புதன், 28 ஆகஸ்ட், 2013

இரசவாத இரகசியம் ஆனந்தமாக {கடவுளாக} வாழ்வது எப்படி?

                                  ஆனந்தமாக   {கடவுளாக}      வாழ்வது எப்படி?


                                       ஆனந்தம் என்றால் கடவுள்.
                                                                     
எத்தனை முறை கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினாய்?
எத்தனை முறை பிரார்த்தனை செய்தாய்?
எத்தனை முறை மந்திரங்களை ஜெபித்தாய்?
எத்தனைமுறை வேதங்களை படித்தாய்?
இதன் அடிப்படையில் ஆனந்தம் கிடைப்பதில்லை.

இவைகள் தேவை இல்லை என்று எண்ணக்கூடாது
இவைகளும் தேவை என்று எண்ண வேண்டும்.
இவைகள் மட்டும் போதும் என்று எண்ணிவிடக்கூடாது.

உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களிலும்
உங்கள் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகளிலும்
நீங்கள் செய்யும் செயல்களிலும்

நீங்கள் மற்றவர்களிடம் எந்த அளவுக்கு அன்பாகவும்,
தயவாகவும், கருணையாகவும் நடந்து கொள்கின்றீர்களோ
அதன் அடிப்படையில் ஆனந்தம் இருக்கிறது.

இதற்கு ஒரு எளிய வழி
கண்ணால்  பாருங்கள்.
காதால் கேளுங்கள்.
வாயினால் எதுவும் பேசாதீர்கள்.
எச்செயலும் செய்யாதீர்கள்.

இது முடியாவிட்டால் இதைவிட எளிமையான வழி

எனவே ஆனந்தமாக வாழ நம்முன்னோர்கள் ஆகிய அறிவாளிகளும்,
ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், சில வழிமுறைகளை கூறி
உள்ளனர்.

அவைகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என இரண்டாக வகுத்து
கூறி உள்ளனர்.

இவற்றை பின்பற்றினால் நாம் ஆனந்தமாக வாழலாம்.

நாம் வாழும் உலகைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகத்தில் உள்ளவைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அவைகளின் விபரம்:-  முன்னோர்கள் கூறிய கருத்துக்களில் இருந்து
தொகுத்தவைகள்.

இந்த உலகத்தில் பலவகைப்பட்ட குணங்களை உடைய மனிதர்களோடு
வாழவேண்டியகட்டாயத்தில் நான் இருக்கிறேன்.
பொய்மையே பேசும் மனிதர்கள்,
எதையும் செய்ய தயங்காத மனிதர்கள,
குற்றமே செய்கின்ற மனிதர்கள்,
 தான் வாழ்வதற்காக எதையும் செய்யக்கூடியமனிதர்களும், இருக்கிறார்கள்.

 நல்லகுணமுடையவர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்தாக வேண்டும்.

இதற்கு முன் வாழ்ந்தவர்கள்,
பல விதமான கற்பனைகளையும்,பொய்களையும்
அறியாமையால் கூறிச்சென்று உள்ளனர்.

அவைகளை பின்பற்றும் பெரும்பான்மையான மக்கள் கூட்டமும் உண்டு.அவைகளின்படி வாழ வேண்டும என்று சட்டமாக்கி வற்புறுத்தலும் செய்வார்கள். இருந்தாலும் நான்   இவர்களோடு   வாழ்ந்தாக   வேண்டிய   கட்டாயத்தில்    இருக்கிறேன்.

இவர்கள் வாழ்வதற்க்காக என்னை அழிப்பதற்கு தயங்க மாட்டார்கள்.என்னை  பல வகையிலும் ஏமாற்றவும் மயக்கி என்னை அடிமை செய்யவும்,என்னிடம் உள்ள பொருள்களை அபகரிக்கவும் நேரம் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

இதற்குநீதி,நேர்மை, நாணயம், நம்பிக்கை,பாவம், புன்னியம்,நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பல வகையான காரணம் காட்டுவார்கள். இப்படிப்பட்ட  மனிதகூட்டத்திற்க்கு சமுதாயம் என்று பெயர்.

இந்த  சமுயாயத்தின்  உறுப்பினர்களுக்கு, குடும்பம் , தாய்சொந்தம், உறவினர்கள், அண்ணன், தம்பி, மனைவி, மகன், மகள்,பேரன், பேத்தி, நண்பன், தந்தை என்று ஏமாற்று பெயர்களும் உண்டு.

இவர்களோடு கூடி  வாழவேண்டும் என்று உபதேசம செய்யும், ஞானிகள், மகான்கள், சான்றோர்கள் என்போரும் உண்டு. உபதேசம்கூறிய எவரும் அதன்படி வாழ்ந்தது இல்லை.

    {இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் அப்படித்தான் இருக்கிறேன்.}

உபதேசம் ஊருக்குதான் தனக்கு இல்லை என்பது போல் இவர்களின் செயல் இருக்கும்.
இதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையின் தோல்விகளும், இயலாமையுமே காரணம் ஆகும்.

இதுவரைகூறியதும் இனி கூறுவதும் எனக்குள் தோன்றிய கருத்துக்கள் ஆகும்.
உண்மையை அவரவர் சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.

இனி வாழ்பவர்கள்,நன்றாக, வாழவேண்டும் என்ற நல்ல எண்ணமும், மீண்டும் நாம் பிறக்க நேரந்தால நல்ல சமுதாயத்தில் சுகமாக வாழலாம் என்ற சுயநலமும் ஆகும்.

மேலும்இதற்க்கு உன்னை தியாகி என்றும்,மேலோன் என்றும், வாழ்வில் முன்னேற்றம் உண்டு, அடுத்த பிறவியில் நீ மிக பெரியவனாவாய் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி உன்னை ஏமாற்ற முயற்ச்சிப்பார்கள்.

மேலும் நீ மனிதன்ஆறறிவு படைத்தவன், நீ மிருகம் இல்லை, என்று பலவிதமான  சாலவார்த்தைகள் கூறுவர்.
{உலகத்தில் வாழும் அனைத்தும் தாவரங்கள் தான், அனைத்தும்
மிருகங்கள்தான்.மனிதனை மனித மிருகம் என்று கூறலாம்.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவனே கடவுள்.
இதுவரை மனிதன் தோன்றிய காலம் முதல் எல்லா கட்டுப்பாடுகளும்,எல்லா சட்டங்களையும்  இயற்றியும்
 எவரும் அதை கடைப்பிடிக்கவில்லை.
சமுதாயம்  அமைதியாகஇருந்ததும் இல்லை.


உனக்குநீதியையும்,நேர்மையையும் போதனை கூறி விட்டு,
அதன்படி நடக்கவும்கூறிவிட்டு
அவர்கள் வாழ்க்கையை அவர்கள்  கூறியதற்கு மாறாக விருப்பம் போல்வாழ்வார்கள்.

 இதுவரைஉபதேசம் செய்த எவர்களும்  அதன் படி வாழ்ந்ததாக
ஆதாரமோ  நிரூபனமோ இல்லை.
எங்கோ ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்.

இதில்எவ்வளவு பெரிய மகான்கள் என்று பெயர் எடுத்தவர்களாக இருந்தாலும் சரி.
இவர்கள் உலகவாழ்க்கையை விட்டுவிலகி, வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது
.உழைத்து பணம்  சம்பாதிக்காதஇவர்கள், தானம் செய்யவேண்டும், தர்மம் செய்யவேண்டும்  என்று உபதேசிப்பார்.

இவர்களிடம்  சிறப்பான திறமை ஒன்று உண்டு.
அது என்னவெனில்
எதற்கும்ஆசைபடமாட்டார்எல்லாவற்றையும் விட்டு விலகியும் எந்த ஒன்றிலும்சம்பந்தபடாமலும் இருப்பார்கள்.
ஆதலால்இந்த உலகத்தில் உள்ள   எவரையும் நம்பாதே.

இப்படி வாழும் போது உனக்கு சலிப்பு ஏற்ப்படலாம்.
எனவே உன்னைஅனுசரிப்பவர்களையும்,
உனக்கு கீழ்படிந்து நடப்பவர்களையும் ஏற்றுக்கொள்.

ஆனால் இவர்களிடமும் எப்போதும்  முன் எச்சரிக்கையாகவும், விழிப்போடும்,இருக்க வேண்டும்

ஏன் என்றால்  எல்லோரிடமும் தான் வாழ்வதற்காக எதையும்
செய்யும் குணம் உள்ளது.

ஏன் என்றால் இயங்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமானால் மற்றொன்று இடம் பெயர வேண்டும் என்பதுஇயற்க்கை நியதியாக உள்ளது
.
ஒன்று வாழ மற்றொன்று அழிந்தாக வேண்டும்.
ஒன்றின் வாழ்வில் மற்றொன்றின் அழிவும்,
ஒன்றின்அழிவில் மற்றொன்றின் வாழ்வும் உள்ளது.
ஒன்று மற்றொன்றாக வேதியல் விதிப்படி மாறுகிறது.

எது எப்படி இருப்பினும் நீ எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதே. உனது அறிவை
உபயோகித்து நீ இருக்க அல்லது  வாழ வழி ஏற்படுத்திக்கொள். நீ வழி
ஏற்படுத்திக்கொள்ளா விட்டாலும் என்றும் நீ இருப்பவனாவாய். பிற
உயிருக்கு  தீங்கு செய்வதால் உனக்கு எந்தவித பயனும் இல்லை.

உன் எண்ணங்கள் மட்டும்  நிறைவேறும்.
மேலும் அதன் எதிர் விளைவுகள் உனக்கு உண்டு.
நீ ஆனந்தமடைந்து மற்றவரையும் ஆனந்தப்படுத்து.
நீ ஆனந்தமடைய எவரையும் துன்புறுத்தாதே.

எனவே இவ்வாறு எல்லாகுற்றங்களையும் பட்டியல் போட்டுக்கொண்டிருப்பதால் உனக்கு எந்தவிதபயனும் இல்லை.
ஆதலால் எல்லோரிடமும் எதுவும் பேசாதே.
மௌனமாக இரு.
கடலில் அலைகள்எவ்வாறு இயல்பானதோ மற்றும் தவிர்க்க முடியாததோ அது போலவேதான் உலக மக்களும் இப்படிதான் இருப்பார்கள்.

உலகமக்களிடம் இருந்து விலகி வாழ உனக்கு வழி அமைத்துக்கொள்.

அந்த வழி என்ன என்றால் .

இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் ஒரே விதமான மூலப்பொருளைக்
கொண்டுள்ளது.

இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நீ தான் என்று ஏற்றுக்கொள்.
அதாவது உலகத்தில்உள்ளவர்களாய் உள்ளது யாவும் உன்னைத்தவிர வேறு
 ஒன்றும் இல்லை. எல்லாம் நீதான் என்றும்  ஏற்றுக்கொள்.

எந்த வகையில் என்றால்,

பொன்னைக்கொண்டு பலவித ஆபரணங்ளைச் செய்தாலும்,
எல்லா ஆபரணங்களிலும்இருப்பதுபொன்மட்டும் தான் என்பது போல்,
இந்த உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களுமாக இருப்பது நீ என்று உணர்ந்து கொள்.
இதை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் உனக்கு பரிமாண,முன்னேற்றமில்லை.

உன்னால் இந்த உலகம் உன்னைக்கொண்டு உன்னைப்போலவே படைக்கபட்டு இருப்பதை உணர்ந்து கொள்.

ஏனெனில் நீ இல்லாத போது இந்த பிரபஞ்சம் உன்னை விட்டு விலகிவிடும்.

உனக்கு இருக்கும் உரிமையைப்போலவே மற்ற ஒவ்வொரு உயிருக்கும் உரிமை உள்ளது

எனவே நீயும் சந்தோசமாக வாழ்ந்து, மற்ற உயிர்களும் சந்தோசமாக வாழ வழிவிடு

எல்லாம் ஒரே தன்மையாகிய பொன்னால் செய்யப்பட்டு இருந்தாலும்  எல்லா
ஆபரணங்களும்ஒன்றுக்கு ஒன்று சமம் அல்ல.
ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு தான் இருக்கும்.
ஒவ்வொன்றும் ஒரு தனிதன்மை உடையது.
இதற்கான காரணத்தை அவரவர் உணர வேண்டும்.

இதன் வேறுபாட்டுக்கு அடிப்படை காரணம். பொருள்களின் அமைவின் பண்பாகும்.
ஒருவர் கூறும் காரணம் மற்றொருவருக்கு ஏற்பு உடையதாக இருக்காது. மாறுபாடுகொண்டதாகஇருக்கும்.

உன்னையே நீ நொந்து கொள்வதால் பயன் எவ்வாறு இல்லையோ
 அதுபோல்தான்உலக மக்களை நீ நொந்து கொள்வதும் ஆகும்.

இவையெல்லாம் உலக மக்களின் இயல்பாக இருப்பதால்
நீ எவரிடமும் பேசாதே.
எதிர் பேச்சு பேசாதே.
எவருக்கும்எந்த உபதேசம் கூறாதே.

எவரையும் காப்பாற்றுவது உன் கடமையல்ல.

பிறரைக்காப்பாற்ற

எவரும் உன்னை அலைக்கவும்இல்லை,
எவரும் உன்னை நியமிக்கவும் இல்லை.
நீ எவரை காப்பாற்ற வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதோ அவரை காப்பாற்றியே தீருவாய்.
அவரவர் வாழ்க்கை எப்படி நடக்க வேண்டும் என்று அவரவருக்குள்அறிவாக அமைந்திருக்கும்.

அறிவே, இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த  சொத்து  ஆகும்.

இதனை வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

எனவே மௌனமாக இருப்பதை உன் கடமையாக கருது.உனக்கு அப்போதுதான்  நிம்மதி  கிடைக்கும்.  இல்லையெனில் வாழ்க்கைமுழுதும்  போராட்டமாக  அமைந்துவிடும்.

இவற்றை உன் மனம் ஏற்றுக்கொள்ளாது. பயிற்சியினால்தான்  மாற்ற முடியும்.

இதை நீபழகுவாயாக!.தொடர்ந்து பழகுவாயாக!

மனம் என்றால் என்ன?
எண்ணங்களின் தொகுப்பே மனம் ஆகும்.
எண்ணங்களை நீக்கிவிட்டால் மனம் என்ற ஒன்று இல்லை.

எண்ணங்கள் எப்படி தோன்றியது?
செயல்களின்{கர்மா} அனுபவம், அனுபவ அறிவாக ,நினைவுகளாக  பதிவாகிறது. இதுவே எண்ணங்களாகஅமைகிறது.

செயல்களினால் கிடைப்பது அனுபவம்.
அனுபவத்தினால் கிடைப்பது அனுபவ அறிவு.
அனுபவ அறிவினால் கிடைப்பது நிணைவுகள்.

நிணைவுகளின் எண்ணிக்கைகளின்  தொகுப்பு நிணைவுகள் ஆகும்.
செயல்களின் அனுபவ அறிவின் தொகுப்பு நிணைவாகும்.

அனுபவ அறிவின் தொகுப்பு நிணைவுகளாகும்.
நிணைவுகளின்  தொகுப்பு எண்ணங்களாகும்.
எண்ணங்களின் தொகுப்பு மனமாகும்.

கடலின் அடித்தளத்தை போல் நீ அமைதியானவன். உலக மக்களின் செயல்கள உனக்குஎண்ணங்களாக மாறி கடல் அலையைப்போல் சலனத்தையும்,நிம்மதியின்மையையும் உனக்குஉண்டாக்குகிறது.

கடலில் தோன்றுவது அலைகளாகும்.  அலைகளே கடல் அல்ல.
உனக்குள்தோன்றுவது எண்ணங்களாகும்.
எண்ணங்களே நீ அல்ல.
கடல் போன்ற ஆன்மாவாகிய உன்னிடம் எண்ணங்களின் தொகுப்பாகிய மனம், எண்ணங்களை கடல் அலை போல் உண்டாக்குகிறது.

ஆனாலும் மனம் உன்னை சும்மா இருக்க விடாது.உனக்குள் எண்ணங்கள் தோன்றி
 அதை செய்யவேண்டும், இதை செய்ய வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும்.
அப்போது எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி செய்யாதே.

அதற்கு முதல்படியாக எல்லாவற்றையும்
கண்ணால் பார்,
காதால் கேள்.ஆனால்
வாயால் எதுவும்பேசாமல் இரு.
இப்படி செய்தால் படிப்படியாக மனம்அடங்கிவிடும்.
மனம் அடங்கினால் வாய்வுஅடங்கும்.
அதாவது சுவாசம் அடங்கும்.சுவாசம் அடங்கினால் அனைத்தும் நீயாவாய். அனைத்தும் நீயானால் சர்வ வல்லமையும்  உன்னிடம்.
பின்னர் உன்னால்முடியாதது எது?
 நீயே இயற்க்கை, நீயே கடவுள்.
எளிமையாக தோன்றும்  இதை  இடைவிடாத பயிற்சியினால் மட்டும் முடியும்
.
மனம் உன்னை எப்போதும் ஏமாற்றமுயற்சிக்கும்,

ஆதலால்தீவிர பயிற்ச்சியை தொடர்ந்து செய்.
தானாக நடைபெறும் செயல்கள் ஆளுமை பண்பின் செயலாகும்.

தனக்கு எது தேவையோ அதை ஆளுமைபண்பு நிறைவேற்றி வைக்கும்.

பிறரை ஒப்பீடுசெய்து அப்படி இருக்க வேண்டும்,இப்படிச் செய்ய வேண்டும், என்று முயற்ச்சியை தூண்டுவது மனதின் செயல்ஆகும்.

ஆளுமை பண்பின்செயலால தேவையானது அனைத்தும்அமைதியாகநடக்கும்

இதுவே விதி.

இது ஒரு வேதியல் அடிப்படை விதி.

பொருள்களின் அமைவின் அடிப்படையில், அமைந்துள்ள வேதியல் சட்டமே
விதியாகும்

இந்த விதியை மீறி எதுவும் நடக்காது. நடக்க முடியாது.


இதனை வள்ளுவர் பின் வருமாறு கூறுகிறார்.

ஊழின் பெருவழி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

பொருள்களின் அமைவின்படி செயல்கள் நடக்கும்.

தன் தேவைகளை எப்படிஅடைய வேண்டும்என்று திட்டமிடப்பட்டு பொருள்கள் அமைந்துள்ளது. அல்லது அமைக்கப்பட்டுள்ளது.

பொருள்களின் அமைப்பே நமது உடல்.எப்படி அமைய வேண்டும் என்று, முன்பு ஏற்பட்ட அனுபவத்தில் உள்ள தவறுகளை நீக்கி கொண்டு அமைத்துக்கொண்டுள்ளது.

இப்போது ஏற்படும்தவறுகளை அடுத்த அமைப்பில் நீக்கிக்கொள்ளும்.
இறுதியில் தவறுகள் இல்லாத முழுமையானதேகத்தை அமைத்துக்கொள்ளும்.
இப்போது தேவைகள் யாவும் யாதொருமுயற்சியின்றி,விரும்பிய மாத்திரத்தில் நடக்கும். இவ்வாறு அமைத்துக்கொண்டவர்கள் தான்முனிவர்களும், ரிஷிகளும் ஆகும். .
இது எனது யூகம், எனது கற்பனை, எனது அனுமானம். நீங்கள் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். எனது கற்பனை நிரூபிக்கப்படும்போது உண்மையாகும். நிரூபிக்கப்படாதவரை கற்பனையாக இருக்கும்.

 மனதின் முயற்சியால், அதாவது மனதின் ஆணவத்தினால் தற்போது நடக்க
முடியாத ஒன்றை நடத்த முயற்சி செய்வது துன்பத்தை கொடுக்கும்.

விதியின்படி {அமைவின்படி} தானாக  நடப்பது இயற்க்கை.
முயற்சி செய்து முடிக்க வேண்டும் என்று முயற்சிப்பது செயற்கை. இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க உனக்கு உரிமைஉண்டு.
உன் வாழ்க்கையை நீ அமைத்துக்கொள்.
உன் வாழ்க்கை உன்னிடம் உள்ளது.

நதி கடலில்தானாகவே கலந்துவிடும். முயற்சி தேவையில்லை.
மேலும் நீ ஒரு ஓடத்தில் செல்வதாக வைத்துக்கொள்.
 நீ செல்ல வேண்டி இடத்திற்க்கு ஓடம் உன்னை கொண்டுபோய் சேர்க்கும்.
அதை விடுத்து ஓடத்திற்க்குள்ளேயே  நீ நடந்து கொண்டிருந்தால்,
ஓடம் சீக்கிரம் கொண்டுபோய் சேர்க்காது.

இங்கு எனது கருத்து யாதெனின் நீங்கள் முயற்ச்சி செய்தால் முயற்சிக்குறிய
பலன் கிடைக்கும்.
ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது

உரிய நேரத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
அப்போது முயற்சி தோன்றும்.இப்போது பலன் கிடைக்கும்.

எதை போன்றது என்றால் பசி எடுப்பதற்க்கும், மூச்சு விடுவதற்க்கும், இரத்த ஓட்டம் நடைபெறவும் நாம் எவ்வித முயற்ச்சியும் செய்யாமல் இயற்க்கையாக எப்படி நடக்கிறதோ அதுபோல் முயற்சியும்  இயற்க்கையாக தோன்றும் என்று கருதுகிறேன்.
இதற்கு  நிரூபணம் கிடைக்கும்வரை காத்திருக்கவேண்டும்

அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்
அவரவர் வினை வழி அவரவர் அனுபவம்
எவர் எவர்க் குதவினர் ? எவர்ரெவர்குதவிலர்?
அவரவர் நிணைவது தமையுணர் வதுவே.


பொருள்கள் இருப்பதால் இயக்கம் இருக்கிறது. இயக்கத்தால் செயல்கள் நடக்கின்றன.
இவையே கர்மா எனப்படும்.

அவரவர் அறிவின் படி ஆசை உண்டாகிறது.
அவரவர்ஆசைக்கு ஏற்ப்ப புத்தி அமைகிறது
அவரவர் புத்தியின் படி செயல்கள் நடக்கிறது.
அவரவர் செயலுக்கு உன் உதவி எதற்கு

மனதின் இயல்புகள்.,

தனித்திருக்கும்போது துணையை விரும்பும்.
துணையோடு இருக்கும் போது விலக விரும்பும்.
எப்போதும் மற்றவர்களை அடக்கி ஆள விரும்பும்.
மற்றவர்கள் அடக்க முயற்ச்சித்தால் அழிக்க விரும்பும்.
பிறர் குற்றங்களை எளிதில் விசாரிக்கும்.
தன் குற்றங்களை விசாரிக்க மறுக்கும்.

எல்லோரும் தன்னை மதிக்கவேண்டும் என்று விரும்பும்.
பிறரை மதிக்க, தான் விரும்பாது.
எல்லாரையும் விட தானே உயர்ந்தவன் என்று கருதும்.
எல்லோரும் தன்னை பாராட்ட வேண்டும் என்று கருதும்.
பிறரிடம்  இருந்து  உதவியை விரும்பும்.
பிறருக்கு உதவி செய்ய மறுக்க காரணம் கூறும்.
அடுத்தவர்  விசயத்தில் எளிதில் ஈடுபடும்.
தன் விசயத்தில் அடுத்தவர் ஈடுபட்டால் கோபம்கொள்ளும்.

அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யும்.
பிறர் கூறும் உபதேசங்களை ஏற்க மறுக்கும்.
பயத்தோடு இருக்கும்,
தைரியமாக இருப்பதாக தோற்றமளிக்கும்.
எப்போதும் இரட்டைகளை உடையது.
பிளவுபட்டு நிற்பது. தன்னிலையில் நில்லாதது.
முன்னிலையில்  [ புறத்தே] எப்போதும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக