இப்பிரபஞ்சம் இயற்கையா?
இறைவனால் உண்டாக்கப்பட்டதா?
இயக்குவோனை எண்ணங்கள் நிர்ணயம் செய்கின்றன. இயக்குவோன் பொருள்களின் அமைப்பை நிர்ணயம் செய்கிறான். பொருள்களின் அமைவு இயக்கத்தை நிர்ணயம் செய்கிறது. இயக்கம் பொருள்களின் வேகத்தை நிர்ணயம் செய்கிறது. இயக்கத்தை கவனிப்போன் காலத்தை நிர்ணயம் செய்கிறான்.
muvairavelu.blogspot.comஇவையெல்லாம் இருக்க இடம் ஒன்று வேண்டும்.
இடம் {வெளி} பொருள்களை நிர்ணயம் செய்கிறது.
பொருள்கள் எண்ணங்களை நிர்ணயம் செய்கிறது.
எனவே வெளி{இடம்} இல்லையேல் பொருள் இல்லை.
பொருள் இல்லையேல் இயக்கம் இல்லை.
இயக்கம் இல்லையேல் வேகம் இல்லை.
வேகம் இல்லையேல் காலம் இல்லை.
எல்லாமே வெளியை{இடத்தை} சார்ந்தே இருக்கிறது.
உள்ளது வெளி மட்டுமே,
இதுவே உண்மையானது. நிலையானது.எல்லையற்றது
.மற்றவைகளான பொருள், இயக்கம்,காலம், இவைகள் எல்லாம் வெளியை சார்ந்தது .
வெளி இல்லையெனில் எதுவும் இல்லை.
இடத்தில்{வெளியில்-space™} பொருள்.
பொருளில் இருந்து இயக்கம்.
இடத்தில் பொருள், பொருளில் இயக்கம்,
இடம், பொருள், இயக்கம், உள்ளது அவ்வளவே.
இல்லாத பொருளுக்கும், இயங்காத பொருளுக்கும், காலமும் உருவமும், காண்போனின் கருத்தில்தோன்றாது.
காண்போனின் கருத்தில் தோன்றியவை காலமும், உருவமும் ஆகும். காண்போன் தன் கருத்தை பிறருக்கு உணர்த்துவதற்கு உபயோகித்த கருவி மொழியாகும்.
காண்பவனே பொருளின் உருவத்தையும், இயக்கத்தையும், இயக்கத்தின் அளவாகிய வேகத்தையும்,வேகத்தின் அளவாகிய காலத்தையும் நிர்ணயம் செய்கிறான்.
பொருள்களை நிச்சயம் செய்வது கருத்து ஆகும்.
பொருள்களில் காலமோ உருவமோ கிடையாது.
பொருள்களுக்கு, வெளியில்{SPACE-™}தான் உருவமும் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது.
பொருள்கள் இருப்பதோ வெளிக்குள் ஆகும்.
பொருளும், வெளியும் இணைந்தே இருக்கும்.
வெளிக்குள் உள்ளது பொருள். பொருளால் நிறைந்தது வெளி.
எந்த ஒரு பொருளுக்கும், தன் உருவத்தை பற்றியோ, தான் இயங்கும் வேகத்தை பற்றியோ, தான் எவ்வளவு காலம் நிலைத்து இருப்போம் என்றும், இன்னும் எவ்வளவு காலம் இயங்குவோம் என்பது பற்றியோ தெரியாது.
பொருளின் இயக்கத்தின் அளவை நிர்ணயம்செய்வது இடத்தில் உள்ள பொருள்களின் அமைவாகிய பொருண்மை எனும் சூழ்நிலையாகும்.
அதாவது அதை சூழ்ந்துள்ள மற்ற பொருள¢கள் ஆகும்.
நினைத்த காலம் இறந்த காலமே நினைக்கப்போகும் காலம் எதிர்காலமே.
நினைக்க மறந்துவிட்டால் எதிர் காலம் என்பதில்லை.
நினைவின்றி நிகழ்ச்சியில்லை.
நிகழ்ச்சியின்றி காலமில்லை.
காலமில்லையேல் முக்காலமில்லை.
முக்காலமும் இருப்பது நிகழ்ச்சி ஒன்று மட்டுமே.
எக்காலமும் இருப்பது நினைவு ஒன்று மட்டுமே.
நிகழ்ந்த ஒன்றை நினைத்து ஏங்குவது கனவு எனும் கற்பனையாகும்.
நிகழ்ந்த ஒன்று மீண்டும் நிகழவேண்டும் என்று எதிர்பார்த்து
ஏங்குவது கனவாகும்.
நிகழும் ஒன்றை நினைத்து உணர்வது நனவு எனும் வாழ்வாகும்.
நிகழும் ஒன்றை உணர மறந்துவிட்டால் அதுவே சுழுத்தி எனும் மரணமாகும்.
இதுவரை தோன்றியுள்ள யாவும், வந்திருந்தது யாவும்
இப்போது இருப்பது யாவும், இப்போது வாழ்வது யாவும்
இனி வரப்போவது யாவும், இனிவாழப்போவது யாவும்,
இயற்க்கையெனும் ஏதோ எனும் ஒன்று மட்டுமே.
வாழ்பவர் கடவுள்
வாழ்ந்தவர் கடவுள்
வாழயிருப்பவர் கடவுள்
வாழ்வது இயற்கை,
வாழ்ந்தது இயற்கை,
வாழயிருப்பது இயற்கை
அன்பும் அன்பின்மையும், பண்பும் பண்பின்மையும்
ஞானியும், அஞ்ஞானியும்,அறிவுள்ளோனும் , அறிவற்றவனும்
இன்பமும் துன்பமும் , நட்பும் பகையும்
மற்றும் எதை எப்படி கூறினும் இருப்பது யாவும் இயற்கை எனும் கடவுளே.
இயற்கை எனும் கடவுளைத்தவிர வேறு ஒன்று இல்லை
இல்லை இல்லையே.
இயற்க்கையையோ கடவுளையோ வணங்கினாலும் வணங்காவிட்டாலும், பொருள்களின்அமைவுகளுக்கு ஏற்ப நடக்க வேண்டியது நடக்கும்.
நான் இருக்கின்றேன்
நான் வாழும் உலகம் இருக்கிறது.
நான் இருப்பதால் நான் வாழும் உலகை உணர்கிறேன்
உலகை உணர்ந்ததால் உலகில் உள்ளவற்றையும் உணர்பவனும் உணர்ந்தவனும் ஆகிறேன்
நான் உணர்வாகவும், உணர்பவனாகவும், உணர்த்தபடுபவனாகவும் இருக்கிறேன்
அப்படி எனில் உணர வைப்பது எது?
நான் இன்றைய நிலையில் உள்ள இந்த நிலைமைக்கு காரணம் என்ன?
நான் இப்போது வாணிபம் செய்பவனாக இருக்கிறேன்.
நான் ஏன் உலகை ஆளும் அதிகாரியாக இல்லை?
சங்கராச்சியாரும் போப்பாண்டவரும் ஏன் நாத்திகனாக இல்லை?
சிதம்பரம் இராமலிங்கம் கசாப்பு கடை ஏன் வைக்கவில்லை?
பில்கிளின்டன் ஏன் சாராயக்கடை வைக்கவில்லை?
அமெரிக்க ஜனாதிபதி ஏன் விளையாட்டு வீரனாக ஆகவில்லை?
காரல்மார்க்சும் லெனினும் ஏன்தொழில்அதிபராகவும் முதலாளியாகவும் இல்லை?
கருணாநிதி ஏன் காய்கறி வியாபாரியாக இருக்கவில்லை?
எம்ஜியார் ஏன் ஏற்றுமதியாளராக இருக்கவில்லை?
ஜெயலலிதா ஏன் மருந்துக்கடை வைக்கவில்லை?
இனிப்பு ஏன் துவர்ப்பதில்லை?
கசப்பு ஏன் இனிப்பதில்லை?
உப்பு ஏன் கார்ப்பதில்லை?
காரம் ஏன் கசப்பதில்லை?
புளிப்பு ஏன் உவர்ப்பதில்லை?
துவர்ப்பு ஏன் எல்லாமாக இருக்கவில்லை?
இவைகள் எல்லாம் இவ்வாறு ஏன் இருக்கிறது என்று கேட்டால்,
ஆன்மீகவாதியும், மத மற்றும் சமயவாதிகளும்,
மாயை என்றும், விதி, பாவம், புண்ணியம்,கர்மா.வினை என்றும்,
பகுத்தறிவுவாதி மதி என்றும் அறிவு என்றும், முயற்சி என்றும்,
விஞ்ஞானிகள் இயற்பியல் உயிரியல் வேதியியல் என்றும் கூறுகின்றனர்.
{விஞ்ஞானிகள் விளக்கம் கூறவும் மாட்டார்கள்.
எது கூறினும் அதற்கு மாற்று கேள்விகளை கேட்டு,கேள்வி கேட்டவர்களை திணரச்செய்வார்கள்.மேலும் கூறுவர், ஒருகாலத்தில் இவைகளுக்குஎல்லாம் விடை கண்டுபிடிக்கப்படும் என்று.}
எல்லாம் எரிகின்ற நெருப்பைப்போலவும், உருகுகின்ற பனியைப்போலுமாகும்.
இரண்டுக்கும் நிலையான உருவம் எது? அவரவர் ஆயிரம் காரணம் கூறி அனுமானம் எனும் அறியாமையை வெளிப்படுத்தினர். தெரியாததை தெரிந்து கொண்டனர்.அவ்வளவே.
எனது அனுமானம் என்ன என்றால்,
இவைகள் யாவும் இயல்பு,
இவைகள் யாவும் சுபாவம்,
இதுவே இயற்க்கை, இதுவே விதி.
அறியாமை வெளிப்பட்டபோது அதனை அறிவு என்றனர்.
ஏனெனில் அறியாமை நீங்கிவிட்டால் அறிவு மட்டும் தானே இருக்கும்.
விஞ்ஞானம் முதல் தத்துவஞானம் வரை எல்லாம் அனுமானம் என்றும் யூகம் என்று கூறப்படும் அறியாமையே ஆகும்.{நிரூகிக்கப்படாதவரை}
யூகம் நிரூபிக்கப்படும்போது விஞ்ஞானம் ஆகிறது.
இருந்த ஒன்றில் இருக்கும் ஒன்று வந்தது.
இருந்த ஒன்றை இருக்கும் ஒன்று நினைத்தது, நினைக்கின்றது, நினைக்கும். அது எது? அதுவே இயற்கை.
மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட இயற்கையே கடவுள்.
இருப்பது இயற்க்கை. மனிதனின் உருவகம் கடவுள்.
இருந்தது இயற்கை
இருப்பது இயற்கை
இனி இருக்கப்போவதும் இயற்கை
இருப்பது கடவுள்
இனி இருக்கப்போவதும் கடவுள்
இருந்ததும் கடவுள்
இக்காலத்திலும் எக்காலத்திலும் முக்காலத்திலும் இருந்தது இருப்பது இருக்கப்போவதுயாவும் கடவுள், கடவுள், இயற்கை எனும் கடவுளே
இங்கு இயற்க்கையே கடவுளாக கூறப்படுகிறது. கடவுளை தவிர்த்து வேறு பெயர்களை அவரவர்விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம் அல்லது கடவுளை நீக்கியும் விடலாம்.
நிகழ்ந்தகாலம் நிகழும் காலம் நிகழப்போகும் காலம் யாவும் நிகழ்காலமே நிகழ்ந்ததொன்றும் நிகழ்வதொன்றும் நிகழப்போவதொன்றும் நிகழ்காலமே நிகழ்ந்தது ஒன்று நினைப்பினால் நிகழ்வது ஒன்றும் நினைப்பினால் நிகழப்போவது ஒன்றும் நினைப்பினால் நினைப்பு இன்றி நிகழ்வது ஒன்றும்இல்லையே
குறிப்பு; நிகழ்காலம் என்பது இறந்த அல்லது முன் இருந்த காலத்தின் மீதியாகும். அல்லது இயக்கத்தின் தொடர்ச்சியாகும்.
நிகழ்ந்ததொன்று நினைப்பினால் நிகழும் ஒன்றும் நினைப்பினால்
நிகழ்ந்த ஒன்றை நினைக்கிறேன் நிகழும் ஒன்றை நினைப்பினால் உணர்கிறேன்
நிகழப்போகும் ஒன்றை நினைப்பினால் நினைக்க முடிவதில்லை ஏன்?
நினைத்த ஒன்றை மறந்து விட்டால் நிகழப்போவதை நினைப்பது எப்படி?
காலம் என்றால் நிகழ்காலம் மட்டுமே
நினைக்கும் காலம் நிகழ் காலமே
பொருள்கள் இருப்பது நிகழ் காலம்.
பொருள்கள் இருந்ததும் நிகழ் காலம்.
பொருள்களுக்கு காலம் இல்லை.
பொருள்கள் இயங்குகின்றன.
பொருள்களின் இயக்கத்தை கவனிப்பவன்{ நோக்குபவன்} காலத்தை உண்டாக்குகிறான்.
பொருள்களும், இயக்கமும், இயக்கத்தை கவனிப்போனும், இருப்பது இடம் என்னும் வெளிக்குள் ஆகும்.
பொருள்களின் இயக்கத்தின், அளவே காலம்
இயற்கை
இயற்கையில் இருந்த அணுக்கள்.
அணுக்களில் ஏற்ப்பட்ட இயக்கம்.
இயக்கத்தினால் ஏற்ப்பட்ட அனுபவம்.
அணுக்களின் அனுபவத்தினால்,
இயற்கையின் அணுக்களில் இருந்து தோன்றிய அறிவு.
இயற்கையெனும் அறிவில் தோன்றிய நிலைபெறவிரும்பும் ஆசை. ஆசையினால் தோன்றிய முயற்சி.
முயற்சியினால் தோன்றிய ஆணவம். ஆசை, முயற்ச்சி, எனும் தன் முனைப்பு ஆகியவற்றைக்கொண்ட ஆளுமை. EGO.
சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக்கொண்ட ஆளுமை
சூழ்நிலைகளை புரிந்து இயற்கையை ஆள தெரிந்துகொண்ட ஆளுமை. இயற்கையை தன் வசப்படுத்தி
இயற்கையை சுதந்தரித்துக்கொண்ட ஆளுமை.
ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு இயற்கையை தன் ஆளுமையின் கலைகளால்,{திறமையால்} அனுபவங்களால், இயற்க்கையில் இருந்த அணுக்களைக்கொண்டு,அணுக்களுக்கு வடிவத்தை கொடுத்து இயக்கி வருகின்றது.
இந்த ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொள்ள, இயற்கையின் இயக்கத்தை கூர்ந்து கவனித்தும்,
இயற்க்கையின் இயக்கத்தின் நுட்பங்களை உணர்ந்தும், ஊகித்தும், இயக்கத்தில் சிக்குண்டு அனுபவித்தும்,
அனுபவித்தும், யூகித்தும், அறிந்தவற்றைக் கொண்டு அணுக்களின் மீது பிரயோகப் படுத்தியும்,
பிரயோகப்படுத்தும்போது தோல்விகளை சந்தித்தும்,
பின்னர் தோல்விகளுக்கான காரணங்களை உணரந்து நிவர்த்தி செய்து,
தன் ஆற்றலை பெருக்கி, இந்த ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டது. எங்கு? எங்கெங்கும்.
இந்த ஆற்றலை கொண்டு மற்ற அணுக்கள் எப்படி இயங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்கின்றது.
ஆதி அனாதியான இயற்க்கை.
அனாதி இயற்கையில் தோன்றிய அறிவு எனும் ஒளி ஆற்றல்,
இயற்கையை தன்வசப்படுத்தி
இயற்கையை இயக்குகின்றது.
இந்த ஒளிஆற்றலுடன்,வெப்பமும்,சப்தமும் இணைந்தே இருக்கும்.அதாவது ஒளி, ஒலி, வெப்பம்,ஆகிய மூன்றும் எப்போதும் இணைந்தே இருக்கும். இதுவே ஆளுமை பண்பு எனும் ஆதி இயற்கையாகும். இதன் பெயர் என்ன? அவரவர் விருப்பத்தின்படி வைத்துக்கொள்வோம்.
நானாக நான் மட்டும் இருந்தேன்.
என்னிலிருந்தே நான் என்னை படைத்தேன்.
என்னை படைத்து என்னில் இருந்தே நான் ஆனந்தம் அடைய முயல்கின்றேன்.
தான் தானாகவும், தாம் தாமாகவும், அது அதுவாகவும்,
எது எதுவாகவும் எப்படி தானாக உண்டாகியதோ
அதுவே நான். இறைவன். அதுவே இயற்கை.
இயற்கை எனும் கடவுள் இயங்குகிறார் அவருக்குள் இருந்தவைகள் வெளிப்படுகின்றன. வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
அதுவே விஞ்ஞானம், ஞானம் ,மெய்ஞானம்மாகும்.
மற்றும் இதுவே பிரபஞ்சம், வெளி, காலம் எல்லாம் ஆகும்.
ஏன் இயற்க்கைக்கும் தெரியாது
தெரிந்து இருந்தால்வெளிப்படுத்தியிருக்கும்.
வெளிப்படுத்தும்போது அறியாமை வெளியேறும்.
அறியாமை வெளியேறியபோது அறிவு விளங்கும்.
அதாவது அறிவு வெளிப்படும்.
சுருங்கக்கூறின்
இயங்குவது இயற்கை, அதுவே எல்லாம் .அதுவே கடவுள். அதுவே நாம்.
இயற்கையின் பெயரைச்சொல்லியும் இறைவன் பெயரைச்சொல்லியும் இவைகளை இல்லைஎன்று மறுத்தும், மக்களின் அறியாமையை உபயோகப்படுத்தி மக்களைச் சுரண்டும் கூட்டத்தினரைதடுப்பது எவர்?
இயறகைதான்,கடவுள்தான், நாம்தான் தடுக்க வேண்டும்.
இதற்கு எவர் இசைவர்
இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பவர் எவர்.
தடுக்க வந்த எத்தனையோ நபர்கள் மக்களின் ஒத்துழைப்பின்மையால் மனம் வருந்தி சென்றுவிட்டனர்.
மாறும் என்பது மாறாது என்னும் நியதியின்படி,நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்
நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.
விரிவடைந்துகொண்டு இருக்கிறோம்.
உள்ளது உள்ளபடிஇருக்கிறது.அது இயங்குகிறது. அவ்வளவுதான்.
இவற்றை விரிவடைவதாக கருதுகிறோம்.
உதாரணமாக, 1000 கிலோ இரும்பை ஒரே கட்டியாக இருப்பதாக வைத்துக்கொண்டால்,
இது இயற்க்கையாகும்.
இதுவே மாறுதலுக்கு உட்பட்டு பொருள்களாக மாறும் போது விரிவடைவதாககருதுகிறோம்.
நாம் கடவுளாகிய நமக்குள் இருப்பவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி மகிழ்கின்றோம். கடவுள் எனும் இயற்கையாகிய நமக்குள் இருந்த ஞானம் வெளிப்பட்டபோது விஞ்ஞானமாகும். {விளங்கிய ஞானம் விஞ்ஞானம்}
ஞானம் என்பது அறிவாகும்.
கடவுளே, கடவுளை, தானாக, தனக்காக, இயக்கும் இயக்கமே பிரபஞ்ச இயக்கமாகும்.
இருக்கிறது என்று சொன்னாலும் இருந்தது என்று சொன்னாலும் இனியும் இருக்கும் என்று சொன்னாலும் அது இயற்க்கை எனும் கடவுள் மட்டுமே.
இறைவன் எனும் இயற்கையானது தன்னிடம் அணுக்களாக உள்ள ஆன்மா எனும் அணுக்களைநான் எனும் ஆணவத்தின், ஆசையின்படியும், தகுதி எனும் அனுபவ பக்குவத்தின் படியும்தேகத்தை கொடுத்து, தேகத்தை இயக்கி இன்ப துன்பங்களை அடையச்செய்கிறது.இறைவன் எனும் இயற்க்கை தனக்கு எந்தவித விருப்பு வெறுப்பின்றி அணுக்களாகிய ஆன்மாக்களை இயக்குகின்றது. இறைவனின் இந்த நிலை அறிவுநிலை எனப்படும். இது இயற்க்கை அறிவாகும். இந்த பிரபஞ்சம் அளவுகடந்த,வல்லமையும் இயக்கங்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு ஏற்ப்பட்ட இயக்கத்தினால் வந்த நாம் காலம் காலமாக பிரபஞ்சத்தின் உண்மையை அறியமுயன்று கொண்டு வந்தோம். அவ்வாறு முயலும்போது என்னற்ற அதிசயங்களை கண்டோம். அவை நம்மால் மட்டும் நிகழ்ந்தது என்று நம்பினோம். நாமும் இப்பிரபஞ்சத்தின் ஒரு உறுப்பு[அங்கம்]தான் என்றும் இறைவனாகிய இயற்க்கையின் அங்கம் என்பதை உணரத்தவறினோம் நாம் காணும் இயற்க்கையின் வல்லமை நம்முள் உள்ளது தான் என்று உணராமல் வெளியே இருப்பதாக கருதினோம். நம்மில் சிலர் முற்க்காலத்தில் இந்த உண்மையை உணர்ந்து தனக்குள் இருந்த இயற்க்கையின் அற்புதஆற்றலை வெளிப்படுத்தினர். அப்போது நாம் பிரமித்து அவர்களைக்கண்டு அஞ்சினோம். அவர்களை நாம ¢கடவுள், கடவுளின் தூதர், குரு, ஞானி, சித்தர், யோகி, ரிஷி,முனிவர
என்றுகருதி அவர்களை வணங்கினோம். அவர்களின் வாழ்வுக்கு பின்னர் அவர்களின் உருவத்தைகோவில்களில் வைத்து வழிபாடு செய்து வந்தோம். நாம் பயந்து வழிபாடு செய்து வந்தவர்கள்,நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்க்காக வழி முறைகளைக்கூறினர். அவர்கள் கூறிய கருத்துக்களை நுட்பமாகவும் , மறைவாகவும் வைத்து, கதைகளாகவும் பரிபாசையாகவும்[பலரும் பலவிதமாக புரிந்து கொள்ளுமாறு]கூறினர். அவர்கள் கூறியது, போற்றிப்பாடியது எல்லாம், இயற்கையை இறைவனாக உருவகப்படுத்தி கூறினர். இயற்க்கையை இயற்க்கை என்று கூறி இருந்தால் மக்கள் இயற்க்கையின் சிறப்பை உணரமாட்டார்கள் என்ற காரணத்தினால் அšவாறு கூறினர். அதனால் இயற்க்கையை இறைவனாக உருவகப்படுத்தி கூறினர்.
எனக்குள் தோன்றிய சிந்தனைத்துளிகள்
இயந்திரம் = தேகம்.
இயந்திரம் இயங்க எரிபொருள் = அணுக்கள்,உணவு, காற்று.
இயந்திரத்தை உபயோகிப்பாளர் = ஆன்மா, ஒளி.
இயக்கம் = ஒளி, ஆன்மா, ஒளி ஆற்றல். light power
இயக்கி = எண்ணம், மனம், soft ware,
இயங்கு பொருள் = உடல் உறுப்புகள்,spare parts, hard ware.
அறிவு = சிவம்.
இதுவே ஆன்மா. இதுவே ஆளுமை பண்பு. பொருள்களின் அமைப்பு, இயங்கவேண்டியவிதம் ஆகியவற்றை தீர்மானிக்கின்றது.
அறிவும், சிவமும், இயங்காது.
பிற பொருள்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.
அறிவு நிர்ணயம் செய்தபடி இயங்குவது சக்தி ஆகும்.
சக்தியே பொருள்களை இயக்குகின்றது. இதுவே மனம் ஆகும்.
மனம் தானாக இயங்காது. அறிவின் தீர்மானப்படி மனம் இயக்கும்.
மனம் எதனை இயக்கும்?
மனம் உடலை இயக்கும்.
அறிவு நிச்சயிக்கும்.
மனம் இயக்கும்.
உடல் இயங்கும்.
அறிவை இயக்குவது எது?
அறிவை இயக்குவது அனுபவம்.
.E= MC* என்பதில்
Eஎன்பது சக்தி ஆகும்.
M என்பது பொருளின் பொருண்மை என்னும் நிறை ஆகும்.
C என்பது ஒளியின் வேகம் ஆகும்.
அதாவது ஒரு பொருளின் சக்தி என்பது பொருளின் அமைவும், ஒளியின் வேகத்தின் இருமடங்கின் பெருக்கமும் ஆகும். இது விஞ்ஞானத்தில், அணுவின் பொருண்மை விதியாகும்.
அணு என்றால் ஆன்மா.
ஆன்மா என்றால் விந்து.
விந்து என்றால் ஒளி.
ஒளி என்றால் அகரம்.
அகரமே அணைத்துக்கும் ஆதி வித்தாகும்.
அகரமாகிய ஒளியில், ஒலி இருந்தது.
ஒலி என்றால் உகரமாகும்.
அகரமும், உகரமும் சேர்ந்துள்ளபோது மகரமாகும்.
மகரத்தில் இருந்து வெளிப்பட்டதுஅக்னி ஆகும். அல்லது மகரமே அக்னியாகும்.
ஆதி இருந்தது அது எல்லையற்ற எல்லையாக இருந்தது.
அது சிவம் என்னும் அகரமாக, அறிவாக ஒளிர்ந்தது.
அது அதிர்ந்தது, அசைந்தது,
அதுவே உணர்வானதுமாகும்.
உகரம் எனும் சக்தியாக இருந்தது.
இதுவே அசைவதற்க்கு முன்னர் ஒளிர்வாக இருந்தது.
ஆன்மா என்னும் அணு இருந்தது.
அதற்குள் அகம் இருந்தது.
அகத்துள் அகரமாகிய அறிவு இருந்தது.
அகத்துக்குள் உகரமாகிய உணர்வு இருந்தது.
அந்த உகரமாகிய உணர்வு௧கு, அகரமாகிய உள்ளத்தில் இருந்து உள்ளும் புறமும் கடக்கும் தன்மை இருந்தது.
இந்த ஆகாயத்தின் அகத்தில் அக்னி இருந்தது.
இந்த அக்னியில் சப்தம் இருந்தது.
இதற்கு நாதம் என்றும் உகரம் என்று பெயர்.
இந்த உகரத்தில் ஒளி இருந்தது
இதற்கு விந்து என்றும், அகரம்என்றும் பெயர்.
இந்த ஆன்மா, ஒளி, விந்து,அகரம்,{ நான்கும் ஒன்றே}
இதுவே உற்பத்திக்கு{ காரணமானது.}
இந்த அகரமான ஒளி உலக உற்பத்திக்கு வித்தாக அமைந்தது.
இந்த அகர ஒளியில் உடம்பு எனும் உகரம் தோன்றும் தன்மையிருந்தது.
இந்த உகரம் தேகம் தோன்ற இடமானது.
இதுவே காரியமானது.{ காயமானது.உடம்பு }
இந்த உகரம் எங்கும் வியாபித்து விசாலமாகும் தன்மையிருந்தது.
{ஆகாயமானது.}
இந்த காரணத்தையும் காரியத்தையும் உள்ளடக்கியிருந்ததுதான் ஆகாயம் ஆகும்.
இந்த ஆகாயம் விரிவடையும் சுபாவத்தை உடையதாகும்.
இந்த ஆகாயம் பூரணமாக இருந்தபோது சிகரம் எனும் சிரசாகும்.
இந்த ஆகாயம் எனும் சிரசில் வகரம்,அல்லது பகரம் இருந்தது.
இந்த வகரம் ஆகிய பகரத்தில், மையம் இருந்தது.
இதற்கு புருவமையம், என்றும் உருவ மையம் என்றும் பெயர்.
இதுவே அனைத்து கருத்துக்களின், கருத்து மையமான கரு மையமாகும்.
இம்மையத்திற்க்கு அனைத்தையும் கிரகிக்கும்{உள்வாங்கும்} தன்மை இருந்தது.
இது கூடுதலும், குறைதலும்,{ஏற்ற,இறக்கம்} உடைய பண்பை பெற்றிருந்தது.
இதுவே அனைத்திற்க்கும் முதன்மையாகவும், தலைமையாகவும் இருந்தது.
இதிலிருந்து வெளியேறும் எல்லாவற்றிலும் இதுவும் இதன் தன்மையும் இருப்பதாக இருந்தது.
இவ்வனைத்து தன்மைகளையும் உடையதாகி அகம் இருந்தது.
இந்த அகத்திற்க்கு புறம் இருந்தது.
அகத்தில் அக கவர்ச்சி அதிகரித்தது.
இதனால் அகத்தில் உள்ள அக்னி,ஆளுமை கொண்ட ஒளியாக, வெளியேறும் நிலை ஏற்ப்பட்டது.
இந்த ஆளுமை கொண்ட ஒளியுடன் வடிவமைக்கும் தன்மையான ஒலிக்கு இயங்கும் நிலை ஏற்ப்பட்டது.
ஒளி= இயக்கும் ஆற்றல், ஒலி= இயங்கும் கருவி.
அக்னியின், ஆளுமை கொண்ட ஒளிக்கு அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலை ஏற்ப்பட்டது.
அதனால் அதனிடமே உள்ள, வடிவமைக்கும் தன்மையான ஒலிக்கு கட்டளயிட்டது. {எப்படி இயங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தன்மைக்கு எண்ணம் என்று பெயர்.எண்ணத்தின்படிஇயங்குவது எழுத்து ஆகும்.} எனவே ஒலி எண்ணாகவும் எழுத்தாகவும் வார்த்தையாகவும், வாக்கியங்களாகவும் அமைத்துக்கொண்டது.இவ்வாறு அனைத்து வல்லமைகளையும் கொண்டு மனித தேகமும் விளங்கும் தன்மையுடையதாக இருந்தது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு பொருளிலும், இந்த பிரபஞ்சத்தைதோற்றுவித்த மூலப்பொருளாகிய அகர ஒளியாகிய சிவம் அமர்ந்து {இருந்து} செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும்அமைந்திருப்பது மனித தேகமாகும்.
கடவுள் வாழ்த்து எனும் இயற்கை வாழ்த்து.
ஏகம் அனேகம் அனேகமும் ஏகம்
இயற்க்கைக்குள் கடவுள்
கடவுளுக்குள் இயற்க்கை.
இருப்பது யாவும் இயற்க்கை எனும் கடவுளுக்குள்
இருப்பது யாவும் கடவுள் எனும் இயற்க்கை ஆகும்
எல்லாமாய் இருப்பது கடவுள் எனும் இயற்க்கை ஆகும்.
என்னுள் இருப்பதும் கடவுள் எனும் இயற்க்கை ஆகும்.
என்னுள் இருப்பதும் உன்னுள் இருப்பதும். உம்முள்இருப்பதும் எம்முள்இருப்பதும் எல்லாமாய் இருப்பதும் எங்குமாய் இருப்பதும் நம்முள் இருப்பதும் நாமாய் இருப்பதும் அதுவாய் இருப்பதும் எதுவாய் இருப்பதும் தானாய்இருப்பதும் நானாய் இருப்பதும் ஒன்றாய் இருப்பதும் பலவாய் இருப்பதும் கடவுள் எனும் இயற்க்கையே ஆகும்.
தோற்றமும் தோன்றி உள்ளவைகளும் இருப்பும் இருப்பவைகளும் இயக்கமும் இயங்குபவைகளும் வாழ்க்கையும் வாழ்பவர்களும் வாழயிருப்பவர்களும் வாழ்ந்தவர்களும் நிகழ்வாகவும் நிகழ்காலமாகவும் இறப்பாகவும் இறந்தகாலமாகவும் எண்ணங்களாகவும் ஏக்கமாகவும் எதிர்பார்ப்புகளாகவும் எதிர்காலமாகவும் இருப்பது யாவும் கடவுள் எனும் இயற்க்கையே ஆகும்.
வானமாக இருப்பதுவும் காற்றாக இருப்பதுவும் நெருப்பாக இருப்பதுவும் நீராக இருப்பதுவும் இவை யாவும் கூடி நிலமாக இருப்பதுவும் இவற்றிடையே ஒலியாக, ஒளியாக இருப்பதுவும் இவற்றிடையே உடலாகவும்,உயிராக இருப்பதுவும் இவையெல்லாம் உள்ளதாகவும் விளங்கி இருப்பதுவும் இவையெல்லாம் இல்லாமல் மறைந்து இருப்பதுவும் இவ்வாறு தோன்றியும் மறைந்தும் இனபுற்றும் துன்புற்றும் சலிப்படைந்தும் சலிக்காமல் இயங்குவதுமாய் இருப்பதுவும் ஏகமாகவும் அனேகமாகவும் இருப்பதுவும் ஏகமாய் எங்கும் விளங்கும் இயற்க்கையெனும் கடவுள்ஆகும்.
வினையும் அவனே வினைப்பயனும் அவனே.
வினையைச்செய்பவனும் அவனே.
செயலும் அவனே செயலின் பயனும் அவனே.
செயல் புரிவோனும் அவனே. செயலின் பயனை நுகர்வோனும், நுகரச்செய்வோனும் அவனே.
எப்படி கூறினும் இயற்க்கையே இறைவன் இறைவனே இயற்க்கையாகும்.
ஆதியில் எல்லாவற்றையும் உள்ளடக்கி எல்லாமாகும் வல்லமையுடைய ஆதிபரம் சி என்றும்,சிகரம் என்றும், சிவம் என்றும், சத்து, சித்து, ஆனந்தம், என்னும் பெயர் கொண்டு விளங்கியது. இது தன்னிலையாகும். இதுவே பதி நிலையுமாகும். குயவனிடம் உள்ள செம்மண்ணானது மண்ணாக இருக்கும் போதும், காகிதமானது ஒரு ஓவியனிடம் இருக்கும் போது, எந்த வகையான ஓவியமும்,அல்லது உருவமும் வரையப்படாதநிலையில் இருக்கும் போதும், மண்ணும்,காகிதமும் எல்லா உருவத்தையும், ஏற்க்கும் தன்மையும்,தகுதியும் உள்ளது போல் ஆதியில் இயற்க்கை எனும் பரம் பொருள் இருந்தது. மண்ணும் காகிதமும்,பரம் எனும் பதி நிலையாகும். மண்ணும் காகிதமும் உருவம் பெற்ற போது பசு நிலையாகும். எல்லாமாகும் வல்லமையை உள்ளடக்கி பதியாகவும் , பரம்பொருளாகவும், சத்தாகவும் பெயர்கொண்டு, விளங்கிய இயல்பு நிலையாகவும், தன்னிலையாக இருந்த இயற்க்கை செயல்பட ஆரம்பித்து சித்து என்னும் பெயர் கொண்டு முன்னிலையானது. இது பசு நிலையாகும். குயவனிடம் இருந்த மண்ணும், ஓவியனிடம் இருந்த காகிதமும், மட்பாண்டமும், ஓவியமும் ஆனதுபோல் பதிநிலையில் இருந்து சித்து வெளிப்பட்டு பசுநிலையானது. ஆதியில் தன்னிலையில் சிவம் இருந்தது. தன்னிலை நின்ற சிவம் வெளிப்பட்டு முன்னிலையானது. முன்னிலை வந்த சிவம் படர்க்கையானது. தன்னிலையான சிவம் படர்க்கையாகி பாடுற்றது. சத்து சித்தாகி, சித்தில் சத்து தங்கியபோது சத்தும் சித்தும் சேர்ந்து சத்சித்தாகி ஆனந்தம் கண்டபோது சச்சிதானந்தமானது. இயற்க்கை எனும் இறைவனாகிய குயவனிடம் மண்ணும், மட்பாண்டம் செய்யும் அறிவும்,அழகைக்கண்டு ஆனந்திக்கும் பண்பும், இருந்தது.மட்பாண்டத்தை படைத்து குயவனாகியஇயற்க்கை எனும் இறைவன் ஆனந்திக்கின்றான்.
இயற்க்கை எனும் இறைவனாகிய ஓவியனிடம், காகிதமும், ஓவியம் வரையும் அறிவும், ஓவியத்தைக்கண்டு அதன் அழகை இரசிக்கும் பண்பும் இருந்தது ஓவியத்தை வரைந்த ஓவியனாகியஇயற்க்கை எனும் இறைவன் இன்புறுகிறான். இறைவனே உலகைப்படைத்து, இறைவனே உலகமாகவும், உயிர்களாகவும் விளங்க, இன்ப துன்பங்களாவும், இன்ப துன்பங்களை நுகர்வோனாகவும் விளங்குகிறான். கடவுள் முன்னுரை கடவுளை இதுவரை எவரும் கண்டதில்லை. ஏனெனில் கடவுள் என்பது, முதலில் தோன்றிய மனிதனின், கற்பனையாகும். அல்லது அனுமானம் ஆகும். அதாவது மிக உயர்ந்த இலக்கின் கற்பனையே கடவுள் ஆகும். இப்பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையில் இருந்த மாபெரும் முழுமையான ஆற்றலே கடவுளாகும். இந்த மாபெரும் ஆற்றலில் இருந்துதான் இப்பிரபஞ்சம் தோன்றியது. எல்லா பொருள்களிலும்இந்த ஆற்றல் உள்ளது. ஆனால் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு விகிதத்தில் ஆற்றல் அமைந்து பொருள்களை இயக்குகின்றது. இப்பிரபஞ்சத்தை எந்த ஆற்றல் தோற்றுவித்ததோ, அந்த மூல ஆற்றலே ஒவ்வொரு பொருள்களிலும் , மற்றும் உயிர்களிலும் இருந்து இயக்கி கொண்டிருக்கிறது. இந்த மூல ஆற்றலின் விகிதம் முழுமை பெற்று மனித தேகத்தில் அமைந்துள்ளது. கடவுளே பிரபஞ்சமாகி இருக்கிறார். கடவுளே மனித தேகத்தில் இருக்கிறார். கடவுளே எல்லா உயிர்களிலும் இருந்து இயக்குகின்றார். மனித தேகத்தில் உள்ள கடவுளை மனிதன் காணவேண்டும். தனகுள் உள்ள கடவுளை மனிதன் காண வேண்டும். தனக்குள் உள்ள உயர்ந்த ஆற்றல் எனும் கடவுளை வெளிப்படுத்தவேண்டும் ஆனால் மனிதனோ கடவுளை வெளியே தேடுகிறான். வெளியே கடவுளை இதுவரை எவரும் கண்டதில்லை. தனக்குள்ளே கடவுளை கண்டதாக பெரியோர்கள் கூறியுள்ளனர். நாமும் நமக்குள்ளே உள்ள கடவுளை காண முயற்ச்சிப்போம். கடவுள் என்னும் உயர்ந்த சக்தி பெற்ற மனிதனை இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.அல்லது மனிதன் அந்த நிலைக்கு உயர வேண்டும். அல்லது உயர்ந்த சக்தியை கடவுளாக ஏற்றுக்கொள்வது ஆகும் . கடவுளாக ஏற்றுக்கொள்வதும் ,சக்தியை சக்தியாகவே, அல்லது இயற்க்கையாகவே ஏற்றுக்கொள்வதும் அவரவர் விருப்பம் ஆகும். அதாவது கடவுள் என்பது மனிதனால் தனக்குள்ளே கண்டு பிடிக்க பட வேண்டிய ஒன்று ஆகும்.அல்லது அந்த நிலையை அடைந்து கடவுள் நிலையை உணர்ந்து அனுபவிப்பது ஆகும்.
கடவுளைப்பற்றி கற்பனை தோன்றியது எப்படி? உலகத்தில் தன்னைவிட உயரந்த இயற்க்கை சக்தியை கண்டான். அந்த இயற்க்கையிலிருந்து தானே நாமும் தோன்றினோம், நமக்கு ஏன் அந்த ஆற்றல் இல்லாது போயிற்று என்று சிந்திக்க தொடங்கினான். இப்போது இருக்கும் ஆற்றலைவிட உயர்ந்த ஆற்றலை பெறுவது எப்படிஎன்னும் முயற்ச்சியினால் அடைந்த வெற்றிதான் ஞானமும், விஞ்ஞானமும் ஆகும். எண்ணியதை நிறைவேற்ற முயற்ச்சி வேண்டும். முயற்ச்சி செய்ய, அதற்க்கான பயிற்ச்சி வேண்டும். பயிற்ச்சி செய்தால் அதற்க்கான அனுபவம் கிடைக்கும். அனுபவத்தினால் உயர்ந்த நிலையை அடைவதற்க்குரிய முயற்ச்சி அறிவு கிடைக்கும். ஞானம் என்பது எண்ணங்களினால் மட்டும் சிந்தனை செய்து தான் மட்டும் ஆனந்தப்பட்டுதிருப்தி அடைவது. விஞ்ஞானம் என்பது தன் எண்ணங்களை புறப்பொருள்களில் செலுத்தி வெற்றிகண்டு எல்லோரும் ஆனந்தப்படுவது ஆகும். மனிதன் எப்போதும் முயற்ச்சி செய்து மிக உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினால் ஆரம்பகால மனிதனின் கற்பனையின் மிக உயர்ந்த இலக்குதான் கடவுள். அதனால்தான் தன்னைவிட கடவுளை உயர்ந்த நிலையில் வைத்து, தனக்கு இல்லாத குணங்களையும், ஆற்றல்களையும் கடவுளுக்கு இருப்பதாக கூறி, கடவுள் நிலையை அடைய மனிதன் முயன்று கொண்டு வருகிறான். கடவுள் என்பது கற்பனையாகும். இப்பிரபஞ்சத்தின் அளப்பறிய ஆற்றலை அடைய எல்லா உயிர்களும் முயற்ச்சிக்கின்றன. இந்த வெற்றியின் வரிசைக்கிரமம் பரிமான வளர்ச்சி ஆகும். பிரபஞ்சத்தின் வளர்ச்சி என்பது கற்பனைகளின் வெற்றி ஆகும். பிரபஞ்சம் என்பதே மனிதனின் கற்பனை ஆகும். ஏனெனில் ஆகாயம் மட்டுமே அடிப்படைஉண்மைப்பொருள் ஆகும். அரிசியை{RICE}க்கொண்டு, மனிதனின் சிந்தனையாலும், கற்பனையாலும், மாவு, இட்லி, தோசை,ஆப்பம்,பணியாரம், கொலுக்கட்டை, போன்ற பல நிலைகளை உருவாக்கி உள்ளான். அரிசி மட்டுமே அடிப்படை உண்மைப்பொருள் ஆகும். இயற்க்கையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் தனது தேகத்தில் பொருத்தி தன்னை போலவே கடவுளை உருவகப்படுத்தினான். உதாரணத்திற்க்கு இயற்க்கையின் ஆற்றலுக்கு ஒவ்வொரு பெயராக வைத்து பிரம்மா, விஷ்னு, ருத்திரன்,என்றும் , படைத்தல், காத்தல், அழித்தல், முதலிய தொழில்களையும் பொருத்தி அமைத்துக்கொண்டான். தாவரங்கள்,மிருகங்கள், மற்றும் எல்லாவற்றையும்விடஇயற்க்கையின் மனிதனாகிய தான்மட்டும்,
இவற்றை பின்வரும் தனதுசந்ததியினர் உணர்ந்து கொள்வதற்க்காக உடம்பின் நுட்பங்களை கோவிலாக அமைத்தான். அவர்கள் கூறிவற்றின் அடிப்படைக்கருத்து என்னவெனில் உடம்பில் இயங்கும் ஒவ்வொரு இயக்கத்தையும் , நான்{தான்} செய்யவில்லை, எனவே ஏதோ ஒரு ஆற்றல் செயல்படுத்துகிறது என்றும் அதற்க்கு கடவுள் என்றும் பெயரிட்டான். இரத்த ஓட்டத்தை நான் நடத்தவில்லை,சுவாசத்தை நான் நடத்துவதில்லை, இதய துடிப்பை நான் நடத்துவதில்லை. எனவே ஏதோ ஒரு ஆற்றல் நடத்துகிறது அதைக்கடவுளாக கருதினான். இவற்றை நாமும்,{?} விஞ்ஞானிகளும், இயற்க்கை என்று கூறுகிறோம். உடலின் நுட்பங்களை ஆலயமாக அமைத்ததை மறைத்து,கடவுள் எங்கோ ஓரிடத்தில் இருப்பதாகவும், கூறி பின்னால் வந்தவர்கள் இவற்¢றைக்கொண்டு பாமர மக்களிடம் பொருள் பறிக்க ஆரம்பித்தனர். அதாவது இயற்க்கையில் உள்ள. இயற்க்கையை உண்டாக்கிய, இயற்க்கையின் மூல ஆற்றல் தனக்குள்ளும் தனைச்சார்ந்த அனைத்து பொருள்களிலும் இருக்கவேண்டும் என்றும், தன்னாலும் இயற்க்கையின் உயரந்த ஆற்றலான கடவுள் நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால், தன்னால் உருவகப்படுத்தப்பட்ட, கற்பனை செய்யப்பட்ட, கடவுள் நிலையை அடைய முயற்ச்சி செய்து கொண்டு வருகிறான். இதுவரை உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் யாவும் ஒரே மனிதனின் அறிவினால் அல்ல.
பல தலைமுறைகளின் தொடர் முயற்ச்சி ஆகும். ஒரு மனிதன் அடிப்படை கற்பனையை உருவாக்குவான் இந்த மனிதனை நம்பும்,அல்லது ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் அவனது கற்பனையின் அடிப்படையில் சிந்தனை செய்து அதனை நிரூபனம் செய்வர்.அல்லது மாற்று கற்பனையைகூறிச்செல்வார்கள். பின் வருபவர்கள் மாற்று கற்பனையின்படி முயற்ச்சி செய்து வெற்றிகாண்பர். அல்லது தோல்வி கண்டு விட்டுவிடுவர்.பின்னர் நீண்ட நாள் கழித்து ஒருவர் நிரூபணம் செய்து வெற்றி அடைவர்.
இப்படித்தானஉலகநடைமுறையில் அனுபவமாக நடந்து வருகிறது. இங்கு எல்லா கற்பனைகளும் நிரூபிக்கப்படும் என்று உறுதி கூறமுடியாது. இயற்க்கைக்கு பொருத்தமானதையும்இயற்க்கையில் உள்ளவற்றையும் மட்டும் மனிதன் கற்பனை செய்தால் வெற்றி காணமுடியும். இயற்க்கையை மீறியோ, இயற்க்கைக்கு அப்பால் உள்ளவற்றையோ மனிதன் வெற்றி கொள்ள முடியுமா? என்பதை கூறமுடியாது. காலத்தினால்தான் இதற்க்கு தீர்வுகாண வேண்டும். முதலில் தவறாக அமைந்த கற்பனைகள் பின்னர் சரி செய்யப்பட்டு வெற்Pயு‹ தோல்வியு‹ அடைந்து கடைசியாக வெற்றி அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக