மனிதன் அறிந்து கொள்ள வேண்டியது எது?
இந்த தேகத்தையும் மூளையையும் முழுமையாக உபயோகப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த தேகத்தையும் அறிவையும் சரியாக உபயோகப்படுத்தாமல் வீணாக்குகின்றோம்
சரியாக உபயோகப்படுத்த,
மனதையும் உடலையும் தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
muvairavelu.blogspot.comஇதற்கு அன்பாகயிருக்கவேண்டும்.மனத்தாலோ,சொல்லாலோ, செயலாலோ யாருக்கும் தீங்கு
நினைக்கவோ, சொல்லவோ, செய்யவோ கூடாது. இதை எப்போதும் கடைபிடிக்க பயிற்சி செய்ய வேண்டும்.
இவற்றை கடைப்பிடிக்காவிட்டால் என்ன ஆகும்.
மன அலைச்சல் ஏற்ப்படும்.
இதனால் மன ஒருமை ஏற்ப்படாது.
அதனால் எடுத்த காரியம் வெற்றி அடையாது.
மனம் எதை பற்றுகிறதோ மன ஒருமையுடன் இருந்தால் மட்டுமே, போராடி அதை அடைய முடியும்.
இவற்றை அனுபவித்து அதன் உண்மையை உணர்ந்து கடைபிடியுங்கள்.
ஆதலால்,
தொடக்கூடாததை தொடக்கூடாது,சுவைக்க கூடாததை சுவைக்க கூடாது.
நுகரக்கூடாததை நுகரக்கூடாது. கேட்க கூடாததை கேட்க கூடாது.
பார்க்க கூடாததை பார்க்க கூடாது.சொல்ல தகாததை சொல்லக்கூடாது.
நினைக்க கூடாததை நினைக்க கூடாது.
இப்படி பயிற்சி செய்தால் ஒழுக்கம் ஏற்படும்.
இதனால் மன அமைதி கிடைக்கும்.
மன அமைதியினால் நம் கவனமும் லட்சியமும் உறுதி பெறும்.
இதனால் மன ஒருமை ஏற்ப்படும்.எல்லா காரியங்களும் வெற்றியாகும்.
மனம் எப்போதும் புறத்தே சென்று வியாபித்து அலைந்து உடலின் பலத்தையும்,மூளையின் பலத்தையும் வீணாக்குகின்றது.
இவ்வாறு புறத்தே செல்லும் மனத்தை,
தன்வசமாக உட்புறமாக திரும்பச்செய்தால் மனம் தன் அதிஅற்புத பேராற்றலை வெளிப்டுத்தும்.
இதை லட்சியம் செய்யாமல், மேலும் மனதை தன் வசமாக வைத்திருந்தால் மனம் மறைந்து போகும்.
மனம் இல்லாத நிலையில் எல்லாவற்றையும், எதுவும் செய்யமுடியும்.மனம் தனக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடும் போது நேரம் செல்வது தெரியாது.மனம் தனக்கு பிடிக்காதவற்றைச்செய்யும்போது அல்லது பிடிக்காத சூழ்நிலையில் இருக்கும்போது நேரம் செல்வது மிகவும் தாமதமாகத்தோன்றும்.
இனிய சொல்கூறல்வேண்டும்.
செயல்களில் நேர்மை இருக்கவேண்டும் இவ்வாறு இருந்தால் மனமும் உடலும் அமைதி பெறும்.
எனக்குள் தோன்றிய சிந்தனைத்துளிகள்¢.
இந்தபிரபஞ்சம் எதனை அடிப்படையாக்கெண்டு இருக்கிறது?.
ஆகாயத்தை
இதற்கு முன்னோர்கள் என்ன பெயர் கூறினர்
சிவம், சதாசிவம், இடம், கண், பராபரம் என்று கூறினர்.
இந்த இடம் எனும் ஆகாயத்தில் என்ன இருக்கிறது?
பொருள் இருக்கிறது.
பொருள் என்றால் என்ன? அது எதனால் உருவாக்கப்பட்டது?
அது அணு. அணுக்களால் உருவாக்கப்பட்டது பொருள் ஆகும்.
அந்த பொருளின் நிலை என்ன? உருவம் என்ன?
வாயு நிலை. உருவம் இல்லை. அது அருவம்
வாயு தனக்குள் வைத்திருப்பது என்ன?
வாயு தனக்குள் வைத்திருப்பது வெப்பம் ஆகும்.
வெப்பத்தோடு இணைந்து இருப்பது எவை?
வெப்பத்தோடு இணைந்து இருப்பது ஒளியும், ஒலியும் ஆகும்.
அதாவது ஒளி,ஒலி, வெப்பம், இவை மூன்றும் எப்போதும் இணைந்தே இருக்கும்.
இதற்கு முன்னோர்கள் என்ன பெயர் கூறினர்?
பிரணவம், ஏகத்துவம்,அத்துவைதம்,ஏகன், மும்மூர்த்தி, திருமூர்த்தி, திரிசூலம் என்றும் இன்னும்
அவரவர் மொழிக்கு ஏற்பவும், அவரவர் வாழும் தேசத்திற்க்கு ஏற்பவும் பலவாறு கூறினர்.
இவைகளுக்கு வேறு நிலைகளும் ஏற்படுமா? அவை என்ன?
ஆம், திரவ நிலை, திட நிலை ஆகும்.
எனவே இருப்பது இடம் எனும் ஆகாயம்
ஆகாயத்தில் இருப்பது பொருள் எனும் அணு
அணுவில் தோன்றியது வாயு
வாயுவின் நிலைகள் மூன்று
அவை, வாயு, திரவ, திட, நிலையாகும்
இயல்பான வெப்ப நிலையில் உள்ள அணுக்களுக்கு வாயு என்றும்.
இயல்பான வெப்ப நிலையைவிட தாழ்ந்த வெப்பநிலையில் உள்ள அணுக்களுக்கு திரவம் என்றும்
இயல்பான வெப்ப நிலையைவிட மிக தாழ்ந்த வெப்பநிலையில் இறுகிஉள்ள அணுக்களுக்கு திடப்பொருள் என்றும் பெயர்.
இந்த மூன்று நிலைகளும் உண்டாவதற்க்கு காரணம் அக்னி ஆகும்.
¢.
எனக்குள் தோன்றிய சிந்தனைகள்
வேதாந்தத்திற்க்கும், சன்மார்க்கத்திற்க்கும் உள்ள வேற்றுமை என்ன?
சமயத்திலும், மதத்திலும், வேதாந்தத்திலும் சுத்தத்தையும், தூய்மையையும் தீண்டாமையாக கருதி
பேதம் உண்டாக்கி,ஆன்மாக்களிடம் ஒற்றுமையும் சமரசமும் இல்லாமல் போயிற்று. தூய்மை என்பது மனத்தூய்மை, உடல் தூய்மை, செயல்களில் நேர்மை, ஆகியவற்றை தவறாக கருதி மனிதர்களுக்குள் தீண்டாமையாக மாறிவிட்டது.
வேதாந்தத்தில் தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு பரம்பரையாக தொடர்ந்து அருள் கிடைக்கும் என்று நம்பினர்.
சன்மார்க்கத்தில் தயவும், கருணையும் உடைய அனைவருக்கும் அருள் கிடைக்கும் என்பது
அனுபவம்.
சன்மார்க்கத்தில் முதலில் உயிர்களிடத்தில் அன்பும், தயவும் காட்ட வேண்டும். பிறகு தயவின்
மிகுதியால் யாகம் முதலியவைகளைச் செய்யலாம் என்று வரை முறை செய்யப்பட்டது.
சமயங்களிலும், மதங்களிலும்,வேதாந்தத்திலும் யாகத்திற்¢கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து
உயிர்களிடத்தில் அன்பும், தயவும் காட்டுவதையும் அறவே கைவிட்டனர்.
வெறும் மூடநம்பிக்கையாக்கி விட்டனர்.
வேதம் என்றால் என்ன?
வேதம் என்றால் பேதம் என்னும் மாறுதல் என்பது ஆகும்.அல்லது வேதியல் ஆகும்.
வேதியல் விதிகளுக்கு உட்பட்டது. மாறுதல் என்பது எல்லைகளுக்கு உட்பட்டது.
எது மாறுவது என்பதை குறிக்கிறது.
அணுக்களையும் அணுக்களால் நிறைந்த பொருள்களின் மாற்றத்தையும் குறிப்பது ஆகும்.
ஒன்றிலிருந்து பொருள்கள் மற்றொன்றாக மாறுவதை கூறுவது ஆகும்.
இதற்கு தற்காலத்தில் நாம் வேதியல் என்று கூறுகிறோம்.
வேதம் என்ற வார்த்தையின் மொழி விளக்கம் என்ன?
வேதம் என்ற வார்த்தையின் மூலச்சொல் வேத என்பது ஆகும்.
வேத என்றால் மாற என்று பொருள் ஆகும்.
வேத என்ற வார்த்தையின் கிளைச்சொற்க்கள் வேது, வேதி, என்பது ஆகும்.
வேது என்றால் மாறு என்று பொருள் ஆகும்.
வேதி என்றால் மாற்றம் செய் என்று பொருள் ஆகும்.
வேதியல் என்றால் மாற்றம் செய்யும் பண்பு என்று பொருள் ஆகும்.
வேதியல் = மாற்றம் செய்யும் இயல்பு ஆகும்.
வேதத்தின் சாராம்சம் என்ன? அது எதனை விளக்குகிறது?
பிரபஞ்ச ஆற்றலின், செயல்படும் தன்மையை விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தன்மையையும், அதன் இயல்புகளையும், பிரபஞ்சத்தின் செயல்பாடு, மற்றும்
செயல்முறைகளையும் , பிரபஞ்சம் அமைந்த விதத்தையும், கூறுகிறது.
வேதம் இயல்பானது ஆகும்.
இந்த பிரபஞ்சம்
வேதம் தோன்றுவதற்க்கு முன்பும்,இருந்தது.
வேதம் தோன்றும் போதும் இருந்தது.
வேதம் தோன்றிய பின்பும், இருக்கின்றது.
வேதம் யாரால் இயற்றப்பட்டது?
வேதம் எவராலும் இயற்றப்படாதது.பிரபஞ்சமும் எவராலும் உண்டாக்கப்படாதது.
வேதம் எப்படி வெளியே கொண்டு வரப்பட்டது?
வேதத்தினால் தோன்றிய மனிதனின் முயற்ச்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
வேதத்தினால் தோன்றிய மனிதன் என்பது, மாறுதல்களை அடிப்படையாக கொண்டு
இயங்கும் பரிமாண வளர்ச்சியில் தோன்றிய மனிதன் என்பதாகும்.
மாறுதல்களை அடிப்படையாக கொண்டது வேதம்.
வேதத்தை அடிப்படையில் வளர்வது பரிமாணம்
பரிமாணத்தில் விரிவானது இப்பிரபஞ்சம்.
வேதத்தில் பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் வேதமும் அடங்கி உள்ளது.
நான்
நான் இப்போது தற்சமயம் இருக்கிறேன்.
இதற்க்கு முன்பு இருந்தாயா?
தெரியாது.
நாளை இருப்பாயா? என்றும் இருப்பாயா?
உறுதி கூற முடியாது.
நான் எங்கு இருக்கிறேன்?
தேகத்தில் இருக்கிறேன்.
நான் என்பது என்ன?
தெரியாது.ஆனால் தேகத்தில் ஏற்ப்படும் இன்ப துன்பங்களை ஏற்பதுவாகவும்,உணர்வதுவாகவும்
அறிவதுமாக உள்ளதை நான் என்று கூறலாம்.
நான் இருக்கும் தேகத்தை உருவாக்கியது எது?
தெரியாது. நான் உருவாக்கவில்லை.
என் தேகம் நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், எனும் ஐம்பூதங்களால் உண்டானதாக முன்னோர்கள் கூறுகின்றனர் இவை எனக்கு ஏற்ப்பு உடையதாகவும் தோன்றுகிறது.
உன் தேகம் பஞ்ச பூதங்களால் தோன்றியதா?
ஆமாம். அப்படித்தான் கருதுகிறேன்.
உன் தேகத்தை எப்படி பெற்றாய்?
என் தாய், தந்தையர் சேர்க்கையால் தாய் மூலமாகப்பெற்றேன்.
உன் தாய் தந்தையருக்கு உன்னை உருவாக்கும் அறிவும் திறமையும் உள்ளதா?
இல்லை. என்னால் கூற முடியாது.
எப்படி கூறுகிறாய்?
என்னை உருவாக்கும் அறிவும், திறமையும் இருந்தால் என்னை அழியாமல் தேகத்தை பாதுகாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என் தேகம் அழிந்து விடுகிறது. நான் இறந்து
விடுகிறேன்.என் தேகத்தை நானும் உருவாக்கவில்லை. தாய் தந்தையருக்கும் உருவாக்கும் ஆற்றல்
இல்லை. அப்படி எனில் என்னால் எவரிடமாவது வேண்டுதல் செய்யப்பட்டோ அல்லது விரும்பபட்டோ ஏதோ ஒரு மாற்று சக்தியால் உருவாக்கப்பட்டதா?அல்லது என் தேகம் தன்னைத்தானே பரிமாணவளர்ச்சியில் உருவாக்கிக்கொண்டதா?
தன்னைத்தானே பரிமானவளர்ச்சியால் உருவாக்கிக்ககொண்டதாக இருந்தால் ஏன் இறவாமல்
பாதுகாக்க தெரியவில்லை?தேகம் அழியாமல் இருக்குமா? அதற்க்கும் திரூபணம் இல்லை.
நிரூபணமாக கூறும் உதாரணங்களும் வாத பிரதிவாதத்துக்கும், சந்தேகத்திற்க்கும் இடமாயுள்ளது.
இறப்பது இயற்க்கை ஆகும்.
இறப்பது இயற்க்கை என்றால்இயற்க்கைக்கு அந்த வல்லமையையும், உரிமையையும், கொடுத்தது யார்?அல்லது எப்படி வந்தது.
இப்படி எல்லாவற்றிற்க்கும் ஏன் எப்படி என்று கேட்டால் முடிவில் உள்ள கேள்விக்கு பதில் இல்லை. ஒரே பதில் அது அப்படி இருக்கிறது. அல்லது அது அப்படிதான் இருக்கும்.
இயற்க்கை தானாக வந்தது என்றால் எப்படி ஏன் வந்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
வேறொரு சக்தியால்{கடவுளால்} படைக்கப்பட்டது என்றால், கடவுள் ஏன் படைத்தார், அவருக்கு
படைக்கும் எண்ணம் ஏன் உண்டாயிற்று அவருக்கு அந்த அதிகாரமும் வல்லமையும் எப்படி வந்ததுஎன்ற கேள்விக்கு பதில் இல்லை.
விஞ்ஞானத்தின்படி, அணுக்கள் எப்படி தோன்றியது அவற்றை உருவாக்கியது எது? தானாக வந்தது என்றால் ஏன்?எப்படி?வந்தது என்றால் இந்த கேள்விக்கு பதில் இல்லை.
ஆன்மீகவாதிகளின் கருத்துப்படியும், இயற்கைவாதிகளின் கருத்துபடியும், விஞ்ஞானிகளின் கருத்துபடியும், இவர்களின் கருத்துக்களுக்கெல்லாம் மூலம் ஏன் எப்படி உண்டானது என்பதற்கு
விடை இல்லை.
உலகத்தில் மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இந்த சிந்தனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்படி விசயங்களைப்பற்றி அவரவர் நிலையில் அவரவர் சிந்தனைக்கேற்ப அவரவர் ஒரு
கொள்கையை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தனர்.
பின்னர் தனது சந்ததியருக்குஇந்த கொள்கையை போதித்து அதனை கடைபிடிக்க வழி வகுத்து சென்றனர்.
உலகத்தில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து,நம் முன்னோர்கள் முதற்க்கொண்டு நம் காலம் வரை பிரபஞ்ச தோற்றத்தை பற்றி தெரிந்து கொள்ள பலவித கற்பனைகளாலும், பலவித அனுமானங்களாலும் முயற்சி செய்து கொண்டு வருகிறோம்.
இது எப்படி என்றால் பிரபஞ்சம் என்னும் எண்ணற்ற மர்மங்களை உடைய அரங்கத்தில் நுழைந்து
ஒவ்வொரு மர்மங்களையும் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா மர்மங்களின் உறைவிடம் அறிவே ஆகும். இந்த அறிவு நம்மிடம்தான் உள்ளது.
எல்லாவற்றையும் தன்வசம், உள்ளடக்கி வைத்துக்கொண்டது பிரபஞ்சம் ஆகும்.
நாம் பிரபஞ்சத்தின் அங்கமாக இருக்கிறோம்.
பிரபஞ்சத்திற்கு புறத்தில் {வெளியில்} எதுவும் இல்லை.
பிரபஞ்சத்தில் உள்ளது பிரபஞ்சத்தை விட்டு விலகி வேறு எங்கும் செல்ல முடியாது.
பிரபஞ்சத்திற்க்கு வெளியே இருந்து வேறு ஒன்று பிரபஞ்சத்திற்க்குள் பிரவேசிக்கவும் முடியாது.
விஞ்ஞானிகளின் கருத்துக்கள்
கண்ணுக்கு தெரியாத அணு, அணுவில் உள்ளது புரோட்டான் என்றும்
புரோட்டானைச் சூழ்ந்துள்ளது நியூட்ரான் என்றும்.
இவற்றை சுற்றி வருவது எலக்கட்ரான் என்றும்
இந்த எலகட்ரான் எட்டு சுற்று பாதைகளில் சுற்றி வருகிறது என்றும்
மேலும் எலக்ட்ரானில் இருந்து போட்டான் photons என்பது வெளிப்படுகிறது
என்றும்புராட்டான்களில் பொடிமங்கள் எனப்படும் quark என்பது உள்ளது என்றும்
ஆனால் இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாது என்றும், இருப்பினும் இவற்றில்
உள்ள ஒளியைஅலைகளாக கண்டுபிடித்து அளவீடு செய்ய முடியும் என்றும்
கூறுகின்றனர்.அணு என்னும் பொருள் இயங்குவதை, வேதியல் மாற்றங்களை,
விஞ்ஞானிகள் மனத்தினாலும்எண்ணங்களினாலும் கருதிக்கொண்டும்,
நினைத்துக்கொண்டும், கற்பனைகளாக உருவாக்கி காரணம் கூறி வருகின்றனர்.
சுருங்ககூறின் பொருள்களை பற்றிய கருத்துக்களே எல்லாம்.
பொருள்களைப்பற்றிய எண்ணங்களே எல்லாம். மற்றபடி அனுமானம் தவிர
வேறொன்றுமில்லை.
அதாவது இருப்பது பொருள் மட்டுமே. இயங்கும் பொருளை விளங்கி கொள்வதற்¢கும் மற்றவர்களுக்கு விளக்கி காட்டும் உதாரணங்கள்தான் இவ்வாறாக கூறி வருகிறோம்.
ஆன்மீகவாதிகளின் கருத்துக்கள்.
ஆன்மா என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? மனம் என்றால் என்ன?
அறிவு என்றால் என்ன? இவைகளுக்கெல்லாம் எவரிடத்திலும் விளக்கம் இல்லை.
ஆன்மா, அன்பு, அறிவு, மனம், இவைகள் கண்ணுக்கு தெரியாதவை.மேலும் இவைகளை எல்லாம்
இயக்கும் கடவுள் உள்ளது என்றும் கூறுவர்.
முடிவாக கூறினால் அணுக்கள் இயங்குகின்றது. அவ்வளவே உலகம், பிரபஞ்சம் எல்லாம்.
இவற்றை பற்றி கற்பனை கருத்துக்கள் அனேகம்.
உலகம் தோன்றிய காலம் முதல் கூறப்பட்டு வரும் கதைகளும், கற்பனைகளும், கருத்துக்களும் ஏராளம்.
அணுவையும், கடவுளையும் இதுவரை எவரும் கண்டதில்லை.
அது இருக்கிறது. உலகம் என்பதும், உலகத்தைப்பற்றிய விளக்கங்களும் அவரவர் கருத்துக்களே
அவரவர் எண்ணங்களே, அவரவர் கற்பனைகளே, ஆன்மீகவாதிகள் இதனை மாயை என்கின்றனர்
ஆன்மீகமோ, அல்லது விஞ்ஞானமோ, எதை கண்டுபிடித்தும் என்ன பயன்?
கீழ் கண்ட உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.
ஒரு அரசனுக்கு இப்பிபஞ்ச வரலாற்றை அறிந்து கொள்ள ஆசை வந்தது. உடனே தன்
மந்திரிகளை வரவழைத்து தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். மந்திரிகள் ஒன்று கூடி
நாட்டில் உள்ள சிறந்த பண்டிதர்களை வரவழைத்து மன்னரின் எண்ணத்தை ஈடேற்றுமாறு
பணித்தனர்.பண்டிதர்கள் ஒவ்வொருவரும் தகவல்களை சேகரித்து தலைமை பண்டிதரிடம்
கொடுத்தனர்.தலைமை பண்டிதர் பத்து குதிரைகளில் ஏற்றி தகவல்களை தலைமை மந்திரியிடம் கொடுத்தனர்.மந்திரி அரசனிடம் சமர்ப்பித்தனர்.அரசன் அவைகளை பார்த்துவிட்டு இவைகளை சுருக்கி கொண்டு வருமாறு பணித்தார். சிலநாட்கள் கழித்து மந்திரிபண்டிதர்களை வைத்து சுருக்கி மூன்று குதிரைகளில் ஏற்றி சென்று மன்னரிடம் சமர்ப்பிக்க, மன்னர் அவற்றையும் சுருக்கி கொண்டு வரும்படி கூற, இறுதியில் ஒரு குதிரையில் ஏற்றிச்சென்று சமர்ப்பிக்க, அவற்றையும்
சுருக்கி வரும்படி கூற, மன்னரின் செயலை தலைமை மந்திரி, ராஜ குருவிடம் கூற, ராஜகுரு ஒரு
ஓலைத்துண்டில் மூன்று வரிகளை எழுதி ஒரு சிறுபேழையில் வைத்து மன்னரிடம் கொடுக்குமாறு
கொடுத்தார்.
அடுத்தநாள் மந்திரி அந்த பேழையை மன்னரிடம் கொடுத்தார்.மன்னர் அந்த பேழையை வாங்கி பார்த்து விட்டு மிகவும் கோபமாக நான் கேட்ட அணைவரின் சரித்திரமும்
இந்த பேழையில் உள்ளதா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று மந்திரி பதில் ஆமாம் என்று
கூறினார். மன்னர் அந்த பேழையை திறந்து ஓலைத்துண்டில் எழுதி இருந்ததை படித்து பார்த்தார்.
அதில் இருந்தது என்ன என்றால். அதில் இருந்த மூன்று வரிகள்.
மனிதர்கள் பிறந்தார்கள். உயிர்கள் பிறந்தன.
மனிதர்கள் வாழ்ந்தார்கள். உயிர்கள் வாழ்ந்தன.
மனிதர்கள் இறந்தார்கள். உயர்கள் இறந்தன.
ஆன்மீக காலமோ, விஞ்ஞான காலமோ, அல்லது அதற்க்கு முந்தைய காட்டுமிராண்டி காலமோ
எல்லா காலத்திலும் நடப்பது இதுதான்.இதன் பயன் என்ன? மனதின் ஆசைகளை நிறைவு
செய்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை உணர்ந்தால் எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்.எனவே ஆசைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். ஆசைகள் ஒழுங்காக இருக்க,
மனதை வசப்படுத்த வேண்டும். மனதை வசப்படுத்த,
மனதை வசப்படுத்துவதின் மகிமையை தாயுமானவர் கூறுகிறார்.
கந்துஉக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒருசிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்துஆட்டலாம்;
வெந்தழனின் இரதம்வைத்து ஐந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுஉண்ணலாம்;
வேறுஒருவர் காணாமல் உலகத்து உலவலாம்;
விண்ணவரை ஏவல்கொளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்றுஒரு
சரீரத்தினும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்நிகர்இல் சித்திபெறலாம்;
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது; சத்துஆகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவுஆனதெய்வமே
தேஜோ மயானந்தமே
எண்ணங்களின் தொகுப்பால் உண்டாவதே மனம்.
எனவே எண்ணங்களில் தூய்மையாக இருக்கவேண்டும்.
எண்ணங்கள் தூய்மையானால் வார்த்தை தூய்மையாகும்.
வார்த்தை தூய்மையானால் செயல்கள் தூய்மையாகும்.
செயல்கள் தூய்மையானால் பழக்கம் தூய்மையாகும்.
பழக்கம் தூய்மையானால் வழக்கம் தூய்மையாகும்.
வழக்கம ¢தூய்மையானால் மரபு தூய்மையாகும்.
மரபு தூய்மையானால் சமுயாயம் தூய்மையாகும்.
இவற்றை பின்பற்றும் வழிமுறைகள் மனிதன்
அறிந்துகொள்ள வேண்டியது என்னும் தலைப்பில் முதலில் கூறப்பட்டுள்ளது.
இவைகளை பயில்வதுதான் முயற்ச்சியாகும்.
இதுதான் நன்முயற்ச்சியோடு இருத்தல் ஆகும்.
வள்ளுவன் கூறியபடி மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.
உள்ளத்தில் உள்ளுவதாகிய, எண்ணுவதாகிய எண்ணங்களில் உள்ள வஞ்சம் ,பொய்,
களவு,சூது, சினம் ஆகிவற்றை நீக்குதல் வேண்டும்.
அதாவது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்,
முதலிவற்றை நீக்குதல் வேண்டும்.
இவைகள் இயற்க்கை அறிவு என்னும் இறை அறிவை மறைத்துக்கொண்டு இருக்கிறது.
இவை நான்கும் இயற்க்கைநிலை எனப்படும், இறைநிலையை
அடைவதற்க்கு உரிய அறச்செயல்களுக்கு தடைகளாகும்.
நம் தேகம் அணுக்களின் சேர்க்கையாகும்.
அணுக்கள் ஒன்றுசேர்ந்து செல் ஆனது.
செல்கள் ஒன்றுசேர்ந்து திசு ஆனது.
திசுக்கள் ஒன்றுசேர்ந்து உறுப்பானது.
உறுப்புகள் ஒன்றுசேர்ந்து உடலானது.
இதை கடை பிடிக்காமல் யோகாசனம், பிராணாயாமம், கண்களை முடிக்கொண்டு
தியானம்செய்வது, மந்திரம் ஜெபித்தல், கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல்,
விரதம் இருத்தல், உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தலால் அற்ப பிரயோசனம்
மட்டும் கிடைக்கும். வெற்றியின்இலக்கான இயற்க்கைநிலையெனும்,
இறை நிலையை அடைய முடியாது.மேற்க்கூறிய ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து,
அவற்றோடு இவைகளையும் கடைப்பிடித்தால் இறைநிலை எனப்படும்
இயற்க்கைநிலையை அடையலாம்.
யோகாசனம் செய்தால் உடலுக்கு வலிமை உண்டு.
தியானம் செய்வதாலும், மந்திரம் ஜெபித்தலாலும், ஒரு உருவத்தை நிணத்துக்
கொண்டிருந்தாலும்பிராணாயாமம் செய்வதாலும் இவைகளால் மனதுக்கு வலிமை உண்டு.அவ்வளவு தான் பயன். இறைநிலையை அடைய முடியாது.
மேலும் எல்லாம் கடவுள் என்றும், எனக்குள்ளும் கடவுள் உள்ளது என்று
கூறிக்கொண்டிருந்தால் காலவிரயமும், துன்பங்களும் தான் மிஞ்சும்.
செயலின்றி பயன் இல்லை.
மனிதன் ஒழுக்கமாக வாழக்கற்று கொள்ளாதவரை மனிதனிடம் எவ்வளவு
நல்ல திட்டங்களை கூறினாலும் மனிதன் அவற்றை கடைப்பிடிக்கமாட்டான்.
எனவே சமுதாய சீர்திருத்தவாதிகள் மக்களிடம் நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள். பின்னர் நல்ல உங்களின் திட்டத்தை கற்றுக்கொடுங்கள்.
இப்படி செயல்படாத காரணத்தினால்தான், பொதுவுடமை எனும் இயற்க்கை
நியதி இன்னும் வெற்றி பெற முடியவில்லை.
இயற்க்கையை கவனியுங்கள். அவற்றிடையே உள்ள ஒழுக்கத்தை கவனியுங்கள்.
அது போலவேமக்களாகிய நாமும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து இயற்க்கையின் மிக
உயர்ந்த ஆற்றலை பெற்று நிலைத்து, நீண்ட நாள் வாழலாம்.
ஏனெனில் நாம் இயற்க்கையின் அங்கம். நமக்கு, இயற்க்கைக்கு
உள்ள மிக உயர்ந்த ஆற்றலைப்பெற உரிமை உண்டு.
இந்த ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.
ஆற்றலைவெளிப்படுத்த நாம் ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும்.
நாம் இயற்க்கையின் ஒரு அங்கம் என்பதை உணரவேண்டும்.
நம்மிடம் உள்ள தீய குணங்கள் யாவும் இயற்க்கையிடம் இருக்கிறதா
என்று சிந்தித்து பாருங்கள்.
இயற்க்கையில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஒன்றுக்கு ஒன்று துன்பமோ, இடைஞ்சலோ செய்கிறதா? சிந்தித்து பாருங்கள்.
தீய குணங்கள் இயற்க்கையிடம் இல்லை என்பதை உணருங்கள்.
உணர்ந்து ஒழுக்கத்தை கடைபிடித்து, ஒருவருக்கும ¢உதவி செய்யாவிட்டாலும்
துன்பம் செய்யாமல் வாழ்ந்து இயற்க்கையைப்போல் அழியாமல் இருங்கள்.
ஆனந்தமாக எப்போதும் வாழுங்கள்.
இந்த ஒழுக்க நெறியை முன்னோர்களும், சித்தர்களும், சன்மார்க்கம் என்றும், சாகாக்கல்வி
என்றும்மரணமில்லா பெருவாழ்வு என்றும் கூறினர்.
இயற்க்கையே பொது உடைமையாக இருந்த போதும், மக்களிடம் ஒழுக்கத்தை
கடைபிடிக்கும்குணம் இல்லாததால் மட்டுமே, இயற்க்கை நியதியாகிய
பொதுவுடைமை வெற்றி அடையவில்லை.
மனிதன் ஒழுக்கமாக வாழ்வதை முற்றிலும் மறந்துவிட்டான்.
மீண்டும் ஒழுக்கத்தை கடைபிடித்து பழகி பூரணமான மனிதனாகி இறைநிலை
அடைவதாகும். இப்படி வாழ்ந்தவர்களைத்தான் பொதுமக்கள்அவர்களின்
உடல்களை கோவிலில் வைத்தும், ஆலயம், தர்கா,மற்றும்,சீவசமாதியில்
இருப்பவரையும் இறைவனாக வணங்கி வருகிறார்கள்.
இதில் பூரண நிலையை அடையாத மனிதர்களும் மக்கள் தன்னை வணங்க வேண்டும்
என்ற ஆசையினால் ஆலயத்தை அமைத்துக்கொண்டனர்.
இதனால் பயன் உண்டா? இதுஒவ்வொருவரின் நம்பிகையை பொருத்தது ஆகும்.
{இவ்வாறு வாழ்ந்தவர்களின் வரலாறு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.சரித்திரத்தில் ஒருசிலர்
கற்பனை கதைகளையும்,பொய்யான தகவல்களையும் புகுத்தி உண்மை வரலாறுகளையும் ஏற்று கொள்ள முடியாதவாறு செய்து விட்டனர்.
பொய் பொய்யாகவே இருக்கட்டும், உண்மை உண்மையாகவே இருக்கட்டும், நாம் உண்மையாக இருப்போம். வேறு கவலைகளும் சிந்தனைகளும் நமக்கு வேண்டாம்.
இவைகளை பொய்யா? மெய்யா ?என்று ஆராய்ந்து கொண்டிருப்பதால் பயன் இல்லை.
ஒழுக்கமாக வாழ்ந்தால், வாழ்பவருக்கும், சமுதாயத்திற்க்கும் நன்மையும்,மகிழ்ச்சியும் உண்டு.ஒன்று
சமுதாயம் பலன் அடையட்டும், அல்லது நீ பலன் அடைவாய். இது நிச்சயம்}
இவ்வாறு ஒழுக்கத்தை கடைபிடிப்பது எளிதானது அல்ல.
ஒழக்கத்தை கடைபிடிக்க தொடர் முயற்ச்சி செய்து வந்தால், ஒழுக்க உணர்வுகள் நிறைந்து,
அடுத்த தலைமுறைகளில் ஒழுக்கமான குழந்தைகளும், மகிழ்ச்சியான சமுதாயமும், காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் இல்லாத சமுதாயத்தில் துன்பமில்லாத இன்பம் மட்டுமே
உள்ள உலகத்தில் நாம் வாழலாம்.
முயற்ச்சியை பற்றி வள்ளுவர் கூறுவதை கவனியுங்கள்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
ஊழையும் உட்பக்கம் காண்பர் உளைவின்றி
ஓயாது உஞற்று பவர்.
புலம்பல்கள்.
இவ்வுலகத்தையும், உலகத்தில் உள்ள உயிர்களையும் அனைத்தையும் இயக்குவது
இறைவனாகஇருந்தாலும்,
இயற்க்கையாக இருந்தாலும்,
நாம் அறிந்து கொள்வதால் எந்த பயனும் இருப்பதாக
தெரியவில்லை.
ஏனெனில் இயக்குவது, இறைவனோ, இயற்க்கையோ,
அல்லது செயற்க்கையோ
இவைகள் இயக்கினால் மட்டுமே நாம் இயங்குவதாக இருக்கும்போது, நாம் முயன்று அறிந்து கொள்வது என்பது, இயலாததும் பயன் அற்றதும் ஆகும்.
உயிர்கள் தாமாகவே இயங்குகின்றனவா? இயக்கினால் இயங்க கூடியனவா?
உயிர்கள் தாமாகவே இயங்குவதாக வைத்துக்கொண்டால்,
பிறப்பு நம் விருப்பபடி ஏன் அமைவதில்லை? பெற்றோரை நாமே தேர்வு செய்கிறோமா?
வாழ்க்கையும் விரும்பும்படி ஏன் அமைவதில்லை?எல்லோரும் செல்வந்தராவது இல்லை. ஆனால் எல்லோரும் செல்வந்தராக வேண்டும் என்று விரும்புகிறோம்.
இறப்பும் நாம் விரும்பியபோது ஏன் நிகழ்வதில்லை?
நம்மை நாமேபடைத்துக்கொள்வதாக இருந்தால் ஏன் இறவாமலும் ஊனமில்லாமலும் படைத்துக்கொள்வதில்லை
இவைகள் எல்லாம் காலத்தின் கட்டாயமா?
காலம் எப்படி வந்தது?
இயக்கத்தினால் காலம் வந்தது.
இயங்காவிட்டால் காலம் இல்லையா?
ஆம் இயங்காத பொருளுக்கு காலம் ஒன்று கிடையாது.
பொருள்கள் இயங்காவிட்டால் உபயோகம் என்ன?பொருள்கள் உண்டானதின் நோக்கம் என்ன? அதை இனி தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது? அதுவும் காலத்தினால் தான் தெரிந்து கொள்ள முடியும்.
எல்லாம் நாம் செய்வது போலவே இருக்கின்றது. ஆனால் எதுவும் நம் விருப்பப்படி ஏன் நடப்பதில்லை.
உயிர்களை இறைவனோ இயற்க்கையோ இயக்குவதாக வைத்துக்கொண்டால்,
இறைவனையோ, இயற்க்கையையோ, உயிர்கள் தரிசனம் செய்து தன்
கோரிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள ஏன்
முடிவதில்லை.நமக்கு ஏன் தெரியவில்லை.நாம் மறந்து விட்டோமா?
இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?
மரணத்திற்க்குப்பின் மனிதனின் நிலை என்ன?
எவருக்கும் தெரியாது அதைப்பற்றிய அனுமானங்களும், கற்பணைகளும் ஏராளம்.
இறந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியவில்லை.
இறந்தவர்கள் பிறந்தார்கள் என்பதற்க்கும் நிரூபணம் இல்லை.
பிறந்தவர்கள் இறப்பார்கள் என்பது அனுபவமாய் இருக்கிறது.
இறந்தவர்கள் பிறப்பார்கள் என்பது அனுமானமாய் இருக்கிறது.
இருப்பவர்கள் இன்னமும் இருப்பார்கள் என்பது நம்பிக்கையாய் இருக்கிறது.
ஆனால் இப்பிரபஞ்சம் எப்போதும் இருப்பதாக தோன்றுகிறது.
வாசமும், பாசமும் ஒன்றே ஆகும்.
வாசமும், பாசமும் வியாபகம் உடையது.
மணத்தை உடையது வாசம்.
மனத்தை உடையது பாசம்.
இதன் வசம் சிக்கியவைகளால் மீள முடியாது.
வாசம் என்றால் மணம் என்பதாகும். வாசமும்,மணமும், மனமும் வீசும்
{ பரவும்} தன்மையுடையது.
மனத்தின் வசம் சிக்கியவைகள் புலன்கள் ஆகும்.
புலன்களால் பாதிப்பவை பிராணன் எனும் உயிராகும்.
இதனால் பாதிப்பது ஆன்மாவின் விளக்கம் எனும் வியாபகம் ஆகும்.
நம் புலன்களுக்கு எல்லை உண்டு. நம்புலன்களின் எல்லைக்கு அப்பாலும்
பொருள்கள் உண்டு.
இது வரை தோன்றியுள்ள தத்துவங்களும், வேதங்களும் எல்லாவற்றையும் கூறிவிட்டன.
என்ன கூறியது?
அன்பே சிவம், அன்பே கடவுள் என்று கூறியது.
நாம் எவரிடம் அன்பு காட்டியுள்ளோம்.
நாம் காட்டும் அன்பு என்பது சுயநல அன்பாகும்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த உலகத்தில் அணைத்து உயிர்களிடத்தும்
ஒருமை உணர்வுடன் அன்பு பாராட்டவேண்டும்.
ஆனால் நாமோ எண்ணற்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு எதையும் செய்யாமல்
சோம்பலாகவேஇருக்கிறோம்.
இதற்கு அடிப்படை குற்றவாளி பகுத்தறிவுவாதிகளின் தவறான அணுகுமுறையே ஆகும். என்று நான் கருதுகிறேன்.
சாக்ரட்டீஸ், கூறிய ஏன், எதற்கு,எப்படி, என்று சிந்திக்க வேண்டும், என்ற சித்தாந்தம் மிகநல்லது
அது போலவே பகுத்தறிவாளர்கள் கூறிய, மூடநம்பிக்கைகளை பற்றிய
விழிப்புணர்வு கருத்தும், மூட நம்பிக்கைகளை மனிதன் முழுவதும் கைவிடவேண்டும்
என்ற கருத்தும், கண்டணமும் மிகவும் பாராட்டுக்கு உரியது.
இக்கருத்துக்களை பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கூற வேண்டியதை
வெளிப்படையாககூறியது தவறான அனுகு முறையாகும்.
இவர்களுக்கு முன் வாழ்ந்தோர்களை விட இவர்களே அறிவாளி என்ற எண்ணமும்,
பக்குவ குறைவும், தொலைநோக்கத்தை பற்றிய கவனம் இல்லாமலும்,
இதற்க்கு முன் இருந்தவர்கள் வைத்திருந்த சட்டத்தை மீறியது ஆகும்.
எப்படி?
மக்களின் பக்குவத்திற்க்கு ஏற்பத்தான் உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும்.
எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் கூறக்கூடாது.மீறிக்கூறினால்
விபரீதங்கள் ஏற்ப்படும்.
மனிதனின் குணத்தை நன்கு ஆராய்ந்த முன்னோர்கள் மனிதனை பயமுறுத்தவும்,
மனிதன் கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்கவும் சில கற்பனைகளைகூறி சென்றனர்.
ஏனெனில் மனிதன் மாபெரும் ஆற்றலை உடையவன்.
இந்த ஆற்றலை ஒழுக்கமாக பயன்படுத்தாவிட்டால் சமுதாயம் பாதிக்கப்படும்.
இதனால் அணைவருக்கும் துன்பம் ஏற்ப்படும்
இந்த ஆற்றலை சீராகவும்,ஓழுக்கமாகவும் பயன் படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்
என்பதற்க்காகவும்,பக்குவம் அடைவதற்க்காகவும் ஆகும்.
இல்லையெனில் எல்லா உயிர்களும் , ஒன்றுக்கு ஒன்று ஆற்றலை தவறாக
உபயோகப்படுத்தி, அழிந்துவிடும் என்ற காரணத்தினால், மனிதனுக்கு
பயத்தை உண்டாக்க சிலகற்பனைகளையும்,கதைகளையும் கூறினர்.
இதனை வைத்து சிலர் மக்களை ஏமாற்றி சுரண்டி வாழ்ந்து வந்தனர்.
மேலோட்டமாக சிந்தனை செய்த சாக்ரட்டீஸ் மற்றும் பகுத்தறிவுவாதிகள் பொங்கினர்.
முன்னோர்கள் கற்பனையாக கூறியதின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தவறான
அனுகு முறையை பின்பற்றினர்.
அதனால் முன்னோர்கள் வகுத்த சட்டத்தை கண்டித்தனர்.
இதனை அறைகுறையாக புரிந்து கொண்ட மக்களில் பலர் சட்டத்தை முழுவதும் விட்டு விலகி
மனம் போனபடியெல்லாம் வாழ்ந்து தானும் அழிந்து தன்னைச்சார்ந்த சமுதாயத்தையும் அழித்து
அணைவரும் நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்
அது என்ன?
எல்லோரும் எல்லாமும் சமம்
ஆனால் எல்லோரும் எல்லாமும் சமம் அல்ல
பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையில் அணைத்தும் சமமாக இருந்திருக்கலாம் பின்னர் ஒவ்வொன்றும்
சூழ்நிலைகளின் அமைவுகளுக்கு ஏற்ப்ப மாறுபாடு அடைந்திருக்கவேண்டும்.
அது எப்படி?
சமையலில் உணவு தயாரிக்கும்போது அரிசி,அடுப்பு,பாத்திரம், நெருப்பு ஆகிய அணத்தும்
பொதுவாக இருப்பினும், சாதத்தின் வேக்காட்டின் தன்மை ஒன்றாக இருக்காது. இருப்பினும்
நாம் ஒரு சாதத்தில் ஒரு அரிசியை மட்டும் எடுத்துப்பார்த்து விட்டு எல்லாம் ஒரேமாதிரி வெந்து
இருப்பதாக கருதிக்கொள்கிறோம். ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்று பழமொழியும் கூறுவோம். ஆனால் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு தான் இருக்கும்.
குறிப்பிட்ட நிலையைதாண்டி விட்டால் ஒன்றுக்கு ஒன்றின் வித்தியாசத்தை உணரமுடியாத நிலைக்குச் சென்றுவிடும்.
இந்த உண்மையை அவரவர் ஆய்வில் கண்டு கொள்க.
மின் சாதனங்கள் அணைத்தும் மின்சாரத்தினால் இயங்கினாலும் எல்லா மின்சாதனங்களும் ஒன்று அல்ல.
ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உள்ளது.
வாயு நிலையில் உள்ளவற்றிற்க்கும், திரவ, திட நிலையில் உள்ளவற்றிற்க்கும், ஒரே நிலையில்
இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உண்டு.
அறிவு எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஆசை எல்லோருக்கும் ஒரேமாதிரி ஏற்ப்படுவதில்லை.
ஆளுமைப்பண்பே ஆன்மா எனப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக