புதன், 28 ஆகஸ்ட், 2013

இரசவாத இரகசியம் ஆனந்தமாக {கடவுளாக} வாழ்வது எப்படி?

                                  ஆனந்தமாக   {கடவுளாக}      வாழ்வது எப்படி?


                                       ஆனந்தம் என்றால் கடவுள்.
                                                                     
எத்தனை முறை கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினாய்?
எத்தனை முறை பிரார்த்தனை செய்தாய்?
எத்தனை முறை மந்திரங்களை ஜெபித்தாய்?
எத்தனைமுறை வேதங்களை படித்தாய்?
இதன் அடிப்படையில் ஆனந்தம் கிடைப்பதில்லை.

இவைகள் தேவை இல்லை என்று எண்ணக்கூடாது
இவைகளும் தேவை என்று எண்ண வேண்டும்.
இவைகள் மட்டும் போதும் என்று எண்ணிவிடக்கூடாது.

உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களிலும்
உங்கள் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகளிலும்
நீங்கள் செய்யும் செயல்களிலும்

நீங்கள் மற்றவர்களிடம் எந்த அளவுக்கு அன்பாகவும்,
தயவாகவும், கருணையாகவும் நடந்து கொள்கின்றீர்களோ
அதன் அடிப்படையில் ஆனந்தம் இருக்கிறது.

இதற்கு ஒரு எளிய வழி
கண்ணால்  பாருங்கள்.
காதால் கேளுங்கள்.
வாயினால் எதுவும் பேசாதீர்கள்.
எச்செயலும் செய்யாதீர்கள்.

இது முடியாவிட்டால் இதைவிட எளிமையான வழி

எனவே ஆனந்தமாக வாழ நம்முன்னோர்கள் ஆகிய அறிவாளிகளும்,
ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், சில வழிமுறைகளை கூறி
உள்ளனர்.

அவைகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என இரண்டாக வகுத்து
கூறி உள்ளனர்.

இவற்றை பின்பற்றினால் நாம் ஆனந்தமாக வாழலாம்.

நாம் வாழும் உலகைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகத்தில் உள்ளவைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அவைகளின் விபரம்:-  முன்னோர்கள் கூறிய கருத்துக்களில் இருந்து
தொகுத்தவைகள்.

இந்த உலகத்தில் பலவகைப்பட்ட குணங்களை உடைய மனிதர்களோடு
வாழவேண்டியகட்டாயத்தில் நான் இருக்கிறேன்.
பொய்மையே பேசும் மனிதர்கள்,
எதையும் செய்ய தயங்காத மனிதர்கள,
குற்றமே செய்கின்ற மனிதர்கள்,
 தான் வாழ்வதற்காக எதையும் செய்யக்கூடியமனிதர்களும், இருக்கிறார்கள்.

 நல்லகுணமுடையவர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்தாக வேண்டும்.

இதற்கு முன் வாழ்ந்தவர்கள்,
பல விதமான கற்பனைகளையும்,பொய்களையும்
அறியாமையால் கூறிச்சென்று உள்ளனர்.

அவைகளை பின்பற்றும் பெரும்பான்மையான மக்கள் கூட்டமும் உண்டு.அவைகளின்படி வாழ வேண்டும என்று சட்டமாக்கி வற்புறுத்தலும் செய்வார்கள். இருந்தாலும் நான்   இவர்களோடு   வாழ்ந்தாக   வேண்டிய   கட்டாயத்தில்    இருக்கிறேன்.

இவர்கள் வாழ்வதற்க்காக என்னை அழிப்பதற்கு தயங்க மாட்டார்கள்.என்னை  பல வகையிலும் ஏமாற்றவும் மயக்கி என்னை அடிமை செய்யவும்,என்னிடம் உள்ள பொருள்களை அபகரிக்கவும் நேரம் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

இதற்குநீதி,நேர்மை, நாணயம், நம்பிக்கை,பாவம், புன்னியம்,நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பல வகையான காரணம் காட்டுவார்கள். இப்படிப்பட்ட  மனிதகூட்டத்திற்க்கு சமுதாயம் என்று பெயர்.

இந்த  சமுயாயத்தின்  உறுப்பினர்களுக்கு, குடும்பம் , தாய்சொந்தம், உறவினர்கள், அண்ணன், தம்பி, மனைவி, மகன், மகள்,பேரன், பேத்தி, நண்பன், தந்தை என்று ஏமாற்று பெயர்களும் உண்டு.

இவர்களோடு கூடி  வாழவேண்டும் என்று உபதேசம செய்யும், ஞானிகள், மகான்கள், சான்றோர்கள் என்போரும் உண்டு. உபதேசம்கூறிய எவரும் அதன்படி வாழ்ந்தது இல்லை.

    {இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் அப்படித்தான் இருக்கிறேன்.}

உபதேசம் ஊருக்குதான் தனக்கு இல்லை என்பது போல் இவர்களின் செயல் இருக்கும்.
இதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையின் தோல்விகளும், இயலாமையுமே காரணம் ஆகும்.

இதுவரைகூறியதும் இனி கூறுவதும் எனக்குள் தோன்றிய கருத்துக்கள் ஆகும்.
உண்மையை அவரவர் சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.

இனி வாழ்பவர்கள்,நன்றாக, வாழவேண்டும் என்ற நல்ல எண்ணமும், மீண்டும் நாம் பிறக்க நேரந்தால நல்ல சமுதாயத்தில் சுகமாக வாழலாம் என்ற சுயநலமும் ஆகும்.

மேலும்இதற்க்கு உன்னை தியாகி என்றும்,மேலோன் என்றும், வாழ்வில் முன்னேற்றம் உண்டு, அடுத்த பிறவியில் நீ மிக பெரியவனாவாய் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி உன்னை ஏமாற்ற முயற்ச்சிப்பார்கள்.

மேலும் நீ மனிதன்ஆறறிவு படைத்தவன், நீ மிருகம் இல்லை, என்று பலவிதமான  சாலவார்த்தைகள் கூறுவர்.
{உலகத்தில் வாழும் அனைத்தும் தாவரங்கள் தான், அனைத்தும்
மிருகங்கள்தான்.மனிதனை மனித மிருகம் என்று கூறலாம்.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவனே கடவுள்.
இதுவரை மனிதன் தோன்றிய காலம் முதல் எல்லா கட்டுப்பாடுகளும்,எல்லா சட்டங்களையும்  இயற்றியும்
 எவரும் அதை கடைப்பிடிக்கவில்லை.
சமுதாயம்  அமைதியாகஇருந்ததும் இல்லை.


உனக்குநீதியையும்,நேர்மையையும் போதனை கூறி விட்டு,
அதன்படி நடக்கவும்கூறிவிட்டு
அவர்கள் வாழ்க்கையை அவர்கள்  கூறியதற்கு மாறாக விருப்பம் போல்வாழ்வார்கள்.

 இதுவரைஉபதேசம் செய்த எவர்களும்  அதன் படி வாழ்ந்ததாக
ஆதாரமோ  நிரூபனமோ இல்லை.
எங்கோ ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்.

இதில்எவ்வளவு பெரிய மகான்கள் என்று பெயர் எடுத்தவர்களாக இருந்தாலும் சரி.
இவர்கள் உலகவாழ்க்கையை விட்டுவிலகி, வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது
.உழைத்து பணம்  சம்பாதிக்காதஇவர்கள், தானம் செய்யவேண்டும், தர்மம் செய்யவேண்டும்  என்று உபதேசிப்பார்.

இவர்களிடம்  சிறப்பான திறமை ஒன்று உண்டு.
அது என்னவெனில்
எதற்கும்ஆசைபடமாட்டார்எல்லாவற்றையும் விட்டு விலகியும் எந்த ஒன்றிலும்சம்பந்தபடாமலும் இருப்பார்கள்.
ஆதலால்இந்த உலகத்தில் உள்ள   எவரையும் நம்பாதே.

இப்படி வாழும் போது உனக்கு சலிப்பு ஏற்ப்படலாம்.
எனவே உன்னைஅனுசரிப்பவர்களையும்,
உனக்கு கீழ்படிந்து நடப்பவர்களையும் ஏற்றுக்கொள்.

ஆனால் இவர்களிடமும் எப்போதும்  முன் எச்சரிக்கையாகவும், விழிப்போடும்,இருக்க வேண்டும்

ஏன் என்றால்  எல்லோரிடமும் தான் வாழ்வதற்காக எதையும்
செய்யும் குணம் உள்ளது.

ஏன் என்றால் இயங்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமானால் மற்றொன்று இடம் பெயர வேண்டும் என்பதுஇயற்க்கை நியதியாக உள்ளது
.
ஒன்று வாழ மற்றொன்று அழிந்தாக வேண்டும்.
ஒன்றின் வாழ்வில் மற்றொன்றின் அழிவும்,
ஒன்றின்அழிவில் மற்றொன்றின் வாழ்வும் உள்ளது.
ஒன்று மற்றொன்றாக வேதியல் விதிப்படி மாறுகிறது.

எது எப்படி இருப்பினும் நீ எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதே. உனது அறிவை
உபயோகித்து நீ இருக்க அல்லது  வாழ வழி ஏற்படுத்திக்கொள். நீ வழி
ஏற்படுத்திக்கொள்ளா விட்டாலும் என்றும் நீ இருப்பவனாவாய். பிற
உயிருக்கு  தீங்கு செய்வதால் உனக்கு எந்தவித பயனும் இல்லை.

உன் எண்ணங்கள் மட்டும்  நிறைவேறும்.
மேலும் அதன் எதிர் விளைவுகள் உனக்கு உண்டு.
நீ ஆனந்தமடைந்து மற்றவரையும் ஆனந்தப்படுத்து.
நீ ஆனந்தமடைய எவரையும் துன்புறுத்தாதே.

எனவே இவ்வாறு எல்லாகுற்றங்களையும் பட்டியல் போட்டுக்கொண்டிருப்பதால் உனக்கு எந்தவிதபயனும் இல்லை.
ஆதலால் எல்லோரிடமும் எதுவும் பேசாதே.
மௌனமாக இரு.
கடலில் அலைகள்எவ்வாறு இயல்பானதோ மற்றும் தவிர்க்க முடியாததோ அது போலவேதான் உலக மக்களும் இப்படிதான் இருப்பார்கள்.

உலகமக்களிடம் இருந்து விலகி வாழ உனக்கு வழி அமைத்துக்கொள்.

அந்த வழி என்ன என்றால் .

இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் ஒரே விதமான மூலப்பொருளைக்
கொண்டுள்ளது.

இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நீ தான் என்று ஏற்றுக்கொள்.
அதாவது உலகத்தில்உள்ளவர்களாய் உள்ளது யாவும் உன்னைத்தவிர வேறு
 ஒன்றும் இல்லை. எல்லாம் நீதான் என்றும்  ஏற்றுக்கொள்.

எந்த வகையில் என்றால்,

பொன்னைக்கொண்டு பலவித ஆபரணங்ளைச் செய்தாலும்,
எல்லா ஆபரணங்களிலும்இருப்பதுபொன்மட்டும் தான் என்பது போல்,
இந்த உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களுமாக இருப்பது நீ என்று உணர்ந்து கொள்.
இதை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் உனக்கு பரிமாண,முன்னேற்றமில்லை.

உன்னால் இந்த உலகம் உன்னைக்கொண்டு உன்னைப்போலவே படைக்கபட்டு இருப்பதை உணர்ந்து கொள்.

ஏனெனில் நீ இல்லாத போது இந்த பிரபஞ்சம் உன்னை விட்டு விலகிவிடும்.

உனக்கு இருக்கும் உரிமையைப்போலவே மற்ற ஒவ்வொரு உயிருக்கும் உரிமை உள்ளது

எனவே நீயும் சந்தோசமாக வாழ்ந்து, மற்ற உயிர்களும் சந்தோசமாக வாழ வழிவிடு

எல்லாம் ஒரே தன்மையாகிய பொன்னால் செய்யப்பட்டு இருந்தாலும்  எல்லா
ஆபரணங்களும்ஒன்றுக்கு ஒன்று சமம் அல்ல.
ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு தான் இருக்கும்.
ஒவ்வொன்றும் ஒரு தனிதன்மை உடையது.
இதற்கான காரணத்தை அவரவர் உணர வேண்டும்.

இதன் வேறுபாட்டுக்கு அடிப்படை காரணம். பொருள்களின் அமைவின் பண்பாகும்.
ஒருவர் கூறும் காரணம் மற்றொருவருக்கு ஏற்பு உடையதாக இருக்காது. மாறுபாடுகொண்டதாகஇருக்கும்.

உன்னையே நீ நொந்து கொள்வதால் பயன் எவ்வாறு இல்லையோ
 அதுபோல்தான்உலக மக்களை நீ நொந்து கொள்வதும் ஆகும்.

இவையெல்லாம் உலக மக்களின் இயல்பாக இருப்பதால்
நீ எவரிடமும் பேசாதே.
எதிர் பேச்சு பேசாதே.
எவருக்கும்எந்த உபதேசம் கூறாதே.

எவரையும் காப்பாற்றுவது உன் கடமையல்ல.

பிறரைக்காப்பாற்ற

எவரும் உன்னை அலைக்கவும்இல்லை,
எவரும் உன்னை நியமிக்கவும் இல்லை.
நீ எவரை காப்பாற்ற வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதோ அவரை காப்பாற்றியே தீருவாய்.
அவரவர் வாழ்க்கை எப்படி நடக்க வேண்டும் என்று அவரவருக்குள்அறிவாக அமைந்திருக்கும்.

அறிவே, இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த  சொத்து  ஆகும்.

இதனை வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

எனவே மௌனமாக இருப்பதை உன் கடமையாக கருது.உனக்கு அப்போதுதான்  நிம்மதி  கிடைக்கும்.  இல்லையெனில் வாழ்க்கைமுழுதும்  போராட்டமாக  அமைந்துவிடும்.

இவற்றை உன் மனம் ஏற்றுக்கொள்ளாது. பயிற்சியினால்தான்  மாற்ற முடியும்.

இதை நீபழகுவாயாக!.தொடர்ந்து பழகுவாயாக!

மனம் என்றால் என்ன?
எண்ணங்களின் தொகுப்பே மனம் ஆகும்.
எண்ணங்களை நீக்கிவிட்டால் மனம் என்ற ஒன்று இல்லை.

எண்ணங்கள் எப்படி தோன்றியது?
செயல்களின்{கர்மா} அனுபவம், அனுபவ அறிவாக ,நினைவுகளாக  பதிவாகிறது. இதுவே எண்ணங்களாகஅமைகிறது.

செயல்களினால் கிடைப்பது அனுபவம்.
அனுபவத்தினால் கிடைப்பது அனுபவ அறிவு.
அனுபவ அறிவினால் கிடைப்பது நிணைவுகள்.

நிணைவுகளின் எண்ணிக்கைகளின்  தொகுப்பு நிணைவுகள் ஆகும்.
செயல்களின் அனுபவ அறிவின் தொகுப்பு நிணைவாகும்.

அனுபவ அறிவின் தொகுப்பு நிணைவுகளாகும்.
நிணைவுகளின்  தொகுப்பு எண்ணங்களாகும்.
எண்ணங்களின் தொகுப்பு மனமாகும்.

கடலின் அடித்தளத்தை போல் நீ அமைதியானவன். உலக மக்களின் செயல்கள உனக்குஎண்ணங்களாக மாறி கடல் அலையைப்போல் சலனத்தையும்,நிம்மதியின்மையையும் உனக்குஉண்டாக்குகிறது.

கடலில் தோன்றுவது அலைகளாகும்.  அலைகளே கடல் அல்ல.
உனக்குள்தோன்றுவது எண்ணங்களாகும்.
எண்ணங்களே நீ அல்ல.
கடல் போன்ற ஆன்மாவாகிய உன்னிடம் எண்ணங்களின் தொகுப்பாகிய மனம், எண்ணங்களை கடல் அலை போல் உண்டாக்குகிறது.

ஆனாலும் மனம் உன்னை சும்மா இருக்க விடாது.உனக்குள் எண்ணங்கள் தோன்றி
 அதை செய்யவேண்டும், இதை செய்ய வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும்.
அப்போது எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி செய்யாதே.

அதற்கு முதல்படியாக எல்லாவற்றையும்
கண்ணால் பார்,
காதால் கேள்.ஆனால்
வாயால் எதுவும்பேசாமல் இரு.
இப்படி செய்தால் படிப்படியாக மனம்அடங்கிவிடும்.
மனம் அடங்கினால் வாய்வுஅடங்கும்.
அதாவது சுவாசம் அடங்கும்.சுவாசம் அடங்கினால் அனைத்தும் நீயாவாய். அனைத்தும் நீயானால் சர்வ வல்லமையும்  உன்னிடம்.
பின்னர் உன்னால்முடியாதது எது?
 நீயே இயற்க்கை, நீயே கடவுள்.
எளிமையாக தோன்றும்  இதை  இடைவிடாத பயிற்சியினால் மட்டும் முடியும்
.
மனம் உன்னை எப்போதும் ஏமாற்றமுயற்சிக்கும்,

ஆதலால்தீவிர பயிற்ச்சியை தொடர்ந்து செய்.
தானாக நடைபெறும் செயல்கள் ஆளுமை பண்பின் செயலாகும்.

தனக்கு எது தேவையோ அதை ஆளுமைபண்பு நிறைவேற்றி வைக்கும்.

பிறரை ஒப்பீடுசெய்து அப்படி இருக்க வேண்டும்,இப்படிச் செய்ய வேண்டும், என்று முயற்ச்சியை தூண்டுவது மனதின் செயல்ஆகும்.

ஆளுமை பண்பின்செயலால தேவையானது அனைத்தும்அமைதியாகநடக்கும்

இதுவே விதி.

இது ஒரு வேதியல் அடிப்படை விதி.

பொருள்களின் அமைவின் அடிப்படையில், அமைந்துள்ள வேதியல் சட்டமே
விதியாகும்

இந்த விதியை மீறி எதுவும் நடக்காது. நடக்க முடியாது.


இதனை வள்ளுவர் பின் வருமாறு கூறுகிறார்.

ஊழின் பெருவழி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

பொருள்களின் அமைவின்படி செயல்கள் நடக்கும்.

தன் தேவைகளை எப்படிஅடைய வேண்டும்என்று திட்டமிடப்பட்டு பொருள்கள் அமைந்துள்ளது. அல்லது அமைக்கப்பட்டுள்ளது.

பொருள்களின் அமைப்பே நமது உடல்.எப்படி அமைய வேண்டும் என்று, முன்பு ஏற்பட்ட அனுபவத்தில் உள்ள தவறுகளை நீக்கி கொண்டு அமைத்துக்கொண்டுள்ளது.

இப்போது ஏற்படும்தவறுகளை அடுத்த அமைப்பில் நீக்கிக்கொள்ளும்.
இறுதியில் தவறுகள் இல்லாத முழுமையானதேகத்தை அமைத்துக்கொள்ளும்.
இப்போது தேவைகள் யாவும் யாதொருமுயற்சியின்றி,விரும்பிய மாத்திரத்தில் நடக்கும். இவ்வாறு அமைத்துக்கொண்டவர்கள் தான்முனிவர்களும், ரிஷிகளும் ஆகும். .
இது எனது யூகம், எனது கற்பனை, எனது அனுமானம். நீங்கள் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். எனது கற்பனை நிரூபிக்கப்படும்போது உண்மையாகும். நிரூபிக்கப்படாதவரை கற்பனையாக இருக்கும்.

 மனதின் முயற்சியால், அதாவது மனதின் ஆணவத்தினால் தற்போது நடக்க
முடியாத ஒன்றை நடத்த முயற்சி செய்வது துன்பத்தை கொடுக்கும்.

விதியின்படி {அமைவின்படி} தானாக  நடப்பது இயற்க்கை.
முயற்சி செய்து முடிக்க வேண்டும் என்று முயற்சிப்பது செயற்கை. இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க உனக்கு உரிமைஉண்டு.
உன் வாழ்க்கையை நீ அமைத்துக்கொள்.
உன் வாழ்க்கை உன்னிடம் உள்ளது.

நதி கடலில்தானாகவே கலந்துவிடும். முயற்சி தேவையில்லை.
மேலும் நீ ஒரு ஓடத்தில் செல்வதாக வைத்துக்கொள்.
 நீ செல்ல வேண்டி இடத்திற்க்கு ஓடம் உன்னை கொண்டுபோய் சேர்க்கும்.
அதை விடுத்து ஓடத்திற்க்குள்ளேயே  நீ நடந்து கொண்டிருந்தால்,
ஓடம் சீக்கிரம் கொண்டுபோய் சேர்க்காது.

இங்கு எனது கருத்து யாதெனின் நீங்கள் முயற்ச்சி செய்தால் முயற்சிக்குறிய
பலன் கிடைக்கும்.
ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது

உரிய நேரத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
அப்போது முயற்சி தோன்றும்.இப்போது பலன் கிடைக்கும்.

எதை போன்றது என்றால் பசி எடுப்பதற்க்கும், மூச்சு விடுவதற்க்கும், இரத்த ஓட்டம் நடைபெறவும் நாம் எவ்வித முயற்ச்சியும் செய்யாமல் இயற்க்கையாக எப்படி நடக்கிறதோ அதுபோல் முயற்சியும்  இயற்க்கையாக தோன்றும் என்று கருதுகிறேன்.
இதற்கு  நிரூபணம் கிடைக்கும்வரை காத்திருக்கவேண்டும்

அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்
அவரவர் வினை வழி அவரவர் அனுபவம்
எவர் எவர்க் குதவினர் ? எவர்ரெவர்குதவிலர்?
அவரவர் நிணைவது தமையுணர் வதுவே.


பொருள்கள் இருப்பதால் இயக்கம் இருக்கிறது. இயக்கத்தால் செயல்கள் நடக்கின்றன.
இவையே கர்மா எனப்படும்.

அவரவர் அறிவின் படி ஆசை உண்டாகிறது.
அவரவர்ஆசைக்கு ஏற்ப்ப புத்தி அமைகிறது
அவரவர் புத்தியின் படி செயல்கள் நடக்கிறது.
அவரவர் செயலுக்கு உன் உதவி எதற்கு

மனதின் இயல்புகள்.,

தனித்திருக்கும்போது துணையை விரும்பும்.
துணையோடு இருக்கும் போது விலக விரும்பும்.
எப்போதும் மற்றவர்களை அடக்கி ஆள விரும்பும்.
மற்றவர்கள் அடக்க முயற்ச்சித்தால் அழிக்க விரும்பும்.
பிறர் குற்றங்களை எளிதில் விசாரிக்கும்.
தன் குற்றங்களை விசாரிக்க மறுக்கும்.

எல்லோரும் தன்னை மதிக்கவேண்டும் என்று விரும்பும்.
பிறரை மதிக்க, தான் விரும்பாது.
எல்லாரையும் விட தானே உயர்ந்தவன் என்று கருதும்.
எல்லோரும் தன்னை பாராட்ட வேண்டும் என்று கருதும்.
பிறரிடம்  இருந்து  உதவியை விரும்பும்.
பிறருக்கு உதவி செய்ய மறுக்க காரணம் கூறும்.
அடுத்தவர்  விசயத்தில் எளிதில் ஈடுபடும்.
தன் விசயத்தில் அடுத்தவர் ஈடுபட்டால் கோபம்கொள்ளும்.

அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யும்.
பிறர் கூறும் உபதேசங்களை ஏற்க மறுக்கும்.
பயத்தோடு இருக்கும்,
தைரியமாக இருப்பதாக தோற்றமளிக்கும்.
எப்போதும் இரட்டைகளை உடையது.
பிளவுபட்டு நிற்பது. தன்னிலையில் நில்லாதது.
முன்னிலையில்  [ புறத்தே] எப்போதும் இருக்கும்.

ரசவாத ரகசியம் பிரபஞ்சம்



இப்பிரபஞ்சம் இயற்கையா?
இறைவனால் உண்டாக்கப்பட்டதா?

இயக்குவோனை எண்ணங்கள் நிர்ணயம் செய்கின்றன. இயக்குவோன் பொருள்களின் அமைப்பை நிர்ணயம் செய்கிறான். பொருள்களின் அமைவு இயக்கத்தை நிர்ணயம் செய்கிறது. இயக்கம் பொருள்களின் வேகத்தை நிர்ணயம் செய்கிறது. இயக்கத்தை கவனிப்போன் காலத்தை நிர்ணயம் செய்கிறான்.
muvairavelu.blogspot.comஇவையெல்லாம் இருக்க இடம் ஒன்று வேண்டும்.
இடம் {வெளி} பொருள்களை நிர்ணயம் செய்கிறது.
பொருள்கள் எண்ணங்களை நிர்ணயம் செய்கிறது.
எனவே வெளி{இடம்} இல்லையேல் பொருள் இல்லை.
பொருள் இல்லையேல் இயக்கம் இல்லை.
இயக்கம் இல்லையேல் வேகம் இல்லை.
வேகம் இல்லையேல் காலம் இல்லை.
எல்லாமே வெளியை{இடத்தை} சார்ந்தே இருக்கிறது.
உள்ளது வெளி மட்டுமே,

இதுவே உண்மையானது. நிலையானது.எல்லையற்றது

.மற்றவைகளான பொருள், இயக்கம்,காலம், இவைகள் எல்லாம் வெளியை சார்ந்தது .

வெளி இல்லையெனில் எதுவும் இல்லை.
இடத்தில்{வெளியில்-space™} பொருள்.
பொருளில் இருந்து இயக்கம்.
இடத்தில் பொருள், பொருளில் இயக்கம்,
இடம், பொருள், இயக்கம், உள்ளது அவ்வளவே.

இல்லாத பொருளுக்கும், இயங்காத பொருளுக்கும், காலமும் உருவமும், காண்போனின் கருத்தில்தோன்றாது.

 காண்போனின் கருத்தில் தோன்றியவை காலமும், உருவமும் ஆகும். காண்போன் தன் கருத்தை பிறருக்கு உணர்த்துவதற்கு உபயோகித்த கருவி மொழியாகும்.
காண்பவனே பொருளின் உருவத்தையும், இயக்கத்தையும், இயக்கத்தின் அளவாகிய வேகத்தையும்,வேகத்தின் அளவாகிய காலத்தையும் நிர்ணயம் செய்கிறான்.
பொருள்களை நிச்சயம் செய்வது கருத்து ஆகும்.
பொருள்களில் காலமோ உருவமோ கிடையாது.
பொருள்களுக்கு, வெளியில்{SPACE-™}தான் உருவமும் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது.
பொருள்கள் இருப்பதோ வெளிக்குள்  ஆகும்.
பொருளும், வெளியும் இணைந்தே இருக்கும்.

வெளிக்குள் உள்ளது  பொருள். பொருளால் நிறைந்தது வெளி.

 எந்த ஒரு பொருளுக்கும், தன் உருவத்தை பற்றியோ, தான் இயங்கும் வேகத்தை பற்றியோ, தான் எவ்வளவு காலம் நிலைத்து இருப்போம் என்றும், இன்னும் எவ்வளவு காலம் இயங்குவோம் என்பது பற்றியோ தெரியாது.

பொருளின் இயக்கத்தின் அளவை நிர்ணயம்செய்வது  இடத்தில் உள்ள பொருள்களின் அமைவாகிய பொருண்மை எனும் சூழ்நிலையாகும்.

அதாவது அதை சூழ்ந்துள்ள மற்ற பொருள¢கள் ஆகும்.

நினைத்த காலம் இறந்த காலமே நினைக்கப்போகும் காலம் எதிர்காலமே.
 நினைக்க மறந்துவிட்டால் எதிர் காலம் என்பதில்லை.

நினைவின்றி நிகழ்ச்சியில்லை.
 நிகழ்ச்சியின்றி காலமில்லை.
காலமில்லையேல் முக்காலமில்லை.
 முக்காலமும் இருப்பது நிகழ்ச்சி ஒன்று மட்டுமே.
எக்காலமும் இருப்பது நினைவு ஒன்று மட்டுமே.

நிகழ்ந்த ஒன்றை நினைத்து ஏங்குவது   கனவு எனும் கற்பனையாகும்.
நிகழ்ந்த  ஒன்று  மீண்டும்  நிகழவேண்டும்  என்று   எதிர்பார்த்து
ஏங்குவது கனவாகும்.
நிகழும் ஒன்றை நினைத்து உணர்வது நனவு எனும் வாழ்வாகும்.

நிகழும் ஒன்றை உணர மறந்துவிட்டால் அதுவே சுழுத்தி எனும் மரணமாகும்.

இதுவரை தோன்றியுள்ள யாவும்,  வந்திருந்தது யாவும்
இப்போது இருப்பது யாவும், இப்போது வாழ்வது யாவும்
இனி வரப்போவது யாவும், இனிவாழப்போவது யாவும்,
இயற்க்கையெனும் ஏதோ எனும் ஒன்று மட்டுமே.

வாழ்பவர் கடவுள்
வாழ்ந்தவர் கடவுள்
வாழயிருப்பவர் கடவுள்
வாழ்வது இயற்கை,
வாழ்ந்தது இயற்கை,
வாழயிருப்பது இயற்கை

அன்பும்  அன்பின்மையும், பண்பும் பண்பின்மையும்
ஞானியும், அஞ்ஞானியும்,அறிவுள்ளோனும் , அறிவற்றவனும்
 இன்பமும் துன்பமும் , நட்பும் பகையும்
மற்றும் எதை எப்படி கூறினும் இருப்பது யாவும் இயற்கை எனும் கடவுளே.
இயற்கை  எனும் கடவுளைத்தவிர   வேறு ஒன்று  இல்லை
இல்லை இல்லையே.
இயற்க்கையையோ கடவுளையோ வணங்கினாலும் வணங்காவிட்டாலும், பொருள்களின்அமைவுகளுக்கு ஏற்ப  நடக்க வேண்டியது  நடக்கும்.
நான் இருக்கின்றேன்
 நான் வாழும் உலகம் இருக்கிறது.
 நான் இருப்பதால் நான் வாழும் உலகை உணர்கிறேன்
உலகை உணர்ந்ததால் உலகில் உள்ளவற்றையும் உணர்பவனும் உணர்ந்தவனும் ஆகிறேன்
நான் உணர்வாகவும், உணர்பவனாகவும், உணர்த்தபடுபவனாகவும் இருக்கிறேன்
அப்படி எனில் உணர வைப்பது எது?
நான் இன்றைய நிலையில் உள்ள இந்த நிலைமைக்கு காரணம் என்ன?
நான் இப்போது வாணிபம் செய்பவனாக இருக்கிறேன்.
நான் ஏன் உலகை ஆளும் அதிகாரியாக இல்லை?
சங்கராச்சியாரும் போப்பாண்டவரும் ஏன் நாத்திகனாக இல்லை?
சிதம்பரம் இராமலிங்கம் கசாப்பு கடை ஏன் வைக்கவில்லை?
பில்கிளின்டன் ஏன் சாராயக்கடை வைக்கவில்லை?
அமெரிக்க ஜனாதிபதி ஏன் விளையாட்டு வீரனாக ஆகவில்லை?
காரல்மார்க்சும் லெனினும் ஏன்தொழில்அதிபராகவும் முதலாளியாகவும் இல்லை?
கருணாநிதி ஏன் காய்கறி வியாபாரியாக இருக்கவில்லை?
எம்ஜியார் ஏன் ஏற்றுமதியாளராக இருக்கவில்லை?
ஜெயலலிதா ஏன் மருந்துக்கடை வைக்கவில்லை?
இனிப்பு ஏன் துவர்ப்பதில்லை?

கசப்பு ஏன் இனிப்பதில்லை?
உப்பு ஏன் கார்ப்பதில்லை?
காரம் ஏன் கசப்பதில்லை?
புளிப்பு ஏன் உவர்ப்பதில்லை?
துவர்ப்பு ஏன் எல்லாமாக இருக்கவில்லை?

இவைகள் எல்லாம் இவ்வாறு ஏன் இருக்கிறது என்று கேட்டால்,

ஆன்மீகவாதியும், மத மற்றும் சமயவாதிகளும்,
 மாயை என்றும், விதி, பாவம், புண்ணியம்,கர்மா.வினை என்றும்,

பகுத்தறிவுவாதி மதி என்றும் அறிவு என்றும், முயற்சி  என்றும்,

விஞ்ஞானிகள் இயற்பியல் உயிரியல் வேதியியல் என்றும் கூறுகின்றனர்.

{விஞ்ஞானிகள் விளக்கம் கூறவும் மாட்டார்கள்.
எது கூறினும் அதற்கு மாற்று கேள்விகளை கேட்டு,கேள்வி கேட்டவர்களை திணரச்செய்வார்கள்.மேலும் கூறுவர், ஒருகாலத்தில் இவைகளுக்குஎல்லாம் விடை கண்டுபிடிக்கப்படும் என்று.}

எல்லாம் எரிகின்ற நெருப்பைப்போலவும், உருகுகின்ற பனியைப்போலுமாகும்.

இரண்டுக்கும் நிலையான உருவம் எது? அவரவர் ஆயிரம் காரணம் கூறி அனுமானம் எனும் அறியாமையை வெளிப்படுத்தினர். தெரியாததை தெரிந்து கொண்டனர்.அவ்வளவே.

எனது அனுமானம் என்ன என்றால்,
இவைகள் யாவும் இயல்பு,
இவைகள் யாவும் சுபாவம்,
இதுவே இயற்க்கை, இதுவே விதி.

இது எத்தகையது எனில் குருடன் ஒருவன் யானைய தடவிப்பார்த்து, தனது பரிசத்தினால் உணர்ந்து யானையின் வடிவத்தை விளக்கியது போலாகும்.

அறியாமை வெளிப்பட்டபோது அதனை அறிவு என்றனர்.

ஏனெனில் அறியாமை நீங்கிவிட்டால் அறிவு மட்டும் தானே இருக்கும்.

விஞ்ஞானம் முதல் தத்துவஞானம் வரை எல்லாம் அனுமானம் என்றும் யூகம் என்று கூறப்படும் அறியாமையே ஆகும்.{நிரூகிக்கப்படாதவரை}
 யூகம் நிரூபிக்கப்படும்போது விஞ்ஞானம் ஆகிறது.

இருந்த ஒன்றில் இருக்கும் ஒன்று வந்தது.
இருந்த ஒன்றை இருக்கும் ஒன்று நினைத்தது, நினைக்கின்றது, நினைக்கும். அது எது? அதுவே இயற்கை.

மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட இயற்கையே கடவுள்.
இருப்பது இயற்க்கை. மனிதனின் உருவகம் கடவுள்.

 இருந்தது  இயற்கை
 இருப்பது  இயற்கை
 இனி இருக்கப்போவதும் இயற்கை
 இருப்பது கடவுள்
 இனி இருக்கப்போவதும் கடவுள்
இருந்ததும் கடவுள்

இக்காலத்திலும் எக்காலத்திலும் முக்காலத்திலும் இருந்தது இருப்பது இருக்கப்போவதுயாவும் கடவுள், கடவுள், இயற்கை எனும் கடவுளே

இங்கு இயற்க்கையே கடவுளாக கூறப்படுகிறது. கடவுளை தவிர்த்து வேறு பெயர்களை அவரவர்விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம் அல்லது கடவுளை நீக்கியும் விடலாம்.
நிகழ்ந்தகாலம் நிகழும் காலம் நிகழப்போகும் காலம் யாவும் நிகழ்காலமே நிகழ்ந்ததொன்றும் நிகழ்வதொன்றும் நிகழப்போவதொன்றும் நிகழ்காலமே நிகழ்ந்தது ஒன்று நினைப்பினால்  நிகழ்வது ஒன்றும் நினைப்பினால் நிகழப்போவது ஒன்றும் நினைப்பினால் நினைப்பு இன்றி நிகழ்வது ஒன்றும்இல்லையே

குறிப்பு; நிகழ்காலம் என்பது இறந்த அல்லது முன் இருந்த காலத்தின் மீதியாகும். அல்லது இயக்கத்தின் தொடர்ச்சியாகும்.

 நிகழ்ந்ததொன்று நினைப்பினால்   நிகழும் ஒன்றும் நினைப்பினால்
 நிகழ்ந்த ஒன்றை நினைக்கிறேன் நிகழும் ஒன்றை நினைப்பினால் உணர்கிறேன்
 நிகழப்போகும் ஒன்றை நினைப்பினால் நினைக்க முடிவதில்லை ஏன்?

நினைத்த ஒன்றை மறந்து விட்டால் நிகழப்போவதை நினைப்பது எப்படி?

காலம் என்றால் நிகழ்காலம் மட்டுமே
 நினைக்கும் காலம் நிகழ் காலமே
 பொருள்கள் இருப்பது நிகழ் காலம்.
பொருள்கள் இருந்ததும் நிகழ் காலம்.
பொருள்களுக்கு காலம் இல்லை.
பொருள்கள் இயங்குகின்றன.

பொருள்களின் இயக்கத்தை கவனிப்பவன்{ நோக்குபவன்} காலத்தை உண்டாக்குகிறான்.
 பொருள்களும், இயக்கமும், இயக்கத்தை கவனிப்போனும், இருப்பது இடம் என்னும் வெளிக்குள் ஆகும்.
 பொருள்களின் இயக்கத்தின், அளவே காலம்

 இயற்கை
இயற்கையில் இருந்த அணுக்கள்.
அணுக்களில் ஏற்ப்பட்ட இயக்கம்.
இயக்கத்தினால் ஏற்ப்பட்ட அனுபவம்.
அணுக்களின் அனுபவத்தினால்,
இயற்கையின் அணுக்களில் இருந்து தோன்றிய அறிவு.
இயற்கையெனும் அறிவில் தோன்றிய நிலைபெறவிரும்பும் ஆசை. ஆசையினால் தோன்றிய முயற்சி.

முயற்சியினால் தோன்றிய ஆணவம். ஆசை, முயற்ச்சி, எனும் தன் முனைப்பு ஆகியவற்றைக்கொண்ட ஆளுமை. EGO.

சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக்கொண்ட ஆளுமை
சூழ்நிலைகளை புரிந்து இயற்கையை ஆள தெரிந்துகொண்ட ஆளுமை. இயற்கையை தன் வசப்படுத்தி
இயற்கையை சுதந்தரித்துக்கொண்ட ஆளுமை.

 ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு இயற்கையை தன் ஆளுமையின் கலைகளால்,{திறமையால்} அனுபவங்களால், இயற்க்கையில் இருந்த அணுக்களைக்கொண்டு,அணுக்களுக்கு  வடிவத்தை கொடுத்து இயக்கி வருகின்றது.
இந்த ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொள்ள, இயற்கையின் இயக்கத்தை கூர்ந்து கவனித்தும்,
இயற்க்கையின் இயக்கத்தின் நுட்பங்களை உணர்ந்தும், ஊகித்தும், இயக்கத்தில் சிக்குண்டு அனுபவித்தும்,

அனுபவித்தும், யூகித்தும், அறிந்தவற்றைக் கொண்டு அணுக்களின் மீது பிரயோகப் படுத்தியும்,
பிரயோகப்படுத்தும்போது தோல்விகளை சந்தித்தும்,
பின்னர் தோல்விகளுக்கான காரணங்களை உணரந்து  நிவர்த்தி செய்து,
தன் ஆற்றலை பெருக்கி, இந்த ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டது. எங்கு? எங்கெங்கும்.

இந்த ஆற்றலை கொண்டு மற்ற அணுக்கள் எப்படி இயங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்கின்றது.
ஆதி அனாதியான இயற்க்கை.
அனாதி இயற்கையில் தோன்றிய அறிவு எனும் ஒளி ஆற்றல்,
இயற்கையை தன்வசப்படுத்தி
இயற்கையை இயக்குகின்றது.
இந்த ஒளிஆற்றலுடன்,வெப்பமும்,சப்தமும் இணைந்தே இருக்கும்.அதாவது ஒளி, ஒலி, வெப்பம்,ஆகிய மூன்றும் எப்போதும் இணைந்தே இருக்கும். இதுவே ஆளுமை பண்பு எனும் ஆதி இயற்கையாகும். இதன் பெயர் என்ன? அவரவர் விருப்பத்தின்படி வைத்துக்கொள்வோம்.

நானாக நான் மட்டும் இருந்தேன்.
என்னிலிருந்தே நான் என்னை படைத்தேன்.
என்னை படைத்து என்னில் இருந்தே நான் ஆனந்தம் அடைய முயல்கின்றேன்.
தான் தானாகவும், தாம் தாமாகவும், அது அதுவாகவும்,
எது எதுவாகவும் எப்படி தானாக உண்டாகியதோ
அதுவே நான். இறைவன். அதுவே இயற்கை.
இயற்கை எனும் கடவுள் இயங்குகிறார் அவருக்குள் இருந்தவைகள் வெளிப்படுகின்றன. வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
அதுவே விஞ்ஞானம், ஞானம் ,மெய்ஞானம்மாகும்.
மற்றும் இதுவே  பிரபஞ்சம்,  வெளி,  காலம்  எல்லாம் ஆகும்.

இயற்க்கை ஏன் இயங்குகிறது எப்போது இயக்கம் முடியும் என்று எவருக்கும் தெரியாது
ஏன் இயற்க்கைக்கும் தெரியாது
தெரிந்து இருந்தால்வெளிப்படுத்தியிருக்கும்.
வெளிப்படுத்தும்போது அறியாமை வெளியேறும்.
அறியாமை வெளியேறியபோது அறிவு விளங்கும்.
அதாவது அறிவு வெளிப்படும்.

சுருங்கக்கூறின்
இயங்குவது இயற்கை, அதுவே எல்லாம் .அதுவே கடவுள். அதுவே நாம்.

இயற்கையின் பெயரைச்சொல்லியும் இறைவன் பெயரைச்சொல்லியும் இவைகளை இல்லைஎன்று மறுத்தும், மக்களின் அறியாமையை உபயோகப்படுத்தி மக்களைச் சுரண்டும் கூட்டத்தினரைதடுப்பது எவர்?

இயறகைதான்,கடவுள்தான், நாம்தான் தடுக்க வேண்டும்.
இதற்கு எவர்  இசைவர்
இதற்கு   ஒத்துழைப்பு கொடுப்பவர் எவர்.
தடுக்க வந்த எத்தனையோ நபர்கள் மக்களின் ஒத்துழைப்பின்மையால் மனம் வருந்தி சென்றுவிட்டனர்.
 மாறும் என்பது மாறாது என்னும் நியதியின்படி,நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்
நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.
விரிவடைந்துகொண்டு இருக்கிறோம்.
உள்ளது உள்ளபடிஇருக்கிறது.அது இயங்குகிறது. அவ்வளவுதான்.
இவற்றை விரிவடைவதாக கருதுகிறோம்.

உதாரணமாக, 1000 கிலோ இரும்பை ஒரே கட்டியாக இருப்பதாக வைத்துக்கொண்டால்,
இது இயற்க்கையாகும்.
இதுவே மாறுதலுக்கு உட்பட்டு பொருள்களாக மாறும் போது விரிவடைவதாககருதுகிறோம்.
நாம் கடவுளாகிய நமக்குள் இருப்பவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி மகிழ்கின்றோம். கடவுள் எனும் இயற்கையாகிய நமக்குள் இருந்த ஞானம் வெளிப்பட்டபோது விஞ்ஞானமாகும். {விளங்கிய ஞானம் விஞ்ஞானம்}

ஞானம் என்பது அறிவாகும்.
கடவுளே, கடவுளை, தானாக, தனக்காக, இயக்கும் இயக்கமே பிரபஞ்ச இயக்கமாகும்.

இருக்கிறது என்று சொன்னாலும் இருந்தது என்று சொன்னாலும் இனியும் இருக்கும் என்று சொன்னாலும் அது இயற்க்கை எனும் கடவுள் மட்டுமே.

இறைவன் எனும் இயற்கையானது தன்னிடம் அணுக்களாக உள்ள ஆன்மா எனும் அணுக்களைநான் எனும் ஆணவத்தின், ஆசையின்படியும், தகுதி எனும் அனுபவ பக்குவத்தின் படியும்தேகத்தை கொடுத்து, தேகத்தை இயக்கி இன்ப துன்பங்களை அடையச்செய்கிறது.இறைவன் எனும் இயற்க்கை தனக்கு எந்தவித விருப்பு வெறுப்பின்றி அணுக்களாகிய ஆன்மாக்களை இயக்குகின்றது. இறைவனின் இந்த நிலை அறிவுநிலை எனப்படும். இது இயற்க்கை அறிவாகும். இந்த பிரபஞ்சம் அளவுகடந்த,வல்லமையும் இயக்கங்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு ஏற்ப்பட்ட இயக்கத்தினால் வந்த நாம் காலம் காலமாக பிரபஞ்சத்தின் உண்மையை அறியமுயன்று கொண்டு வந்தோம். அவ்வாறு முயலும்போது என்னற்ற அதிசயங்களை கண்டோம். அவை நம்மால் மட்டும் நிகழ்ந்தது என்று நம்பினோம். நாமும் இப்பிரபஞ்சத்தின் ஒரு உறுப்பு[அங்கம்]தான் என்றும் இறைவனாகிய இயற்க்கையின் அங்கம் என்பதை உணரத்தவறினோம் நாம் காணும் இயற்க்கையின் வல்லமை நம்முள் உள்ளது தான் என்று உணராமல் வெளியே இருப்பதாக கருதினோம். நம்மில் சிலர் முற்க்காலத்தில் இந்த உண்மையை உணர்ந்து தனக்குள் இருந்த இயற்க்கையின் அற்புதஆற்றலை வெளிப்படுத்தினர். அப்போது நாம் பிரமித்து அவர்களைக்கண்டு அஞ்சினோம். அவர்களை நாம ¢கடவுள், கடவுளின் தூதர், குரு, ஞானி, சித்தர், யோகி, ரிஷி,முனிவர
என்றுகருதி அவர்களை வணங்கினோம். அவர்களின் வாழ்வுக்கு பின்னர் அவர்களின் உருவத்தைகோவில்களில் வைத்து வழிபாடு செய்து வந்தோம். நாம் பயந்து வழிபாடு செய்து வந்தவர்கள்,நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்க்காக வழி முறைகளைக்கூறினர். அவர்கள் கூறிய கருத்துக்களை நுட்பமாகவும் , மறைவாகவும் வைத்து, கதைகளாகவும் பரிபாசையாகவும்[பலரும் பலவிதமாக புரிந்து கொள்ளுமாறு]கூறினர். அவர்கள் கூறியது, போற்றிப்பாடியது எல்லாம், இயற்கையை இறைவனாக உருவகப்படுத்தி கூறினர். இயற்க்கையை இயற்க்கை என்று கூறி இருந்தால் மக்கள் இயற்க்கையின் சிறப்பை உணரமாட்டார்கள் என்ற காரணத்தினால் அšவாறு கூறினர். அதனால் இயற்க்கையை இறைவனாக உருவகப்படுத்தி கூறினர்.

எனக்குள் தோன்றிய சிந்தனைத்துளிகள்

இயந்திரம் = தேகம்.
இயந்திரம் இயங்க எரிபொருள் = அணுக்கள்,உணவு, காற்று.
இயந்திரத்தை உபயோகிப்பாளர் = ஆன்மா, ஒளி.
இயக்கம் = ஒளி, ஆன்மா, ஒளி ஆற்றல். light power
இயக்கி = எண்ணம், மனம், soft ware,
இயங்கு பொருள் = உடல் உறுப்புகள்,spare parts, hard ware.
அறிவு = சிவம்.

இதுவே ஆன்மா.  இதுவே ஆளுமை பண்பு.  பொருள்களின் அமைப்பு, இயங்கவேண்டியவிதம் ஆகியவற்றை தீர்மானிக்கின்றது.
அறிவும், சிவமும், இயங்காது.
பிற பொருள்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.

அறிவு நிர்ணயம் செய்தபடி இயங்குவது சக்தி ஆகும்.
சக்தியே பொருள்களை இயக்குகின்றது. இதுவே மனம் ஆகும்.
மனம் தானாக இயங்காது. அறிவின் தீர்மானப்படி மனம் இயக்கும்.
 மனம் எதனை இயக்கும்?
 மனம் உடலை இயக்கும்.
 அறிவு நிச்சயிக்கும்.
 மனம் இயக்கும்.
 உடல் இயங்கும்.
அறிவை இயக்குவது எது?
அறிவை இயக்குவது அனுபவம்.

.E= MC* என்பதில்
Eஎன்பது சக்தி ஆகும்.
M என்பது பொருளின் பொருண்மை என்னும் நிறை ஆகும்.
C என்பது ஒளியின் வேகம் ஆகும்.
 அதாவது ஒரு பொருளின் சக்தி என்பது பொருளின் அமைவும், ஒளியின் வேகத்தின்           இருமடங்கின் பெருக்கமும் ஆகும். இது விஞ்ஞானத்தில், அணுவின் பொருண்மை விதியாகும்.

அணு என்றால் ஆன்மா.
ஆன்மா என்றால் விந்து.
விந்து என்றால் ஒளி.
ஒளி என்றால் அகரம்.  
அகரமே அணைத்துக்கும் ஆதி வித்தாகும்.
அகரமாகிய ஒளியில், ஒலி இருந்தது.
ஒலி என்றால் உகரமாகும்.
அகரமும், உகரமும் சேர்ந்துள்ளபோது மகரமாகும்.
மகரத்தில் இருந்து வெளிப்பட்டதுஅக்னி ஆகும். அல்லது மகரமே அக்னியாகும்.

 ஆதி இருந்தது அது எல்லையற்ற எல்லையாக இருந்தது.
 அது சிவம் என்னும் அகரமாக, அறிவாக ஒளிர்ந்தது.
அது அதிர்ந்தது, அசைந்தது,
அதுவே    உணர்வானதுமாகும்.
 உகரம் எனும் சக்தியாக இருந்தது.
 இதுவே அசைவதற்க்கு முன்னர் ஒளிர்வாக இருந்தது.

 ஆன்மா என்னும் அணு இருந்தது.
அதற்குள் அகம் இருந்தது.
 அகத்துள் அகரமாகிய அறிவு இருந்தது.
 அகத்துக்குள் உகரமாகிய உணர்வு இருந்தது.
 அந்த உகரமாகிய உணர்வு௧கு, அகரமாகிய உள்ளத்தில் இருந்து உள்ளும்      புறமும் கடக்கும்  தன்மை  இருந்தது.

 இந்த ஆகாயத்தின் அகத்தில் அக்னி இருந்தது.
 இந்த அக்னியில் சப்தம் இருந்தது.
 இதற்கு நாதம் என்றும் உகரம் என்று பெயர்.
 இந்த உகரத்தில் ஒளி இருந்தது
 இதற்கு விந்து என்றும், அகரம்என்றும் பெயர்.

 இந்த ஆன்மா, ஒளி, விந்து,அகரம்,{ நான்கும் ஒன்றே}
 இதுவே  உற்பத்திக்கு{ காரணமானது.}

 இந்த அகரமான ஒளி உலக உற்பத்திக்கு வித்தாக அமைந்தது.

 இந்த அகர ஒளியில் உடம்பு எனும் உகரம் தோன்றும் தன்மையிருந்தது.

 இந்த உகரம் தேகம் தோன்ற இடமானது.

இதுவே காரியமானது.{ காயமானது.உடம்பு }
இந்த உகரம் எங்கும் வியாபித்து விசாலமாகும் தன்மையிருந்தது.

{ஆகாயமானது.}

 இந்த காரணத்தையும் காரியத்தையும் உள்ளடக்கியிருந்ததுதான் ஆகாயம் ஆகும்.
இந்த ஆகாயம் விரிவடையும் சுபாவத்தை உடையதாகும்.
இந்த ஆகாயம் பூரணமாக இருந்தபோது சிகரம் எனும் சிரசாகும்.

இந்த ஆகாயம் எனும் சிரசில் வகரம்,அல்லது பகரம் இருந்தது.
இந்த வகரம் ஆகிய பகரத்தில், மையம் இருந்தது.
இதற்கு  புருவமையம், என்றும் உருவ மையம் என்றும் பெயர்.
இதுவே அனைத்து கருத்துக்களின், கருத்து மையமான  கரு  மையமாகும்.

இம்மையத்திற்க்கு அனைத்தையும் கிரகிக்கும்{உள்வாங்கும்} தன்மை இருந்தது.
இது கூடுதலும், குறைதலும்,{ஏற்ற,இறக்கம்} உடைய பண்பை பெற்றிருந்தது.

இதுவே அனைத்திற்க்கும் முதன்மையாகவும், தலைமையாகவும் இருந்தது.

இதிலிருந்து வெளியேறும் எல்லாவற்றிலும் இதுவும் இதன் தன்மையும் இருப்பதாக இருந்தது.
இவ்வனைத்து தன்மைகளையும் உடையதாகி அகம் இருந்தது.
இந்த அகத்திற்க்கு புறம் இருந்தது.
அகத்தில் அக கவர்ச்சி அதிகரித்தது.
இதனால் அகத்தில் உள்ள அக்னி,ஆளுமை கொண்ட ஒளியாக, வெளியேறும் நிலை ஏற்ப்பட்டது.

இந்த ஆளுமை கொண்ட ஒளியுடன் வடிவமைக்கும் தன்மையான ஒலிக்கு இயங்கும் நிலை ஏற்ப்பட்டது.
ஒளி= இயக்கும் ஆற்றல், ஒலி= இயங்கும் கருவி.

அக்னியின், ஆளுமை கொண்ட ஒளிக்கு அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலை ஏற்ப்பட்டது.
அதனால் அதனிடமே உள்ள, வடிவமைக்கும் தன்மையான ஒலிக்கு கட்டளயிட்டது. {எப்படி இயங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தன்மைக்கு எண்ணம் என்று பெயர்.எண்ணத்தின்படிஇயங்குவது எழுத்து ஆகும்.} எனவே ஒலி எண்ணாகவும் எழுத்தாகவும் வார்த்தையாகவும், வாக்கியங்களாகவும் அமைத்துக்கொண்டது.இவ்வாறு அனைத்து வல்லமைகளையும் கொண்டு மனித தேகமும் விளங்கும் தன்மையுடையதாக இருந்தது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு பொருளிலும், இந்த பிரபஞ்சத்தைதோற்றுவித்த மூலப்பொருளாகிய அகர ஒளியாகிய சிவம் அமர்ந்து {இருந்து} செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும்அமைந்திருப்பது மனித தேகமாகும்.


கடவுள் வாழ்த்து எனும் இயற்கை வாழ்த்து.

 ஏகம் அனேகம்  அனேகமும் ஏகம்
இயற்க்கைக்குள் கடவுள்
கடவுளுக்குள் இயற்க்கை.
இருப்பது யாவும் இயற்க்கை எனும் கடவுளுக்குள்
இருப்பது யாவும் கடவுள் எனும் இயற்க்கை ஆகும்
எல்லாமாய் இருப்பது கடவுள் எனும் இயற்க்கை ஆகும்.
என்னுள் இருப்பதும் கடவுள் எனும் இயற்க்கை ஆகும்.

என்னுள் இருப்பதும் உன்னுள் இருப்பதும். உம்முள்இருப்பதும் எம்முள்இருப்பதும் எல்லாமாய் இருப்பதும் எங்குமாய் இருப்பதும் நம்முள் இருப்பதும் நாமாய் இருப்பதும் அதுவாய் இருப்பதும் எதுவாய் இருப்பதும் தானாய்இருப்பதும் நானாய் இருப்பதும் ஒன்றாய் இருப்பதும் பலவாய் இருப்பதும் கடவுள் எனும் இயற்க்கையே ஆகும்.

தோற்றமும் தோன்றி உள்ளவைகளும் இருப்பும் இருப்பவைகளும் இயக்கமும் இயங்குபவைகளும் வாழ்க்கையும் வாழ்பவர்களும் வாழயிருப்பவர்களும் வாழ்ந்தவர்களும் நிகழ்வாகவும் நிகழ்காலமாகவும் இறப்பாகவும் இறந்தகாலமாகவும் எண்ணங்களாகவும் ஏக்கமாகவும் எதிர்பார்ப்புகளாகவும் எதிர்காலமாகவும் இருப்பது யாவும் கடவுள் எனும் இயற்க்கையே ஆகும்.

வானமாக இருப்பதுவும் காற்றாக இருப்பதுவும் நெருப்பாக இருப்பதுவும் நீராக இருப்பதுவும் இவை யாவும் கூடி நிலமாக இருப்பதுவும் இவற்றிடையே ஒலியாக, ஒளியாக இருப்பதுவும் இவற்றிடையே உடலாகவும்,உயிராக இருப்பதுவும் இவையெல்லாம் உள்ளதாகவும் விளங்கி இருப்பதுவும் இவையெல்லாம் இல்லாமல் மறைந்து இருப்பதுவும் இவ்வாறு தோன்றியும் மறைந்தும் இனபுற்றும் துன்புற்றும் சலிப்படைந்தும் சலிக்காமல் இயங்குவதுமாய் இருப்பதுவும் ஏகமாகவும் அனேகமாகவும் இருப்பதுவும் ஏகமாய் எங்கும் விளங்கும் இயற்க்கையெனும் கடவுள்ஆகும்.


வினையும் அவனே வினைப்பயனும் அவனே.
வினையைச்செய்பவனும் அவனே.
செயலும் அவனே செயலின் பயனும் அவனே.
செயல் புரிவோனும் அவனே. செயலின் பயனை நுகர்வோனும், நுகரச்செய்வோனும் அவனே.

எப்படி கூறினும் இயற்க்கையே இறைவன் இறைவனே இயற்க்கையாகும்.

ஆதியில் எல்லாவற்றையும் உள்ளடக்கி எல்லாமாகும் வல்லமையுடைய ஆதிபரம் சி என்றும்,சிகரம் என்றும், சிவம் என்றும், சத்து, சித்து, ஆனந்தம், என்னும் பெயர் கொண்டு விளங்கியது. இது தன்னிலையாகும். இதுவே பதி நிலையுமாகும். குயவனிடம் உள்ள செம்மண்ணானது மண்ணாக இருக்கும் போதும், காகிதமானது ஒரு ஓவியனிடம் இருக்கும் போது, எந்த வகையான ஓவியமும்,அல்லது உருவமும் வரையப்படாதநிலையில் இருக்கும் போதும், மண்ணும்,காகிதமும் எல்லா உருவத்தையும், ஏற்க்கும் தன்மையும்,தகுதியும் உள்ளது போல் ஆதியில் இயற்க்கை எனும் பரம் பொருள் இருந்தது. மண்ணும் காகிதமும்,பரம் எனும் பதி நிலையாகும். மண்ணும் காகிதமும் உருவம் பெற்ற போது பசு நிலையாகும். எல்லாமாகும் வல்லமையை உள்ளடக்கி பதியாகவும் , பரம்பொருளாகவும், சத்தாகவும் பெயர்கொண்டு, விளங்கிய இயல்பு நிலையாகவும், தன்னிலையாக இருந்த இயற்க்கை செயல்பட ஆரம்பித்து சித்து என்னும் பெயர் கொண்டு முன்னிலையானது. இது பசு நிலையாகும். குயவனிடம் இருந்த மண்ணும், ஓவியனிடம் இருந்த காகிதமும், மட்பாண்டமும், ஓவியமும் ஆனதுபோல் பதிநிலையில் இருந்து சித்து வெளிப்பட்டு பசுநிலையானது. ஆதியில் தன்னிலையில் சிவம் இருந்தது. தன்னிலை நின்ற சிவம் வெளிப்பட்டு முன்னிலையானது. முன்னிலை வந்த சிவம் படர்க்கையானது. தன்னிலையான சிவம் படர்க்கையாகி பாடுற்றது. சத்து சித்தாகி, சித்தில் சத்து தங்கியபோது சத்தும் சித்தும் சேர்ந்து சத்சித்தாகி ஆனந்தம் கண்டபோது சச்சிதானந்தமானது. இயற்க்கை எனும் இறைவனாகிய குயவனிடம் மண்ணும், மட்பாண்டம் செய்யும் அறிவும்,அழகைக்கண்டு ஆனந்திக்கும் பண்பும், இருந்தது.மட்பாண்டத்தை படைத்து குயவனாகியஇயற்க்கை எனும் இறைவன் ஆனந்திக்கின்றான்.


இயற்க்கை எனும் இறைவனாகிய ஓவியனிடம், காகிதமும், ஓவியம் வரையும் அறிவும், ஓவியத்தைக்கண்டு அதன் அழகை இரசிக்கும் பண்பும் இருந்தது ஓவியத்தை வரைந்த ஓவியனாகியஇயற்க்கை எனும் இறைவன் இன்புறுகிறான். இறைவனே உலகைப்படைத்து, இறைவனே உலகமாகவும், உயிர்களாகவும் விளங்க, இன்ப துன்பங்களாவும், இன்ப துன்பங்களை நுகர்வோனாகவும் விளங்குகிறான். கடவுள் முன்னுரை கடவுளை இதுவரை எவரும் கண்டதில்லை. ஏனெனில் கடவுள் என்பது, முதலில் தோன்றிய மனிதனின், கற்பனையாகும். அல்லது அனுமானம் ஆகும். அதாவது மிக உயர்ந்த இலக்கின் கற்பனையே கடவுள் ஆகும். இப்பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையில் இருந்த மாபெரும் முழுமையான ஆற்றலே கடவுளாகும். இந்த மாபெரும் ஆற்றலில் இருந்துதான் இப்பிரபஞ்சம் தோன்றியது. எல்லா பொருள்களிலும்இந்த ஆற்றல் உள்ளது. ஆனால் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு விகிதத்தில் ஆற்றல் அமைந்து பொருள்களை இயக்குகின்றது. இப்பிரபஞ்சத்தை எந்த ஆற்றல் தோற்றுவித்ததோ, அந்த மூல ஆற்றலே ஒவ்வொரு பொருள்களிலும் , மற்றும் உயிர்களிலும் இருந்து இயக்கி கொண்டிருக்கிறது. இந்த மூல ஆற்றலின் விகிதம் முழுமை பெற்று மனித தேகத்தில் அமைந்துள்ளது. கடவுளே பிரபஞ்சமாகி இருக்கிறார். கடவுளே மனித தேகத்தில் இருக்கிறார். கடவுளே எல்லா உயிர்களிலும் இருந்து இயக்குகின்றார். மனித தேகத்தில் உள்ள கடவுளை மனிதன் காணவேண்டும். தனகுள் உள்ள கடவுளை மனிதன் காண வேண்டும். தனக்குள் உள்ள உயர்ந்த ஆற்றல் எனும் கடவுளை வெளிப்படுத்தவேண்டும் ஆனால் மனிதனோ கடவுளை வெளியே தேடுகிறான். வெளியே கடவுளை இதுவரை எவரும் கண்டதில்லை. தனக்குள்ளே கடவுளை கண்டதாக பெரியோர்கள் கூறியுள்ளனர். நாமும் நமக்குள்ளே உள்ள கடவுளை காண முயற்ச்சிப்போம். கடவுள் என்னும் உயர்ந்த சக்தி பெற்ற மனிதனை இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.அல்லது மனிதன் அந்த நிலைக்கு உயர வேண்டும். அல்லது உயர்ந்த சக்தியை கடவுளாக ஏற்றுக்கொள்வது ஆகும் . கடவுளாக ஏற்றுக்கொள்வதும் ,சக்தியை சக்தியாகவே, அல்லது இயற்க்கையாகவே ஏற்றுக்கொள்வதும் அவரவர் விருப்பம் ஆகும். அதாவது கடவுள் என்பது மனிதனால் தனக்குள்ளே கண்டு பிடிக்க பட வேண்டிய ஒன்று ஆகும்.அல்லது அந்த நிலையை அடைந்து கடவுள் நிலையை உணர்ந்து அனுபவிப்பது ஆகும்.



கடவுளைப்பற்றி கற்பனை தோன்றியது எப்படி? உலகத்தில் தன்னைவிட உயரந்த இயற்க்கை சக்தியை கண்டான். அந்த இயற்க்கையிலிருந்து தானே நாமும் தோன்றினோம், நமக்கு ஏன் அந்த ஆற்றல் இல்லாது போயிற்று என்று சிந்திக்க தொடங்கினான். இப்போது இருக்கும் ஆற்றலைவிட உயர்ந்த ஆற்றலை பெறுவது எப்படிஎன்னும் முயற்ச்சியினால் அடைந்த வெற்றிதான் ஞானமும், விஞ்ஞானமும் ஆகும். எண்ணியதை நிறைவேற்ற முயற்ச்சி வேண்டும். முயற்ச்சி செய்ய, அதற்க்கான பயிற்ச்சி வேண்டும். பயிற்ச்சி செய்தால் அதற்க்கான அனுபவம் கிடைக்கும். அனுபவத்தினால் உயர்ந்த நிலையை அடைவதற்க்குரிய முயற்ச்சி அறிவு கிடைக்கும். ஞானம் என்பது எண்ணங்களினால் மட்டும் சிந்தனை செய்து தான் மட்டும் ஆனந்தப்பட்டுதிருப்தி அடைவது. விஞ்ஞானம் என்பது தன் எண்ணங்களை புறப்பொருள்களில் செலுத்தி வெற்றிகண்டு எல்லோரும் ஆனந்தப்படுவது ஆகும். மனிதன் எப்போதும் முயற்ச்சி செய்து மிக உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினால் ஆரம்பகால மனிதனின் கற்பனையின் மிக உயர்ந்த இலக்குதான் கடவுள். அதனால்தான் தன்னைவிட கடவுளை உயர்ந்த நிலையில் வைத்து, தனக்கு இல்லாத குணங்களையும், ஆற்றல்களையும் கடவுளுக்கு இருப்பதாக கூறி, கடவுள் நிலையை அடைய மனிதன் முயன்று கொண்டு வருகிறான். கடவுள் என்பது கற்பனையாகும். இப்பிரபஞ்சத்தின் அளப்பறிய ஆற்றலை அடைய எல்லா உயிர்களும் முயற்ச்சிக்கின்றன. இந்த வெற்றியின் வரிசைக்கிரமம் பரிமான வளர்ச்சி ஆகும். பிரபஞ்சத்தின் வளர்ச்சி என்பது கற்பனைகளின் வெற்றி ஆகும். பிரபஞ்சம் என்பதே மனிதனின் கற்பனை ஆகும். ஏனெனில் ஆகாயம் மட்டுமே அடிப்படைஉண்மைப்பொருள் ஆகும். அரிசியை{RICE}க்கொண்டு, மனிதனின் சிந்தனையாலும், கற்பனையாலும், மாவு, இட்லி, தோசை,ஆப்பம்,பணியாரம், கொலுக்கட்டை, போன்ற பல நிலைகளை உருவாக்கி உள்ளான். அரிசி மட்டுமே அடிப்படை உண்மைப்பொருள் ஆகும். இயற்க்கையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் தனது தேகத்தில் பொருத்தி தன்னை போலவே கடவுளை உருவகப்படுத்தினான். உதாரணத்திற்க்கு இயற்க்கையின் ஆற்றலுக்கு ஒவ்வொரு பெயராக வைத்து பிரம்மா, விஷ்னு, ருத்திரன்,என்றும் , படைத்தல், காத்தல், அழித்தல், முதலிய தொழில்களையும் பொருத்தி அமைத்துக்கொண்டான். தாவரங்கள்,மிருகங்கள், மற்றும் எல்லாவற்றையும்விடஇயற்க்கையின் மனிதனாகிய தான்மட்டும்,


இவற்றை பின்வரும் தனதுசந்ததியினர் உணர்ந்து கொள்வதற்க்காக உடம்பின் நுட்பங்களை கோவிலாக அமைத்தான். அவர்கள் கூறிவற்றின் அடிப்படைக்கருத்து என்னவெனில் உடம்பில் இயங்கும் ஒவ்வொரு இயக்கத்தையும் , நான்{தான்} செய்யவில்லை, எனவே ஏதோ ஒரு ஆற்றல் செயல்படுத்துகிறது என்றும் அதற்க்கு கடவுள் என்றும் பெயரிட்டான். இரத்த ஓட்டத்தை நான் நடத்தவில்லை,சுவாசத்தை நான் நடத்துவதில்லை, இதய துடிப்பை நான் நடத்துவதில்லை. எனவே ஏதோ ஒரு ஆற்றல் நடத்துகிறது அதைக்கடவுளாக கருதினான். இவற்றை நாமும்,{?} விஞ்ஞானிகளும், இயற்க்கை என்று கூறுகிறோம். உடலின் நுட்பங்களை ஆலயமாக அமைத்ததை மறைத்து,கடவுள் எங்கோ ஓரிடத்தில் இருப்பதாகவும், கூறி பின்னால் வந்தவர்கள் இவற்¢றைக்கொண்டு பாமர மக்களிடம் பொருள் பறிக்க ஆரம்பித்தனர். அதாவது இயற்க்கையில் உள்ள. இயற்க்கையை உண்டாக்கிய, இயற்க்கையின் மூல ஆற்றல் தனக்குள்ளும் தனைச்சார்ந்த அனைத்து பொருள்களிலும் இருக்கவேண்டும் என்றும், தன்னாலும் இயற்க்கையின் உயரந்த ஆற்றலான கடவுள் நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால், தன்னால் உருவகப்படுத்தப்பட்ட, கற்பனை செய்யப்பட்ட, கடவுள் நிலையை அடைய முயற்ச்சி செய்து கொண்டு வருகிறான். இதுவரை உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் யாவும் ஒரே மனிதனின் அறிவினால் அல்ல.
பல தலைமுறைகளின் தொடர் முயற்ச்சி ஆகும். ஒரு மனிதன் அடிப்படை கற்பனையை உருவாக்குவான் இந்த மனிதனை நம்பும்,அல்லது ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் அவனது கற்பனையின் அடிப்படையில் சிந்தனை செய்து அதனை நிரூபனம் செய்வர்.அல்லது மாற்று கற்பனையைகூறிச்செல்வார்கள். பின் வருபவர்கள் மாற்று கற்பனையின்படி முயற்ச்சி செய்து வெற்றிகாண்பர். அல்லது தோல்வி கண்டு விட்டுவிடுவர்.பின்னர் நீண்ட நாள் கழித்து ஒருவர் நிரூபணம் செய்து வெற்றி அடைவர்.
இப்படித்தானஉலகநடைமுறையில் அனுபவமாக நடந்து வருகிறது. இங்கு எல்லா கற்பனைகளும் நிரூபிக்கப்படும் என்று உறுதி கூறமுடியாது. இயற்க்கைக்கு பொருத்தமானதையும்இயற்க்கையில் உள்ளவற்றையும் மட்டும் மனிதன் கற்பனை செய்தால் வெற்றி காணமுடியும். இயற்க்கையை மீறியோ, இயற்க்கைக்கு அப்பால் உள்ளவற்றையோ மனிதன் வெற்றி கொள்ள முடியுமா? என்பதை கூறமுடியாது. காலத்தினால்தான் இதற்க்கு தீர்வுகாண வேண்டும். முதலில் தவறாக அமைந்த கற்பனைகள் பின்னர் சரி செய்யப்பட்டு வெற்Pயு‹ தோல்வியு‹ அடைந்து கடைசியாக வெற்றி அடைந்தனர்.

சித்தரகசியம்



                             மனிதன் அறிந்து கொள்ள வேண்டியது எது?

இந்த தேகத்தையும் மூளையையும்  முழுமையாக உபயோகப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த தேகத்தையும் அறிவையும் சரியாக உபயோகப்படுத்தாமல் வீணாக்குகின்றோம்
சரியாக உபயோகப்படுத்த,
மனதையும் உடலையும் தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
muvairavelu.blogspot.comஇதற்கு அன்பாகயிருக்கவேண்டும்.மனத்தாலோ,சொல்லாலோ, செயலாலோ யாருக்கும் தீங்கு
நினைக்கவோ, சொல்லவோ, செய்யவோ கூடாது.  இதை எப்போதும் கடைபிடிக்க பயிற்சி செய்ய வேண்டும்.
இவற்றை கடைப்பிடிக்காவிட்டால் என்ன ஆகும்.
மன அலைச்சல் ஏற்ப்படும்.
இதனால் மன ஒருமை ஏற்ப்படாது.
அதனால் எடுத்த காரியம் வெற்றி அடையாது.
மனம் எதை பற்றுகிறதோ மன ஒருமையுடன் இருந்தால் மட்டுமே,  போராடி அதை அடைய முடியும்.
இவற்றை அனுபவித்து அதன் உண்மையை உணர்ந்து கடைபிடியுங்கள்.
ஆதலால்,
தொடக்கூடாததை தொடக்கூடாது,சுவைக்க கூடாததை சுவைக்க கூடாது.
நுகரக்கூடாததை நுகரக்கூடாது. கேட்க கூடாததை கேட்க கூடாது.
பார்க்க கூடாததை பார்க்க கூடாது.சொல்ல தகாததை சொல்லக்கூடாது.
நினைக்க கூடாததை நினைக்க கூடாது.
இப்படி பயிற்சி செய்தால் ஒழுக்கம் ஏற்படும்.
இதனால் மன அமைதி கிடைக்கும்.
மன அமைதியினால் நம் கவனமும் லட்சியமும் உறுதி பெறும்.
இதனால் மன ஒருமை ஏற்ப்படும்.எல்லா காரியங்களும் வெற்றியாகும்.
மனம் எப்போதும் புறத்தே  சென்று வியாபித்து அலைந்து உடலின் பலத்தையும்,மூளையின் பலத்தையும் வீணாக்குகின்றது.
இவ்வாறு புறத்தே செல்லும் மனத்தை,
தன்வசமாக உட்புறமாக திரும்பச்செய்தால் மனம் தன் அதிஅற்புத பேராற்றலை வெளிப்டுத்தும்.
இதை லட்சியம் செய்யாமல், மேலும் மனதை தன் வசமாக வைத்திருந்தால் மனம் மறைந்து  போகும்.
மனம் இல்லாத நிலையில் எல்லாவற்றையும், எதுவும் செய்யமுடியும்.மனம் தனக்கு விருப்பமான செயல்களில்  ஈடுபடும் போது நேரம் செல்வது தெரியாது.மனம் தனக்கு பிடிக்காதவற்றைச்செய்யும்போது அல்லது பிடிக்காத சூழ்நிலையில் இருக்கும்போது நேரம் செல்வது மிகவும் தாமதமாகத்தோன்றும்.
இனிய சொல்கூறல்வேண்டும்.
செயல்களில் நேர்மை இருக்கவேண்டும் இவ்வாறு இருந்தால் மனமும் உடலும் அமைதி பெறும்.


                  எனக்குள் தோன்றிய   சிந்தனைத்துளிகள்¢.

இந்தபிரபஞ்சம் எதனை அடிப்படையாக்கெண்டு இருக்கிறது?.
ஆகாயத்தை
இதற்கு முன்னோர்கள் என்ன பெயர் கூறினர்
சிவம், சதாசிவம், இடம், கண், பராபரம் என்று கூறினர்.
இந்த இடம் எனும் ஆகாயத்தில் என்ன இருக்கிறது?
பொருள் இருக்கிறது.
பொருள் என்றால் என்ன? அது எதனால் உருவாக்கப்பட்டது?
அது அணு. அணுக்களால் உருவாக்கப்பட்டது பொருள் ஆகும்.
அந்த பொருளின் நிலை என்ன? உருவம் என்ன?
வாயு நிலை. உருவம் இல்லை. அது அருவம்
வாயு தனக்குள் வைத்திருப்பது என்ன?
வாயு தனக்குள் வைத்திருப்பது வெப்பம் ஆகும்.
வெப்பத்தோடு இணைந்து இருப்பது எவை?
வெப்பத்தோடு இணைந்து இருப்பது ஒளியும், ஒலியும் ஆகும்.
அதாவது ஒளி,ஒலி, வெப்பம், இவை மூன்றும் எப்போதும் இணைந்தே இருக்கும்.
இதற்கு முன்னோர்கள் என்ன பெயர் கூறினர்?
பிரணவம், ஏகத்துவம்,அத்துவைதம்,ஏகன், மும்மூர்த்தி, திருமூர்த்தி, திரிசூலம்  என்றும் இன்னும்
அவரவர் மொழிக்கு ஏற்பவும், அவரவர் வாழும் தேசத்திற்க்கு ஏற்பவும்  பலவாறு கூறினர்.

இவைகளுக்கு வேறு நிலைகளும் ஏற்படுமா? அவை என்ன?
ஆம், திரவ நிலை, திட நிலை ஆகும்.

எனவே இருப்பது இடம் எனும் ஆகாயம்
ஆகாயத்தில் இருப்பது பொருள் எனும் அணு
அணுவில் தோன்றியது வாயு
வாயுவின் நிலைகள் மூன்று
அவை, வாயு, திரவ, திட, நிலையாகும்
இயல்பான வெப்ப நிலையில்  உள்ள  அணுக்களுக்கு வாயு என்றும்.
இயல்பான வெப்ப நிலையைவிட தாழ்ந்த வெப்பநிலையில் உள்ள அணுக்களுக்கு திரவம் என்றும்
இயல்பான வெப்ப நிலையைவிட மிக தாழ்ந்த வெப்பநிலையில் இறுகிஉள்ள அணுக்களுக்கு திடப்பொருள்  என்றும் பெயர்.
இந்த மூன்று நிலைகளும்  உண்டாவதற்க்கு காரணம் அக்னி ஆகும்.
¢.



                              எனக்குள் தோன்றிய சிந்தனைகள்
                       
                          வேதாந்தத்திற்க்கும்,  சன்மார்க்கத்திற்க்கும்  உள்ள வேற்றுமை என்ன?

சமயத்திலும், மதத்திலும், வேதாந்தத்திலும்  சுத்தத்தையும், தூய்மையையும் தீண்டாமையாக கருதி
பேதம் உண்டாக்கி,ஆன்மாக்களிடம் ஒற்றுமையும் சமரசமும் இல்லாமல் போயிற்று.  தூய்மை என்பது மனத்தூய்மை, உடல் தூய்மை, செயல்களில்  நேர்மை, ஆகியவற்றை தவறாக கருதி மனிதர்களுக்குள் தீண்டாமையாக மாறிவிட்டது.

வேதாந்தத்தில் தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு பரம்பரையாக தொடர்ந்து அருள் கிடைக்கும் என்று நம்பினர்.

சன்மார்க்கத்தில் தயவும், கருணையும் உடைய அனைவருக்கும்  அருள் கிடைக்கும் என்பது
அனுபவம்.
சன்மார்க்கத்தில் முதலில் உயிர்களிடத்தில் அன்பும், தயவும் காட்ட வேண்டும். பிறகு தயவின்
மிகுதியால் யாகம் முதலியவைகளைச் செய்யலாம் என்று வரை முறை செய்யப்பட்டது.

சமயங்களிலும், மதங்களிலும்,வேதாந்தத்திலும் யாகத்திற்¢கு மட்டும் முக்கியத்துவம்  கொடுத்து
உயிர்களிடத்தில் அன்பும், தயவும் காட்டுவதையும் அறவே கைவிட்டனர்.
வெறும் மூடநம்பிக்கையாக்கி விட்டனர்.

வேதம் என்றால் என்ன?
வேதம்  என்றால் பேதம் என்னும் மாறுதல் என்பது ஆகும்.அல்லது வேதியல் ஆகும்.
வேதியல் விதிகளுக்கு உட்பட்டது. மாறுதல் என்பது எல்லைகளுக்கு உட்பட்டது.

எது மாறுவது என்பதை குறிக்கிறது.
அணுக்களையும் அணுக்களால் நிறைந்த பொருள்களின் மாற்றத்தையும்  குறிப்பது ஆகும்.
ஒன்றிலிருந்து பொருள்கள் மற்றொன்றாக மாறுவதை கூறுவது ஆகும்.
இதற்கு  தற்காலத்தில் நாம் வேதியல் என்று கூறுகிறோம்.

வேதம் என்ற வார்த்தையின் மொழி விளக்கம் என்ன?
வேதம் என்ற வார்த்தையின் மூலச்சொல் வேத என்பது ஆகும்.

வேத என்றால் மாற என்று பொருள் ஆகும்.
வேத என்ற வார்த்தையின் கிளைச்சொற்க்கள் வேது, வேதி, என்பது ஆகும்.

வேது என்றால் மாறு என்று பொருள் ஆகும்.
வேதி என்றால் மாற்றம் செய் என்று பொருள் ஆகும்.

வேதியல் என்றால் மாற்றம் செய்யும் பண்பு என்று பொருள் ஆகும்.
வேதியல் = மாற்றம் செய்யும் இயல்பு ஆகும்.

வேதத்தின் சாராம்சம் என்ன? அது எதனை விளக்குகிறது?
பிரபஞ்ச ஆற்றலின், செயல்படும்  தன்மையை விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தன்மையையும், அதன் இயல்புகளையும், பிரபஞ்சத்தின்  செயல்பாடு, மற்றும்
செயல்முறைகளையும் , பிரபஞ்சம் அமைந்த விதத்தையும், கூறுகிறது.
வேதம் இயல்பானது ஆகும்.

இந்த பிரபஞ்சம்
வேதம் தோன்றுவதற்க்கு முன்பும்,இருந்தது.
வேதம் தோன்றும் போதும் இருந்தது.
வேதம் தோன்றிய  பின்பும்,  இருக்கின்றது.

வேதம் யாரால் இயற்றப்பட்டது?
வேதம் எவராலும் இயற்றப்படாதது.பிரபஞ்சமும் எவராலும் உண்டாக்கப்படாதது.

வேதம் எப்படி வெளியே கொண்டு வரப்பட்டது?
வேதத்தினால் தோன்றிய மனிதனின் முயற்ச்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
வேதத்தினால் தோன்றிய மனிதன் என்பது, மாறுதல்களை அடிப்படையாக கொண்டு
இயங்கும் பரிமாண வளர்ச்சியில் தோன்றிய மனிதன் என்பதாகும்.
மாறுதல்களை அடிப்படையாக கொண்டது வேதம்.
வேதத்தை அடிப்படையில்  வளர்வது பரிமாணம்
பரிமாணத்தில் விரிவானது இப்பிரபஞ்சம்.
வேதத்தில் பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் வேதமும் அடங்கி உள்ளது.

                                            நான்

நான் இப்போது தற்சமயம் இருக்கிறேன்.
இதற்க்கு முன்பு இருந்தாயா?
தெரியாது.
நாளை இருப்பாயா?  என்றும் இருப்பாயா?
உறுதி கூற முடியாது.
நான் எங்கு இருக்கிறேன்?
தேகத்தில்  இருக்கிறேன்.
நான் என்பது என்ன?
தெரியாது.ஆனால் தேகத்தில் ஏற்ப்படும் இன்ப துன்பங்களை ஏற்பதுவாகவும்,உணர்வதுவாகவும்
அறிவதுமாக உள்ளதை நான் என்று கூறலாம்.
நான் இருக்கும் தேகத்தை உருவாக்கியது எது?
தெரியாது. நான் உருவாக்கவில்லை.
என் தேகம் நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், எனும் ஐம்பூதங்களால் உண்டானதாக முன்னோர்கள் கூறுகின்றனர் இவை எனக்கு ஏற்ப்பு உடையதாகவும் தோன்றுகிறது.
உன் தேகம் பஞ்ச பூதங்களால் தோன்றியதா?
ஆமாம். அப்படித்தான் கருதுகிறேன்.
உன் தேகத்தை எப்படி பெற்றாய்?
என் தாய், தந்தையர் சேர்க்கையால் தாய் மூலமாகப்பெற்றேன்.
உன் தாய் தந்தையருக்கு உன்னை உருவாக்கும் அறிவும் திறமையும் உள்ளதா?
இல்லை. என்னால் கூற முடியாது.
எப்படி கூறுகிறாய்?
என்னை உருவாக்கும் அறிவும், திறமையும் இருந்தால் என்னை அழியாமல் தேகத்தை பாதுகாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என் தேகம் அழிந்து விடுகிறது. நான் இறந்து
விடுகிறேன்.என் தேகத்தை நானும் உருவாக்கவில்லை. தாய் தந்தையருக்கும் உருவாக்கும் ஆற்றல்
இல்லை. அப்படி எனில் என்னால் எவரிடமாவது வேண்டுதல் செய்யப்பட்டோ அல்லது விரும்பபட்டோ ஏதோ ஒரு மாற்று சக்தியால் உருவாக்கப்பட்டதா?அல்லது என் தேகம் தன்னைத்தானே பரிமாணவளர்ச்சியில் உருவாக்கிக்கொண்டதா?
தன்னைத்தானே பரிமானவளர்ச்சியால் உருவாக்கிக்ககொண்டதாக இருந்தால் ஏன் இறவாமல்
பாதுகாக்க தெரியவில்லை?தேகம் அழியாமல் இருக்குமா? அதற்க்கும் திரூபணம் இல்லை.
நிரூபணமாக கூறும் உதாரணங்களும்  வாத பிரதிவாதத்துக்கும், சந்தேகத்திற்க்கும் இடமாயுள்ளது.
இறப்பது இயற்க்கை ஆகும்.
இறப்பது  இயற்க்கை என்றால்இயற்க்கைக்கு அந்த வல்லமையையும், உரிமையையும், கொடுத்தது யார்?அல்லது எப்படி வந்தது.
இப்படி எல்லாவற்றிற்க்கும் ஏன் எப்படி என்று கேட்டால் முடிவில் உள்ள கேள்விக்கு பதில் இல்லை. ஒரே பதில் அது அப்படி இருக்கிறது. அல்லது அது அப்படிதான் இருக்கும்.
இயற்க்கை தானாக வந்தது என்றால்  எப்படி ஏன் வந்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
வேறொரு சக்தியால்{கடவுளால்} படைக்கப்பட்டது என்றால், கடவுள் ஏன் படைத்தார், அவருக்கு
படைக்கும் எண்ணம் ஏன் உண்டாயிற்று அவருக்கு அந்த அதிகாரமும் வல்லமையும்  எப்படி வந்ததுஎன்ற கேள்விக்கு பதில் இல்லை.
விஞ்ஞானத்தின்படி,  அணுக்கள் எப்படி தோன்றியது  அவற்றை உருவாக்கியது எது? தானாக வந்தது என்றால் ஏன்?எப்படி?வந்தது என்றால்  இந்த கேள்விக்கு பதில் இல்லை.

ஆன்மீகவாதிகளின் கருத்துப்படியும், இயற்கைவாதிகளின் கருத்துபடியும், விஞ்ஞானிகளின் கருத்துபடியும், இவர்களின்  கருத்துக்களுக்கெல்லாம்  மூலம் ஏன் எப்படி உண்டானது என்பதற்கு
விடை இல்லை.
உலகத்தில் மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இந்த சிந்தனை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்படி விசயங்களைப்பற்றி  அவரவர் நிலையில் அவரவர் சிந்தனைக்கேற்ப  அவரவர் ஒரு
கொள்கையை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தனர்.
பின்னர் தனது சந்ததியருக்குஇந்த கொள்கையை போதித்து அதனை கடைபிடிக்க வழி வகுத்து சென்றனர்.
உலகத்தில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து,நம் முன்னோர்கள் முதற்க்கொண்டு நம் காலம் வரை பிரபஞ்ச தோற்றத்தை பற்றி தெரிந்து கொள்ள பலவித கற்பனைகளாலும், பலவித அனுமானங்களாலும் முயற்சி செய்து கொண்டு வருகிறோம்.
இது எப்படி என்றால் பிரபஞ்சம் என்னும் எண்ணற்ற மர்மங்களை உடைய அரங்கத்தில் நுழைந்து
ஒவ்வொரு மர்மங்களையும் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா மர்மங்களின் உறைவிடம் அறிவே ஆகும். இந்த அறிவு நம்மிடம்தான் உள்ளது.
எல்லாவற்றையும்  தன்வசம், உள்ளடக்கி  வைத்துக்கொண்டது பிரபஞ்சம் ஆகும்.
நாம் பிரபஞ்சத்தின் அங்கமாக இருக்கிறோம்.
பிரபஞ்சத்திற்கு புறத்தில் {வெளியில்} எதுவும் இல்லை.
பிரபஞ்சத்தில் உள்ளது பிரபஞ்சத்தை விட்டு விலகி வேறு எங்கும் செல்ல முடியாது.
பிரபஞ்சத்திற்க்கு வெளியே இருந்து வேறு ஒன்று பிரபஞ்சத்திற்க்குள்  பிரவேசிக்கவும் முடியாது.

விஞ்ஞானிகளின் கருத்துக்கள்
கண்ணுக்கு தெரியாத அணு, அணுவில் உள்ளது புரோட்டான் என்றும்
புரோட்டானைச் சூழ்ந்துள்ளது நியூட்ரான் என்றும்.
இவற்றை சுற்றி வருவது எலக்கட்ரான் என்றும்
இந்த எலகட்ரான் எட்டு சுற்று பாதைகளில் சுற்றி வருகிறது என்றும்
மேலும் எலக்ட்ரானில் இருந்து போட்டான் photons என்பது வெளிப்படுகிறது
 என்றும்புராட்டான்களில் பொடிமங்கள் எனப்படும் quark என்பது உள்ளது என்றும்
ஆனால் இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாது என்றும், இருப்பினும் இவற்றில்
உள்ள ஒளியைஅலைகளாக கண்டுபிடித்து அளவீடு செய்ய முடியும் என்றும்
கூறுகின்றனர்.அணு என்னும் பொருள் இயங்குவதை, வேதியல் மாற்றங்களை,
விஞ்ஞானிகள் மனத்தினாலும்எண்ணங்களினாலும் கருதிக்கொண்டும்,
நினைத்துக்கொண்டும், கற்பனைகளாக உருவாக்கி காரணம் கூறி வருகின்றனர்.
சுருங்ககூறின் பொருள்களை பற்றிய கருத்துக்களே எல்லாம்.
பொருள்களைப்பற்றிய  எண்ணங்களே எல்லாம். மற்றபடி அனுமானம்  தவிர
வேறொன்றுமில்லை.


அதாவது இருப்பது பொருள் மட்டுமே.  இயங்கும் பொருளை விளங்கி கொள்வதற்¢கும் மற்றவர்களுக்கு விளக்கி காட்டும் உதாரணங்கள்தான் இவ்வாறாக கூறி வருகிறோம்.

ஆன்மீகவாதிகளின் கருத்துக்கள்.

ஆன்மா என்றால் என்ன?  அன்பு என்றால் என்ன?  மனம் என்றால் என்ன?
அறிவு என்றால் என்ன?  இவைகளுக்கெல்லாம்  எவரிடத்திலும் விளக்கம் இல்லை.
ஆன்மா, அன்பு, அறிவு, மனம், இவைகள் கண்ணுக்கு  தெரியாதவை.மேலும் இவைகளை எல்லாம்
இயக்கும் கடவுள் உள்ளது என்றும் கூறுவர்.
முடிவாக கூறினால் அணுக்கள் இயங்குகின்றது. அவ்வளவே உலகம், பிரபஞ்சம் எல்லாம்.
இவற்றை பற்றி கற்பனை கருத்துக்கள் அனேகம்.
உலகம் தோன்றிய காலம் முதல் கூறப்பட்டு வரும் கதைகளும், கற்பனைகளும், கருத்துக்களும் ஏராளம்.
அணுவையும், கடவுளையும் இதுவரை எவரும் கண்டதில்லை.
அது இருக்கிறது. உலகம் என்பதும், உலகத்தைப்பற்றிய விளக்கங்களும்  அவரவர் கருத்துக்களே
அவரவர் எண்ணங்களே,  அவரவர்  கற்பனைகளே,    ஆன்மீகவாதிகள்  இதனை  மாயை என்கின்றனர்

ஆன்மீகமோ, அல்லது விஞ்ஞானமோ, எதை கண்டுபிடித்தும் என்ன பயன்?
கீழ் கண்ட உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.

ஒரு அரசனுக்கு இப்பிபஞ்ச வரலாற்றை அறிந்து கொள்ள ஆசை வந்தது. உடனே தன்
மந்திரிகளை வரவழைத்து தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். மந்திரிகள் ஒன்று கூடி
நாட்டில் உள்ள சிறந்த பண்டிதர்களை வரவழைத்து மன்னரின் எண்ணத்தை ஈடேற்றுமாறு
பணித்தனர்.பண்டிதர்கள் ஒவ்வொருவரும் தகவல்களை சேகரித்து தலைமை பண்டிதரிடம்
கொடுத்தனர்.தலைமை பண்டிதர் பத்து குதிரைகளில் ஏற்றி  தகவல்களை தலைமை மந்திரியிடம் கொடுத்தனர்.மந்திரி அரசனிடம் சமர்ப்பித்தனர்.அரசன் அவைகளை பார்த்துவிட்டு  இவைகளை சுருக்கி கொண்டு வருமாறு பணித்தார். சிலநாட்கள் கழித்து மந்திரிபண்டிதர்களை வைத்து சுருக்கி மூன்று குதிரைகளில் ஏற்றி சென்று மன்னரிடம் சமர்ப்பிக்க, மன்னர் அவற்றையும் சுருக்கி கொண்டு வரும்படி கூற, இறுதியில் ஒரு குதிரையில் ஏற்றிச்சென்று சமர்ப்பிக்க, அவற்றையும்
சுருக்கி வரும்படி கூற, மன்னரின் செயலை தலைமை மந்திரி, ராஜ குருவிடம் கூற, ராஜகுரு ஒரு
ஓலைத்துண்டில் மூன்று வரிகளை எழுதி ஒரு சிறுபேழையில் வைத்து மன்னரிடம் கொடுக்குமாறு
கொடுத்தார்.
அடுத்தநாள் மந்திரி அந்த பேழையை மன்னரிடம்  கொடுத்தார்.மன்னர் அந்த பேழையை வாங்கி பார்த்து விட்டு மிகவும் கோபமாக நான் கேட்ட அணைவரின் சரித்திரமும்
இந்த பேழையில் உள்ளதா என்று கேட்க அதற்கு  ஆமாம் என்று மந்திரி பதில் ஆமாம் என்று
கூறினார். மன்னர் அந்த பேழையை திறந்து ஓலைத்துண்டில் எழுதி இருந்ததை படித்து பார்த்தார்.

அதில் இருந்தது என்ன என்றால். அதில் இருந்த மூன்று வரிகள்.

மனிதர்கள் பிறந்தார்கள். உயிர்கள் பிறந்தன.
மனிதர்கள் வாழ்ந்தார்கள். உயிர்கள் வாழ்ந்தன.
மனிதர்கள் இறந்தார்கள். உயர்கள் இறந்தன.

ஆன்மீக காலமோ, விஞ்ஞான காலமோ, அல்லது அதற்க்கு முந்தைய காட்டுமிராண்டி காலமோ
எல்லா காலத்திலும் நடப்பது இதுதான்.இதன் பயன் என்ன? மனதின் ஆசைகளை நிறைவு
செய்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை உணர்ந்தால் எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்.எனவே ஆசைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். ஆசைகள் ஒழுங்காக இருக்க,
மனதை வசப்படுத்த வேண்டும். மனதை வசப்படுத்த,
மனதை வசப்படுத்துவதின் மகிமையை தாயுமானவர் கூறுகிறார்.

கந்துஉக மதக்கரியை வசமா நடத்தலாம்;
          கரடிவெம்  புலிவாயையும்
கட்டலாம்; ஒருசிங்கம் முதுகின்மேல்  கொள்ளலாம்;
          கட்செவி எடுத்துஆட்டலாம்;

வெந்தழனின் இரதம்வைத்து ஐந்துலோ கத்தையும்
         வேதித்து விற்றுஉண்ணலாம்;
வேறுஒருவர் காணாமல் உலகத்து உலவலாம்;
         விண்ணவரை ஏவல்கொளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்றுஒரு
        சரீரத்தினும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
       தன்நிகர்இல் சித்திபெறலாம்;

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
       திறம்அரிது; சத்துஆகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவுஆனதெய்வமே
       தேஜோ  மயானந்தமே
       

எண்ணங்களின் தொகுப்பால் உண்டாவதே மனம்.
எனவே எண்ணங்களில் தூய்மையாக இருக்கவேண்டும்.
எண்ணங்கள் தூய்மையானால் வார்த்தை தூய்மையாகும்.
வார்த்தை தூய்மையானால் செயல்கள் தூய்மையாகும்.
செயல்கள் தூய்மையானால் பழக்கம் தூய்மையாகும்.
பழக்கம் தூய்மையானால் வழக்கம் தூய்மையாகும்.
வழக்கம ¢தூய்மையானால் மரபு தூய்மையாகும்.
மரபு தூய்மையானால் சமுயாயம் தூய்மையாகும்.

இவற்றை பின்பற்றும் வழிமுறைகள் மனிதன்
அறிந்துகொள்ள வேண்டியது என்னும் தலைப்பில் முதலில் கூறப்பட்டுள்ளது.

இவைகளை பயில்வதுதான் முயற்ச்சியாகும்.
இதுதான்  நன்முயற்ச்சியோடு இருத்தல் ஆகும்.

வள்ளுவன் கூறியபடி மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.
உள்ளத்தில் உள்ளுவதாகிய, எண்ணுவதாகிய எண்ணங்களில் உள்ள வஞ்சம் ,பொய்,
களவு,சூது, சினம் ஆகிவற்றை நீக்குதல் வேண்டும்.
அதாவது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்,
முதலிவற்றை நீக்குதல் வேண்டும்.
இவைகள் இயற்க்கை அறிவு என்னும் இறை அறிவை மறைத்துக்கொண்டு இருக்கிறது.
இவை நான்கும் இயற்க்கைநிலை எனப்படும், இறைநிலையை
அடைவதற்க்கு உரிய அறச்செயல்களுக்கு தடைகளாகும்.

நம் தேகம்  அணுக்களின் சேர்க்கையாகும்.

அணுக்கள் ஒன்றுசேர்ந்து செல் ஆனது.
செல்கள் ஒன்றுசேர்ந்து திசு ஆனது.
திசுக்கள்  ஒன்றுசேர்ந்து உறுப்பானது.
உறுப்புகள் ஒன்றுசேர்ந்து உடலானது.



இதை கடை பிடிக்காமல் யோகாசனம், பிராணாயாமம், கண்களை முடிக்கொண்டு
தியானம்செய்வது, மந்திரம் ஜெபித்தல், கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல்,
விரதம் இருத்தல், உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தலால் அற்ப பிரயோசனம்
மட்டும் கிடைக்கும். வெற்றியின்இலக்கான இயற்க்கைநிலையெனும்,
இறை நிலையை அடைய முடியாது.மேற்க்கூறிய ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து,
அவற்றோடு இவைகளையும் கடைப்பிடித்தால் இறைநிலை எனப்படும்
இயற்க்கைநிலையை அடையலாம்.

யோகாசனம் செய்தால் உடலுக்கு வலிமை உண்டு.
தியானம்   செய்வதாலும், மந்திரம் ஜெபித்தலாலும், ஒரு உருவத்தை நிணத்துக்
கொண்டிருந்தாலும்பிராணாயாமம் செய்வதாலும் இவைகளால் மனதுக்கு வலிமை உண்டு.அவ்வளவு தான் பயன். இறைநிலையை அடைய முடியாது.

மேலும் எல்லாம் கடவுள் என்றும், எனக்குள்ளும் கடவுள் உள்ளது என்று
கூறிக்கொண்டிருந்தால் காலவிரயமும், துன்பங்களும் தான் மிஞ்சும்.
செயலின்றி பயன் இல்லை.


மனிதன் ஒழுக்கமாக வாழக்கற்று கொள்ளாதவரை மனிதனிடம் எவ்வளவு
நல்ல திட்டங்களை கூறினாலும் மனிதன் அவற்றை கடைப்பிடிக்கமாட்டான்.

எனவே சமுதாய சீர்திருத்தவாதிகள் மக்களிடம்  நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள். பின்னர் நல்ல உங்களின் திட்டத்தை கற்றுக்கொடுங்கள்.
இப்படி  செயல்படாத காரணத்தினால்தான், பொதுவுடமை எனும் இயற்க்கை
நியதி இன்னும் வெற்றி பெற முடியவில்லை.
இயற்க்கையை கவனியுங்கள். அவற்றிடையே உள்ள ஒழுக்கத்தை கவனியுங்கள்.
அது போலவேமக்களாகிய நாமும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து இயற்க்கையின் மிக
உயர்ந்த ஆற்றலை பெற்று நிலைத்து, நீண்ட நாள் வாழலாம்.
ஏனெனில்  நாம் இயற்க்கையின் அங்கம்.  நமக்கு, இயற்க்கைக்கு
உள்ள மிக உயர்ந்த ஆற்றலைப்பெற உரிமை உண்டு.
இந்த ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.
ஆற்றலைவெளிப்படுத்த நாம் ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும்.
நாம் இயற்க்கையின் ஒரு அங்கம் என்பதை உணரவேண்டும்.
நம்மிடம் உள்ள தீய குணங்கள் யாவும் இயற்க்கையிடம் இருக்கிறதா
என்று சிந்தித்து பாருங்கள்.
இயற்க்கையில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஒன்றுக்கு ஒன்று துன்பமோ, இடைஞ்சலோ செய்கிறதா? சிந்தித்து பாருங்கள்.
தீய குணங்கள் இயற்க்கையிடம் இல்லை என்பதை உணருங்கள்.
உணர்ந்து ஒழுக்கத்தை கடைபிடித்து, ஒருவருக்கும ¢உதவி செய்யாவிட்டாலும்
துன்பம் செய்யாமல் வாழ்ந்து இயற்க்கையைப்போல் அழியாமல் இருங்கள்.
ஆனந்தமாக எப்போதும் வாழுங்கள்.
இந்த ஒழுக்க நெறியை முன்னோர்களும், சித்தர்களும், சன்மார்க்கம் என்றும், சாகாக்கல்வி
என்றும்மரணமில்லா பெருவாழ்வு என்றும்  கூறினர்.

இயற்க்கையே பொது உடைமையாக இருந்த போதும், மக்களிடம்  ஒழுக்கத்தை
கடைபிடிக்கும்குணம் இல்லாததால் மட்டுமே,  இயற்க்கை நியதியாகிய
பொதுவுடைமை வெற்றி அடையவில்லை.

மனிதன் ஒழுக்கமாக வாழ்வதை முற்றிலும்  மறந்துவிட்டான்.
மீண்டும் ஒழுக்கத்தை கடைபிடித்து பழகி பூரணமான மனிதனாகி இறைநிலை
அடைவதாகும். இப்படி வாழ்ந்தவர்களைத்தான் பொதுமக்கள்அவர்களின்
உடல்களை கோவிலில் வைத்தும், ஆலயம், தர்கா,மற்றும்,சீவசமாதியில்
இருப்பவரையும் இறைவனாக வணங்கி வருகிறார்கள்.
இதில் பூரண நிலையை அடையாத மனிதர்களும் மக்கள் தன்னை வணங்க வேண்டும்
என்ற ஆசையினால் ஆலயத்தை அமைத்துக்கொண்டனர்.
இதனால் பயன் உண்டா? இதுஒவ்வொருவரின் நம்பிகையை பொருத்தது ஆகும்.

{இவ்வாறு வாழ்ந்தவர்களின் வரலாறு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.சரித்திரத்தில் ஒருசிலர்
கற்பனை கதைகளையும்,பொய்யான தகவல்களையும்  புகுத்தி உண்மை வரலாறுகளையும்  ஏற்று கொள்ள முடியாதவாறு செய்து விட்டனர்.
பொய் பொய்யாகவே இருக்கட்டும், உண்மை உண்மையாகவே இருக்கட்டும், நாம் உண்மையாக இருப்போம். வேறு கவலைகளும் சிந்தனைகளும் நமக்கு வேண்டாம்.
இவைகளை பொய்யா? மெய்யா ?என்று ஆராய்ந்து கொண்டிருப்பதால் பயன் இல்லை.
ஒழுக்கமாக வாழ்ந்தால், வாழ்பவருக்கும், சமுதாயத்திற்க்கும் நன்மையும்,மகிழ்ச்சியும் உண்டு.ஒன்று
சமுதாயம் பலன் அடையட்டும், அல்லது நீ பலன் அடைவாய். இது நிச்சயம்}

இவ்வாறு ஒழுக்கத்தை கடைபிடிப்பது எளிதானது அல்ல.
ஒழக்கத்தை கடைபிடிக்க தொடர் முயற்ச்சி செய்து வந்தால், ஒழுக்க உணர்வுகள் நிறைந்து,
அடுத்த தலைமுறைகளில் ஒழுக்கமான குழந்தைகளும், மகிழ்ச்சியான சமுதாயமும், காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் இல்லாத சமுதாயத்தில் துன்பமில்லாத இன்பம் மட்டுமே
உள்ள உலகத்தில் நாம் வாழலாம்.

முயற்ச்சியை பற்றி வள்ளுவர் கூறுவதை கவனியுங்கள்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
ஊழையும் உட்பக்கம் காண்பர் உளைவின்றி
ஓயாது உஞற்று பவர்.

                                  புலம்பல்கள்.

இவ்வுலகத்தையும், உலகத்தில் உள்ள உயிர்களையும் அனைத்தையும் இயக்குவது
இறைவனாகஇருந்தாலும்,
இயற்க்கையாக இருந்தாலும்,
நாம் அறிந்து கொள்வதால் எந்த பயனும் இருப்பதாக
தெரியவில்லை.
ஏனெனில் இயக்குவது,  இறைவனோ, இயற்க்கையோ,
அல்லது செயற்க்கையோ
இவைகள் இயக்கினால் மட்டுமே நாம் இயங்குவதாக இருக்கும்போது, நாம் முயன்று அறிந்து கொள்வது என்பது, இயலாததும்  பயன் அற்றதும் ஆகும்.

உயிர்கள் தாமாகவே இயங்குகின்றனவா? இயக்கினால் இயங்க கூடியனவா?

உயிர்கள் தாமாகவே இயங்குவதாக வைத்துக்கொண்டால்,

பிறப்பு நம் விருப்பபடி ஏன் அமைவதில்லை? பெற்றோரை நாமே தேர்வு செய்கிறோமா?
வாழ்க்கையும் விரும்பும்படி  ஏன் அமைவதில்லை?எல்லோரும் செல்வந்தராவது இல்லை. ஆனால் எல்லோரும் செல்வந்தராக வேண்டும் என்று விரும்புகிறோம்.
இறப்பும் நாம் விரும்பியபோது ஏன் நிகழ்வதில்லை?

 நம்மை நாமேபடைத்துக்கொள்வதாக இருந்தால் ஏன் இறவாமலும் ஊனமில்லாமலும் படைத்துக்கொள்வதில்லை
இவைகள் எல்லாம் காலத்தின் கட்டாயமா?
காலம் எப்படி வந்தது?
இயக்கத்தினால் காலம் வந்தது.
இயங்காவிட்டால் காலம் இல்லையா?
ஆம் இயங்காத பொருளுக்கு காலம் ஒன்று கிடையாது.
பொருள்கள் இயங்காவிட்டால் உபயோகம் என்ன?பொருள்கள் உண்டானதின் நோக்கம் என்ன? அதை இனி தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது? அதுவும் காலத்தினால் தான் தெரிந்து கொள்ள முடியும்.
எல்லாம் நாம் செய்வது போலவே இருக்கின்றது. ஆனால் எதுவும் நம் விருப்பப்படி ஏன் நடப்பதில்லை.

உயிர்களை இறைவனோ இயற்க்கையோ இயக்குவதாக வைத்துக்கொண்டால்,

இறைவனையோ, இயற்க்கையையோ, உயிர்கள் தரிசனம் செய்து தன்
கோரிக்கைகளையும் விருப்பங்களையும்   நிறைவேற்றிக் கொள்ள ஏன்
முடிவதில்லை.நமக்கு ஏன் தெரியவில்லை.நாம் மறந்து விட்டோமா?
இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

மரணத்திற்க்குப்பின் மனிதனின் நிலை என்ன?
எவருக்கும் தெரியாது அதைப்பற்றிய அனுமானங்களும், கற்பணைகளும்  ஏராளம்.

இறந்தவர்கள்  எங்கு இருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியவில்லை.
இறந்தவர்கள்  பிறந்தார்கள்   என்பதற்க்கும்   நிரூபணம்    இல்லை.
பிறந்தவர்கள்   இறப்பார்கள்   என்பது    அனுபவமாய்   இருக்கிறது.
இறந்தவர்கள்   பிறப்பார்கள்  என்பது  அனுமானமாய்    இருக்கிறது.
இருப்பவர்கள் இன்னமும்  இருப்பார்கள் என்பது நம்பிக்கையாய் இருக்கிறது.
ஆனால் இப்பிரபஞ்சம் எப்போதும் இருப்பதாக தோன்றுகிறது.

வாசமும், பாசமும் ஒன்றே ஆகும்.
வாசமும், பாசமும் வியாபகம் உடையது.
மணத்தை உடையது வாசம்.
மனத்தை உடையது பாசம்.
இதன் வசம் சிக்கியவைகளால் மீள முடியாது.
வாசம் என்றால் மணம் என்பதாகும். வாசமும்,மணமும், மனமும் வீசும்
{ பரவும்} தன்மையுடையது.
மனத்தின் வசம் சிக்கியவைகள் புலன்கள் ஆகும்.
புலன்களால் பாதிப்பவை பிராணன் எனும் உயிராகும்.
இதனால் பாதிப்பது ஆன்மாவின் விளக்கம் எனும் வியாபகம் ஆகும்.
நம் புலன்களுக்கு எல்லை உண்டு. நம்புலன்களின் எல்லைக்கு அப்பாலும்
பொருள்கள் உண்டு.

இது வரை தோன்றியுள்ள தத்துவங்களும், வேதங்களும் எல்லாவற்றையும் கூறிவிட்டன.
என்ன கூறியது?
அன்பே சிவம், அன்பே கடவுள் என்று கூறியது.
நாம் எவரிடம் அன்பு காட்டியுள்ளோம்.
நாம்  காட்டும் அன்பு என்பது சுயநல அன்பாகும்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த உலகத்தில் அணைத்து உயிர்களிடத்தும்
ஒருமை உணர்வுடன் அன்பு பாராட்டவேண்டும்.

ஆனால் நாமோ எண்ணற்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு எதையும் செய்யாமல்
சோம்பலாகவேஇருக்கிறோம்.
இதற்கு அடிப்படை குற்றவாளி  பகுத்தறிவுவாதிகளின் தவறான அணுகுமுறையே ஆகும். என்று நான் கருதுகிறேன்.

சாக்ரட்டீஸ், கூறிய  ஏன், எதற்கு,எப்படி, என்று சிந்திக்க வேண்டும், என்ற சித்தாந்தம் மிகநல்லது


அது போலவே பகுத்தறிவாளர்கள் கூறிய, மூடநம்பிக்கைகளை பற்றிய
விழிப்புணர்வு கருத்தும், மூட நம்பிக்கைகளை மனிதன் முழுவதும் கைவிடவேண்டும்
 என்ற கருத்தும், கண்டணமும்  மிகவும் பாராட்டுக்கு உரியது.
இக்கருத்துக்களை பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கூற வேண்டியதை
 வெளிப்படையாககூறியது தவறான அனுகு முறையாகும்.
இவர்களுக்கு முன் வாழ்ந்தோர்களை விட இவர்களே அறிவாளி என்ற எண்ணமும்,
 பக்குவ  குறைவும், தொலைநோக்கத்தை பற்றிய கவனம் இல்லாமலும்,
 இதற்க்கு முன் இருந்தவர்கள் வைத்திருந்த சட்டத்தை மீறியது ஆகும்.
எப்படி?
மக்களின் பக்குவத்திற்க்கு  ஏற்பத்தான் உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும்.
எல்லோரிடமும்  எல்லா உண்மைகளையும்  கூறக்கூடாது.மீறிக்கூறினால்
விபரீதங்கள் ஏற்ப்படும்.
மனிதனின் குணத்தை நன்கு ஆராய்ந்த முன்னோர்கள் மனிதனை பயமுறுத்தவும்,
மனிதன் கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்கவும் சில கற்பனைகளைகூறி சென்றனர்.
ஏனெனில்  மனிதன் மாபெரும் ஆற்றலை உடையவன்.
இந்த ஆற்றலை ஒழுக்கமாக பயன்படுத்தாவிட்டால் சமுதாயம் பாதிக்கப்படும்.
இதனால் அணைவருக்கும்  துன்பம் ஏற்ப்படும்
இந்த ஆற்றலை சீராகவும்,ஓழுக்கமாகவும் பயன் படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்
என்பதற்க்காகவும்,பக்குவம் அடைவதற்க்காகவும் ஆகும்.
இல்லையெனில் எல்லா உயிர்களும் , ஒன்றுக்கு ஒன்று ஆற்றலை தவறாக
உபயோகப்படுத்தி, அழிந்துவிடும் என்ற காரணத்தினால், மனிதனுக்கு
பயத்தை உண்டாக்க சிலகற்பனைகளையும்,கதைகளையும்  கூறினர்.
இதனை வைத்து சிலர் மக்களை ஏமாற்றி சுரண்டி வாழ்ந்து வந்தனர்.
மேலோட்டமாக சிந்தனை செய்த சாக்ரட்டீஸ் மற்றும் பகுத்தறிவுவாதிகள் பொங்கினர்.
முன்னோர்கள் கற்பனையாக கூறியதின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தவறான
அனுகு முறையை பின்பற்றினர்.
அதனால் முன்னோர்கள் வகுத்த சட்டத்தை கண்டித்தனர்.
இதனை அறைகுறையாக புரிந்து கொண்ட மக்களில் பலர் சட்டத்தை முழுவதும் விட்டு விலகி
மனம் போனபடியெல்லாம் வாழ்ந்து  தானும் அழிந்து தன்னைச்சார்ந்த சமுதாயத்தையும்  அழித்து
அணைவரும் நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்
அது என்ன?
எல்லோரும் எல்லாமும் சமம்
ஆனால் எல்லோரும் எல்லாமும் சமம் அல்ல
பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையில் அணைத்தும் சமமாக இருந்திருக்கலாம் பின்னர் ஒவ்வொன்றும்
சூழ்நிலைகளின் அமைவுகளுக்கு ஏற்ப்ப மாறுபாடு அடைந்திருக்கவேண்டும்.
அது எப்படி?
சமையலில் உணவு தயாரிக்கும்போது அரிசி,அடுப்பு,பாத்திரம், நெருப்பு ஆகிய அணத்தும்
பொதுவாக இருப்பினும், சாதத்தின் வேக்காட்டின் தன்மை ஒன்றாக இருக்காது. இருப்பினும்
நாம் ஒரு சாதத்தில் ஒரு அரிசியை மட்டும் எடுத்துப்பார்த்து விட்டு எல்லாம் ஒரேமாதிரி வெந்து
இருப்பதாக கருதிக்கொள்கிறோம். ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்று பழமொழியும் கூறுவோம்.  ஆனால் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு தான் இருக்கும்.
குறிப்பிட்ட நிலையைதாண்டி விட்டால் ஒன்றுக்கு ஒன்றின் வித்தியாசத்தை உணரமுடியாத நிலைக்குச் சென்றுவிடும்.
இந்த உண்மையை அவரவர் ஆய்வில் கண்டு கொள்க.

மின் சாதனங்கள் அணைத்தும் மின்சாரத்தினால் இயங்கினாலும்  எல்லா  மின்சாதனங்களும் ஒன்று அல்ல.
ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உள்ளது.
வாயு நிலையில் உள்ளவற்றிற்க்கும், திரவ, திட நிலையில் உள்ளவற்றிற்க்கும், ஒரே நிலையில்
இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உண்டு.
அறிவு எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஆசை எல்லோருக்கும் ஒரேமாதிரி ஏற்ப்படுவதில்லை.
   
     
ஆளுமைப்பண்பே ஆன்மா எனப்படும்.