடல்எண்....34

விண்ணேது வெளியேது  வொளியங்  கேது
விரைந்திந்த  மூன்றுங்கே சரிதா  னாச்சு
கண்ணேது காதேது மூக்கங்  கேது
கண்டிப்பாய்   கண்டவெல்லாம்  அழிந்து போச்சே....
ஒண்ணிரண்  டேது  சம ரசந்தா னேது
உற்றுப்பார்  வெட்டவெளி  யொன்றுமில்லை
எண்ணேது நினைவதிங்  கறிவு மேது
ஏகமாய்க்  கலந்துதித்த   யிடத்தைக்  காணே               பாடல்எண்.....31  ............................................................................................................................................


நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கின்றீர்கள் என்றும்,
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிரார் என்றும் அறியாமல் இருக்கிறீர்களா?
                                                                        1.கொரிந்தியர்3:16.

உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயங்கள் என்று அறியீர்களா?
                                                                         1.கொரிந்தியர்6:15

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும், உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்ல என்றும் அறியீர்களா?            
                                                                        1.கொரிந்தியர்6:19.

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. .............         
                                                                                      லூக்கா11:34.

உன் கண் ஒன்றே ஆகில் உன் உடல் முழுவதும் ஒளிமயமாகும்.                         

                                                                                           மத்தேயு6:22.

மறைப்பான தில்லை நெஞ்சே கண்மணிக்குள் வன்னி ஒளி மருவுமந்த
வன்மை பாரே.....................................................சிவானந்தபோதம்..பக்கம்....583.


கண்ணால் உறப்பார்த்து காதலால் தானோக்கில்
 உண்ணுமே ஈசன் ஒளி.......................................அவ்வைக்குறள்....95.

கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற ஒளி.....................................அவ்வைக்குறள்.....227.

புருவத்து இடையிருந்து புன்னியனை காணில்
உருவற்று நிற்கும் உடம்பு....................................அவ்வைக்குறள்.... 243

கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பதனுள்
உள்நாடி நின்றது ஒளி........................................அவ்வைக்கிறள்.....231.

நினைப்புமறப் பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்றும் இல்லை பிறப்பு..........................அவ்வைக்குறள்......166.

நினைப்பு மறப்பு  நெடும்பசியும் அற்றால்
அணைத்துலகும் வீடாம் அது.............................அவ்வைக்குறள்.......175.

ஆதி ஒளியாகி ஆள்வானும் தானாகி
ஆதி அவனுருவம் ஆம்.........................................அவ்வைக்குறள்......190.

பிறவிக்கு காரணம் நினைப்பு மறப்பு
அது அற்றால் பிறவி இல்லை. எப்படி அறுமெனில்
பரோபகாரம்,  சத்விசாரம் இவிரண்டினாலும் நினைப்பு மறப்பு நீங்கி
சிவானுபவம் பெறலாம
                                வள்ளலார் உபதேசகுறிப்பு பக்கம்..358 எழுவகை பிறப்பு.
கொல்வாய் பிறப்பிப்பாய் கூடிருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே.....
                                                                   பட்டினத்தார்...பூரணமாலை.64.
கண்ணுள் மணியாகிக் காரணமாய்  நின்றான்
மண்ணு முயிர்பதியு மாறு.

நேத்திரத்தை காகம் போல் நிச்சயமாய் நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.

கருதரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருதரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருதரித்து உதித்தபோது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.

                                                                           சிவவாக்கியர் பாடல்...374.
மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு
மேலத்துவாரத்தின் மேல் மனம் வைத்திரு.
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும   கருத்திதுதானே..........................திருமந்திரம்....583.


பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றது
நிலையாமை காணப்படும்............................................திருக்குறள்.....349.


வாறான பிரமத்தில் நடுவே மைந்தா
    வந்த்தடா ரவி மதியுர் சுடர் மூன்றாகிக்
கூறாக பின்னியடா கீழே பாயும்
    கூறுகிறேன் இருகண்ணில் ஒளிவைக்கேளு
வீறான அண்டவுச்சி முனைக்கப்பாலே
    வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போல
நேராக இருகண்ணிற் பின்னலாகி
     நிச்சயமாய் ஒளியாகி நிறைந்தார் பாரே.  
  
                                                                                           .......காகசபுசுண்டர்......பாடல்....9

பாரப்பா பரப்பிரம்ம ஒளியினாலே
     பத்தியே நரம்பு வழி பாயும்போது
ஆரப்பா இருகண்ணில் ஒளியதாகி
     அண்டமெல்லாம் ஏகமாய் தெரியலாச்சு
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம்
     கபாலத்தில்  முக்கூறாய் சுழுமுனையாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும் தான்
     வெற்றிபெற இன்னமும் தான் உரைக்கக்கேளே.  
                                                                                                         ......காகசபுசுண்டர்....10.

கேளடா மூலமடா லிங்கம் தன்னில்
    கிருபையுடன் தண்டுக்கு கீழ் மேலாக
நாளப்பா தமர்போல பிடரி மார்க்கம்
    நன்றாக ஓடுமடா நரம்பின் ஊடே
வாளப்பா அண்ட முட்டி  உயர மைந்தா
   வலுவாக முன் சொன்ன நரம்பின் ஊடே
தேளப்பா சேர்த்து மிக பின்னலாகிச்
      சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. 
                                                                                             .....காகசபுசுண்டர்.....பாடல்...11.

பாரடா புருவமத்தி யேதென்றாக்கால்
       பரப்பிரம  மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி
       நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா
       மேவடா மனந்தனையும் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
        கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப போமே  
                                                                                                காகச புசுண்டர்....பாடல்...12.

அறிவை யறிந்து யறிவோட  கூடிநீ
அறிவி லறிவைநீ  யறிவா லறிந்திடு
அறிவி  லடங்கி  யானந்த வெல்லமாய்
அறிவே  குருவாகி  யாகின்ற வாறுதே.    
                                                                                          சட்டைமுனி நிகண்டு........1228.

பாரப்பா மனதுக்கு  வடிவுல்லை
பரிவான வுருவுமில்லை யருவுமில்லை
நேரப்பா சூரியனுங்  கிரணம்  போல
நிலையான  விளக்கதுவும் ஒளியும் போலே
மின்னலுடன்   காந்தியும்  போற்
சேர்ந்து  நின்ற  கண்ணொளியின் திறத்தை போல்
ஆரப்பா விதைக்காண்பா  ரறியமாட்டார்
ரறிந்துணர்ந்தார் போதமது  வாகுந்தானே.          
                                                                   கொங்கணவர் முதற்காண்டம்....பாடல் 273.

அறியாமையை   நீக்கி   அறிவைக்    கொடுப்பவர்
அறிவில்  நின்று  அறிவாக   செயல்படுபவர்
அறிவாக  இருந்து  அனைத்தும்  அறிந்தவர்
அனைத்தும் அறிந்து  அறியாமல்   இருப்பவர். 

     

கண்ணாலலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ
எண்ணாத மாய்கையெல்லாம் என்னுகிறாய் நண்ணாய்  கேள்.

                                                                                                                        ....பட்டினத்தார்.

காகத்தின் கண்ணி  ரண்டிற் காண்பதுவும் கண் ஒன்றே தான் போல்
தேகத்தின் அறிவின் கண்ணைத் திடமுடன் அறிந்து கொண்டு
மோகத்தின்  கனலில் வீழா முனைசுழி வாசி பார்த்தால்
ஏகத்தால் நாகை நாதரிணையடி சார்வாய் நெஞ்சே  
                                                                                          ....{.கணபதி சித்தர்.பாடல்....71.}

கரிய மணித்திறத்தினையும் காண வல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ     
                                                                                      {  திருவருட்பா...சிவதரிசனம்.3}

விழித்துவழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
வழிகள்விழித்  திளைப்பதலால் விளைவொன்றும் இலையே.
                                                                                      { திருவருட்பா...சிவதரிசனம்.6}

...வீறான  சிலபேய்கள்  சாங்கம்  பேசி
விழிந்திறந்து  விழிந்திறந்து திரிவர் தானே.       
                                                              கைலாயக் கம்பளிச் சட்டைமுனிநாயனார்
                                                                                                            பின்ஞானம்.........78..

எந்தைஎன் குருவே என்னுயிர்க்  குயிரே என் கண்ணினுள் மணியே
                                                                   {திருவருட்பா,,,,திருவருட்பெருமை....1}
மண்ணும் மறிகடலும் மற்று உளவும் எல்லாம் உன்
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே.
                                                                { தாயுமானவர்..பராபரக்கண்ணி....387.}
எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும்
கண்ணில் கலந்தருள் கண்ணே பராபரமே.
                                                                {தாயுமானவர்...பராபரக்கண்ணி....277.}
என்னிரு   கண்மணியான  பதம்   என்  கண்மணிகளுக்கு
இனிய   விருந்தாம்   பதம்.                     திருவருட்பா....திருவடிப்புகழ்ச்சி.

கதிர்நலம்  என்னிரு  கண்களிற்  கொடுத்தே
அதிசயம் இயற்யெனும் அருட்பெருஞ்சோதி.        திருவருட்பா அகவல்..274.

என்மனக் கண்ணே என் அருட்கண்ணே
என் இரு கண்ணே என் கண்ணுள் மணியே.         திருவருட்பா, அகவல்..1434.

என்கண் மணியுள் இருக்கும்  தலைவ   நின்னைக்காணவே
என்ன தவஞ்செய்  தேன்முன் அயனும் அரியும் நாணவே
                                                                                    தி.அருட்பா., மெய்யருள்வியப்பு.22.
கதிக்குவழி காட்டுகின்ற கண்ணே என்கண்ணில்
கலந்தமணி  யேமணியில் கலந்த கதிர் ஒளியே...

                                                                                             தி.,அருட்பா.,அருள்விளக்கமாலை...8




எம்பலத்  தெல்லாம்  வல்லசித் தென்கோ
என்னிரு கண்மணி  என்கோ              
                                                            தி..அருட்பா .,ஆண்டருளியருமையை  
                                                                                                                  வியத்தல்..1

கருணைமா  நிதியே  என்னிரு கண்ணே
கடவுளே  கடவுளே  என்கோ....          
                                                          தி..அருட்பா.,இறைவனை ஏத்தும் இன்பம்..

கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்னே  விண்ணிறைவே சிவ  மேதனிமெய்ப் பொருளே
                                                                                தி..அருட்பா.,  ஞானோபதேசம்...1.

கண்டேன்  அருட்பெருஞ்சோதியைக் கண்களில் கண்டுகளி
கொண்டேன் சிவானந்தக்  கூத்தாடி கொண்டிக்குவலயத்தே......

                                                   
                                                   தி..அருட்பா..அருட்பெருஞ்சோதி அடைவு...5

என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியே.....             தி..அருட்பா   இறைதிருக்காட்சி...1

நிலையனைத்தும் காட்டி அருள்நிலை அளித்த குருவை
எந்தையை என் தனித்தாயை என்னிரு கண்மணியை என் உயிரை
என் உணர்வை என் அறிவுள் அறிவை.......  தி..அருட்பா   ஞான சரியை...16

கண்கள் களிப்ப வீண்டு நிற்குங்   கள்வரிவரூ ரொற்றியதாம் ..................
                                                       தி..அருட்பா...இங்கிதமாலை....8
கண்ணின் மணிபோ லிங்குநிற்குங்  கள்வரிவரூ  ரொற்றியதாம்..................
                                                       தி அருட்பா....இங்கிதமாலை.....25.
என் இருகண்  மணியேஎன்  அறிவேஎன் அன்பே......................
                                                      தி  அருட்பா....பிரியேன் என்றல்...6
கருணைக்  கடலே யென்னிரண்டு  கண்ணே முக்கட்கரும்பே செவ்.........
                                                      தி  அருட்பா.. இங்கிதமாலை....139.
கலையனே எல்லாம் வல்ல ஓர் தலைமைக் கடவுளே என் இரு கண்ணே...........
                                                       தி  அருட்பா...தனித்திரு அலங்கல்..137.
கருணா நிதியே  என் இரண்டு  கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்................
                                                        தி   அருட்பா..வாதனைக்கழிவு...15

இனித்ததௌ¢ ளமுதே என்னுயிர்க் குயிரே
என்னிரு கண்ணுள்மா மணியே........         தி   அருட்பா...அனுபோகநிலையம்..5.

கண்ணும் மனமுங் களிக்குமெழிற்  கண்மூன்றுடையீர் கலையுடையீர்.
                                                        தி    அருட்பா...இங்கிதமாலை..141

கரும்பி லினியீ ரென்னிரண்டு  கண்களனையீர் கறைமிடற்றீர்.
                                                          தி   அருட்பா....இங்கிதமாலை...146.

கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை  அல்லால்....
                                                         தி     அருட்பா., அபயத்திறன்....4.

வளங்கொளும் பெரிய  வாழ்வைஎன்  கண்ணுள்
மணியைஎன்   வாழ்க்கைமா  நிதியைக்

குளங்கொளும்   ஒளியை  ஒளிக்குளே  விளங்கும்
குருவையான்   கண்டுகொண்  டேனே.
                                                                    தி    அருட்பா...இறைதிருக்காட்சி...15

கண்ணுறு  சத்தர்  எனும்இரு புடைக்கும்  கருதுரு முதலிய விளங்க.......

                                                                    தி    அருட்பா...திருவடிநிலை..........6

வான்   கேட்கும்  புகழ்தில்லை மன்றில்நடம்  புரிவாய்
மணிமிடற்றுப்   பெருங்கருணை  வள்ளல்என்  கண்மணியே
                                                                     தி     அருட்பா...அன்புமாலை...........?

எண் நிறைந்த  மேன்மைபடைத்து  எவ்வுயிர்ரக்கும்  அவ்வுயிராய்க்
கண்  நிறைந்த  ஜோதியைநாம்  காணவா  நல்லறிவே
                                                                  தாயுமானவர் நல்லறிவே கண்ணி...........1

கல்லார்க்கும்  கற்றவர்க்கும் களிப்பருளும்  களிப்பே
காணார்க்கும்  கண்டவர்க்கும்  கண்ணளிக்கும் கண்ணே
                                                                    தி     அருட்பா...அருள்விளக்கமாலை.....39.
என்னிரு கண்ணுள் இருந்தவனே
இறவாதருளும் மருந்தவனே                              
                                                                              தி     அருட்பா....அம்பலத்தரசே.......47

என்இருகண்  மணியிலே  என்கண்மணி ஒளியிலே
என் அனுபவந் தன்னிலே........                          
                                                                              தி    அருட்பா...நடராஜபதிமாலை....2

கற்கரை  யும்படி கரைவிக்குங்  கருத்தே
கண்மணி  யேமணி கலந்தகண்  ஒளியே......         
                                                                           தி     அருட்பா...சற்குருமணிமாலை...2


பெண்மணி  பாகப்  பெருமணி   யேஅருட்  பெற்றிகொண்ட
விண்மணி யான விழிமணி யேஎன்  விருப்புறுநல்
கண்மணி  நேர்கட வுண்மணி  யேஒரு   கால்மணியைத்
திண்மணிக்  கூடலில்  விற்றோங்கு  தெய்வசிகாமணியே.
                                                                     
                                                                      திருவருட்பா..திருவருண்முறையீடு...118.

கண்ணுள் மாமணி   யேஅருட் கரும்பே.....                திருவருட்பா...வழிமொழிவிண்ணப்பம்..2.

கண்ணினால் உனது கழற்பதம் கருத்தினை  மறந்து
பாழ்வயிற்றை........    
                                                      திருவருட்பா....பிரசாதவிண்ணப்பம்....35.


கண்ணுள்  மணிபோல்   கருதுகின்ற   நல்லோரை
எண்ணும்  கணமும்விடுத் தேகாத  இன்னமுதே
                                                                        திருவருட்பா...திருவருட்க்கிரங்கள்...10.

கண்ஆவா  ரேனும்உனைக்   கைக்குவியார் ஆயின் அந்த
மண்ஆவார்  நட்பை மதியேன்  பராபரமே                   
                                                                                  தாயுமானவர் பராபரக்கண்ணி......53.


கண்ணே  கருத்தேஎன்   கற்பகமே  கண்நிறைந்த
விண்ணேஆ  னந்த  வியப்பே    பராபரமே.                
                                                                              தாயுமானவர்  பராபரக்கண்ணி......10.

கண்மூடிக்   கண்வழித்துக்  காண்பது   உண்டோ  நின் அருள் ஆம்
விண்மூடின்  எல்லாம்  வெளி  ஆம் பராபரமே.
                                                                            தாயுமானவர்...பராபரக்கண்ணி....98.

மண்ணும்  விண்ணும்  வந்து  வணங்காவோ   நின்  அருளைக்
கண்ணுற உள்  கண்டவரை  கண்டால்  பராபரமே.  
                                                                          தாயுமானவர்... பராபரக்கண்ணி...139.

கைக்கிசைந்த பொருளேஎன்   கருத்திசைந்த  கனிவே
கண்ணேஎன்  கண்களுக்கே   கலந்திசைந்த  கணவா....  

                                                                  திருவருட்பா..அருள்விளக்கமாலை....15.

என் மனக் கண்ணே  என் அருட்  கண்ணே
என் இரு கண்ணே என் கண்ணுள் மணியே                
                                                                            திருவருட்பா   ..அகவல்.................1434.

மருவுபெரு  வாழ்வைஎல்லா  வாழ்வும்  எனக்களித்த
வாழ்முதலை  மருந்தினைமா  மணியை என்கண் மணியைக்....
                                                                            திருவருட்பா..கண்டேன் கனிந்தன்....1.

விண்ணுள்  வளிஅடங்கி   வேறுஅற்றது என்ன அருள்
கண்ணுள் அடங்கிடவும்  காண்பேனோ  பைங்கிளியே
                                                                         தாயுமானவர் பைங்கிளிக்கண்ணி.......53.
........காதமப்பா தூரமல்ல  அந்தோ அந்தோ
கண்ணிமைக்குள் விண்ணுக்குள்  கலந்து  காணே .    
                                                                       கைலாயக்  கம்பளி சட்டைமுனி...........30.



 

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக